Link copied!
Sign in / Sign up
7
Shares

தூக்கத்தில் ஏற்படும் குறட்டைப் பிரச்சனைக்கான தீர்வு

இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு இரவு உறக்கத்தில் குறட்டை ஏற்படும். இது அருகில் உறங்குபவரின் உறக்கத்தை கெடுக்கும். இதனால் பல குடும்பங்களிலும் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக குறட்டை என்பது உடல்நல பிரச்சனை. இது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது.  

குறிப்பாக சளி அல்லது மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான சப்தம் ஒலிக்கப்படும். மேலும் குறட்டையானது வயது, சைனஸ், அதிக உடல் உழைப்பு, அதிகப்படியான உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும். இங்கு குறட்டை பிரச்சனைக்கான தீர்வை பார்க்கலாம். 

1 உடல் எடை

உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதால் உடல் எடை அதிகரித்து குறட்டை பிரச்சனை ஏற்படும். இதனால், உடலில் பிரச்சனை ஏற்பட போகிறது என்பதற்கான அறிகுறி என்றே சொல்லலாம். உடல் எடை காரணமாக கழுத்து மற்றும் தொண்டை பகுதியில் அதிக சதை சேர்ந்து, நீங்கள் மூச்சுவிடும் போது குறட்டை சத்தத்தை உருவாக்குகிறது. சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு பழக்கத்துடன், உடற்பயிற்சியின் மூலம் இயற்கையான முறையில் உடல் எடையை குறைத்தால், இதிலிருந்து விடுபடலாம்.

2 தலையணை

தட்டையான சம நிலப் பரப்பில் படுக்கும் போது தொண்டை பகுதி சதையை தளர்த்தி, சுவாசிக்கும் போது காற்று செல்வதற்கான வழியை தடை செய்கிறது. படுக்கும் போது உயரமான தலையணையை உபயோகித்தால், குறட்டை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

3 பக்கவாட்டில் தூங்கவும்

இரவில் பக்கவாட்டில் படுத்து உறங்குவது சிறந்தது. இப்படி இரவு முழுவதும் படுப்பது சாத்தியம் இல்லை தான். இருப்பினும் இப்படி பக்கவாட்டில் படுத்தால், அது குறட்டையை தடுக்கும்.

4 நீராவிப் பிடிப்பது

ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.

5 புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று தான் குறட்டை விடுவது. ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.

6 மது

 

மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும்.

7 சளி

சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியாக சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.

8 நொறுக்கு தீனி / துரித உணவுகள்

இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.

குறட்டை பிரச்சனை இருப்பவரின் அருகில் உறங்குவோர்க்கு

கடைகளில் கிடைக்கும் ஓமத்தைலம் அல்லது கற்பூரவள்ளி தைலத்துடன் சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, சிறிதளவு விரலில் எடுத்து, குறட்டை விடும் நபரின் மூக்கில் அல்லது வாயின் வழியே செல்லும் சுவாசத்தில் வையுங்கள். அந்தத்தைலம் சுவாசத்தின் வழியே உள்ளே சென்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் தடைபட்ட சுவாசத்தை அதிவிரைவில் சரிசெய்யும்,. இதுபோல சில முறை செய்துவர, சில நிமிடத்தில் குறட்டை நீங்கும்.

குறிப்பு : உங்கள் விரல் குறட்டை பிரச்சனை இருப்பவரின் மூக்கின் மீதோ அல்லது வாயிலோ பட்டால், அது அவருக்கு அதிக எரிச்சலை கொடுக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon