Link copied!
Sign in / Sign up
31
Shares

தொங்கும் மார்பகங்களை கட்சிதமாக மாற்ற

பெண்களுள் பலர் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று, மார்பகங்கள் தொங்கி அசிங்கமாக காணப்படுவது. பெரிய மார்பகங்கள் பெண்களின் கவர்ச்சியை அதிகரித்து வெளிக்காட்டலாம். ஆனால் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிய முடியாமல் கஷ்டப்படுவார்கள். அழகிய ஆடை மற்றும் அதை அணிந்திருக்கும் பெண்களை கண்டு ஏக்கம் கொள்வார்கள். அது அவர்களை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தூண்டும். இது போல் பெரிய மார்பகங்கள் அசிங்கமாக தொங்கி காட்சியளிக்காமல் சிக்கென்று வைத்துக் கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் மார்பகங்களை சிக்கென்று வைத்துக் கொள்ள இயற்கை வழிகள் ஏராளமாக உள்ளது. இங்கு அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை சிக்கென்று வைத்துக் கொள்ள உதவும் சில மாஸ்க்குகளை பார்ப்போம்.

வெள்ளரிக்காய் மாஸ்க்

சிறிது தயிருடன், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, மார்பகங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவுடன், சிறிது தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து, மார்பகங்களில் தடவி நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் தளர்ந்த மார்பகங்கள் இறுக்கமடையும்.

தயிர் மற்றும் முட்டை மாஸ்க்

சிறிது தயிருடன், முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து, அத்துடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலின் எண்ணெயை சேர்த்து கலந்து, மார்பக பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகளை ஒரு வெள்ளை துணியில் வைத்து, மார்பகங்களில் 1 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.

ஆப்பிள் மாஸ்க்

ஆப்பிள் ஜூஸில், 1 கப் பால் சேர்த்து கலந்து, மார்பக பகுதியைச் சுற்றி தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

புளித்த தயிர் மாஸ்க்

நன்கு புளித்த தயிரை எடுத்து, அதோடு முட்டையின் மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, மார்பங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

அன்னாசி மாஸ்க்

அன்னாசி பழ பேஸ்ட்டுடன் 10 துளிகள் திராட்சை விதை எண்ணெய் சேர்த்து கலந்து, மார்பகங்களில் தடவி, பொருத்தமான பிராவை அணிந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். பின் திராட்சை விதை எண்ணெயைக் கொண்டு 2 நிமிடம் மார்பகங்களை மசாஜ் செய்ய வேண்டும்.

கேரட் மாஸ்க்

கேரட் ஜூஸை ஐஸ் கட்டிகளாக்கி (கேரட் ஜூஸ் உறைய செய்து) மார்பகங்களில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

காபி மாஸ்க்

சிறிது காபி பொடியுடன், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து பசையாக்கி, மார்பக பகுதியில் தடவி ஒரு வெள்ளைத் துணியால் மூடி ஒரு மணிநேரம் கழித்து, கழுவ வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon