Link copied!
Sign in / Sign up
6
Shares

தொடைச் சதையைக் குறைக்க என்ன வழி?

பெரும்பாலான மக்கள் தங்கள் உடலில் அதிகமாக சேர்ந்திருக்கும் சதையைக் குறைக்க முயன்று, அதற்கான சரியான வழி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களில் பலர் தங்கள் கைகளின் அடியில் மற்றும் தொடையில் சேர்த்திருக்கும் சதையை நினைத்தே அதிக கவலை கொள்கின்றனர். உங்கள் கவலையைப் போக்கும் வகையிலேயே, தொடைப் பகுதியில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகளை கீழே அளித்துள்ளோம்..! அவற்றை படித்து, செய்து பயனடையவும்..!

 

உடற்பயிற்சி முறைகள்..!

1. இரண்டு பாதங்களையும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும்

2. கட்டைவிரல் இரண்டும் முன்னோக்கி இருக்குமாறு, கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும் 

3. இடுப்பை இடமிருந்து வலமாக சுழற்றவும்; சுமார் 30 வினாடிகள் இதுபோல் இடுப்பை சுழற்றவும். பின், அடுத்த 60 வினாடிகள் அதேபோல் எதிர் திசையில், அதாவது வலமிருந்து இடமாக சுழற்றவும்

4. இதுபோல் 6 முறை செய்யவும்; இப்பயிற்சி செய்யும் போது பாதம் முழுதும் தரையில் அழுத்தமாக ஊன்றியிருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்

5. பின், அதேநிலையில் நின்றவாறு, வலதுபக்க இடுப்பை எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் முன்னோக்கித்தள்ளவும்; அதேநிலையில் இருந்தவாறு, இடுப்பை இடமிருந்து வலமாக 30 வினாடிகளும், பின் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும் சுழற்றவும்; சுற்றி முடித்தவுடன், மீண்டும் நேராக நின்று கொள்ளவும்

6. இப்பொழுது இடதுபக்க இடுப்பை அதே வகையில் முன்னோக்கித்தள்ள வேண்டும்; பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும், இடமிருந்து வலமாக 30 வினாடிகளும் சுழற்றவும்; முடித்தவுடன் மீண்டும் நேரான நிலைக்கு வந்து விடவும்

7. கால்களை நகர்த்தாது, இடுப்பை மட்டும் வலது புறமாக சுமார் 15 செ.மீ-20 செ.மீ வரை தள்ளவும்; இதேநிலையில் இருந்தவாறு, உடம்பை இடமிருந்து வலமாக 30 வினாடிகளும், பின் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும் சுழற்றவும்; அதை முடித்த பின்னர் இடுப்பை மீண்டும் நேரான நிலைக்கு கொண்டு வந்து விடவும்;

8. மேற்கூறிய செய்முறையை இடுப்பை இடதுபுறமாக தள்ளி முன்பு போல், செய்துவிடவும் 

9. இப்பயிற்சியை, இடைவெளி எதுவுமில்லாமல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்; எவ்வளவு தூரம் இடுப்பை சுழற்ற முடிகிறதோ அவ்வளவு சுழற்றினால் போதும், அதிக தூரம் சுழற்ற முடியவில்லையே எனும் கவலை வேண்டாம்; பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், நாளடைவில் சுழற்றும் தூரம் அதிகரித்துவிடும் 

ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதம்; ஆகையால் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உகந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலின் தேவையற்ற சதையைக் குறைத்து மகிழ்ச்சியுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்..! வாழ்க வளமுடன்..! 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon