Link copied!
Sign in / Sign up
3
Shares

தொடை மற்றும் இடுப்பின் பின்புற கருமையை நீக்க உதவும் 3 பொருட்கள்

இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருபாலரும் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மற்றவர்களின் முன் அவர்கள் அழகான தோற்றத்துடன் இருப்பது, அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்வதாகஉணர்கிறார்கள். வெளியில் தெரியாத பகுதியில் கூட கருமை இருப்பதாய் அவர்கள் விரும்புவதில்லை. தேவையற்ற அழுக்குகள் உடலில் சேர்வதாலும், கருமை ஏற்படும். இங்கு உடலில் தொடை மற்றும் இடுப்பின் பின்புற கருமையை நீக்க உதவும் 3 பொருட்களை பற்றி பார்க்கலாம்.

1 அரிசி மாவு

அரிசி மாவு இடுப்பின் பின்புறம் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள கருமையைப் போக்கும் தன்மையை கொண்டுள்ளது.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 2 தேக்கரண்டி

பால் - 3 தேக்கரண்டி

செய்முறை

1 ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து பசை போல் கலந்து கொள்ளவும்.

2 அதை கருமையாக உள்ள பகுதியில் தடவி மென்மையாக தேய்க்கவும்.

3 பத்து நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

2 சர்க்கரை

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் தங்கி இருக்கும் அழுகினால் ஏற்படும் கருமையை நீக்க சிறந்த பொருள் சர்க்கரை. இது சருமத்தின் மென்மை தன்மையை அதிகரிக்கிறது.

தேவையான பொருட்கள்

சர்க்கரை - 2 தேக்கரண்டி

தேன் - 4 தேக்கரண்டி

செய்முறை

1 ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேனை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

2 அதை கருமையாக உள்ள பகுதியில் தடவி மென்மையாக தேய்க்கவும்.

3 பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

3 ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு பழத்தின் தோல் அழகை பராமரிக்க உதவும் பண்புகளை அதிக அளவில் கொண்டுள்ளது. இதன் தோலில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி பொடி செய்து, கருமையை போக்க அதை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

ஆரஞ்சு தோல் பொடி - 2 தேக்கரண்டி

ரோஸ் வாட்டர் - 2 தேக்கரண்டி

செய்முறை

1 ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் ரோஸ் வாட்டரை பசை போல் கலந்து கொள்ளவும்.

2 அதை கருமையான தொடை மற்றும் பின்புற இடுப்பு பகுதியில் தடவவும்.

3 இருபது நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon