Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 6 மருந்துகள்...

ஒரு சிலர் நினைக்கும் விஷயம் என்னவென்றால், இன்னொரு குழந்தைக்கு இருக்கக்கூடிய நோய் அறிகுறிகள் தன் குழந்தைக்கும் இருப்பின், உடனே அதே மருந்தை கொடுத்தால் குணமடைந்துவிடும் என நினைப்பது தான். ஆனால், குழந்தைகள் விஷயத்தில் இது போன்று இருப்பது மிகவும் தவறான ஒரு விஷயம் என்பதை தாய்மார்கள் முதலில் உணர வேண்டும். ஒருவேளை நோய் அறிகுறிகள் ஒத்து போனாலும், இரு குழந்தைகளுக்கு இடைப்பட்ட வித்தியாசம் என்பது மருந்து எடுத்துக்கொள்ளும் விதத்திலும் மாறும். எனவே குழந்தைகளுக்கு மருந்து மற்றும் மாத்திரை கொடுப்பதில் மருத்துவரின் ஆலோசனை கண்டிப்பாக இருத்தல் வேண்டும். இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத மருந்துகளை படித்து பயனடையலாம் வாருங்கள்.

1. இன்னொரு குழந்தைக்கு பரிந்துரை செய்த மருந்து:

ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு உடல் குணாதிசயங்களுடன் பிறக்கும். உங்கள் குழந்தைக்கு ஒருவித காய்ச்சல் இருக்க, "என் மகனுக்கும் இதே போல் இருந்தது. இந்த மருந்தை கொடுத்தேன். சரி ஆகிவிட்டது." என மற்றவர்கள் கூறும்போது கண்டிப்பாக நீங்கள் ஒருமுறைக்கு நூறு தடவை யோசிக்க வேண்டும். காரணம், அது வேறு ஏதும் பிரச்சனையாக கூட இருக்கலாம். இல்லாவிட்டால் உங்கள் குழந்தை உடலுக்கு ஏற்ற சக்தியாக அந்த மருந்து இல்லாமல் இருக்கலாம். எனவே, கண்டிப்பாக இது போன்ற பரிந்துரையை ஒருபோதும் ஏற்காதீர்.

2. பெரியவர்களுக்கு பரிந்துரைத்த மருந்து:

எப்போதும் வயதுக்கு ஏற்றவாறே கொடுக்கப்படும் மருந்து என்பது அமையும். அதனால் அதிக டோஸேஜ் கொண்ட மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்க முயலாதீர்கள். குறிப்பாக, வீட்டில் எப்போதும் குழந்தைகளின் கைக்கு எட்டும் உயரத்தில் மற்றவர் மருந்து மாத்திரைகளை வைக்காதீர்கள்.

3. ஆஸ்பிரின்/ சாலிசிலேட் அல்லது அசிட்டில்சாலிசிலேட்:

ஆஸ்பிரின் என்பது அருமையான வலி நிவாரணி என்றாலும் இதில் அதிகளவில் மருந்தின் தன்மை இருக்கிறது. அதனால் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் கொடுப்பது மிகவும் தவறு. இதனால் குழந்தையின் வளர்ச்சிக்கே ஆபத்து. இந்த ஆஸ்பிரினை சாலிசிலேட் அல்லது அசிட்டில்சாலிசிலேட் எனவும் அழைப்பர். இதனால் நிதானம் குறைய, குழந்தைகள் பேச்சு, குழந்தை பேசும்போது திக்குவது என பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

4. ஐபுப்ரோபின் அதிகம் பயன்படுத்துதல்:

பரிந்துரை செய்யப்படாத அல்லது அளவுக்கதிகமாக ஐபுப்ரோபின் பயன்படுத்துவது மிகவும் தவறு. இந்த ஐபுப்ரோபின் வலி நிவாரணியாக விளங்கினாலும், மருத்துவரின் பரிந்துரை இன்றி குழந்தைகளின் கண்களுக்கு படும்படி வைக்கவும் கூடாது. இந்த மருந்தினால் இளம் குழந்தைகளின் கல்லீரலுக்கும் பேராபத்து. குறிப்பாக, டெங்கு காய்ச்சலின் போது இந்த மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனென்றால், இரத்த கசிவை கட்டுப்படுத்தும் தட்டுக்கள் அழியக்கூடும். 

5. சளி மற்றும் இருமல் மருந்து:

கடைகளில் விற்கும் மருத்துவர் பரிந்துரை அற்ற எந்த ஒரு இருமல் மற்றும் சளி மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அயல்நாட்டில் 2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இது போன்ற மருந்துகள் சட்டத்துக்கு புறம்பானதாக இருந்து வருகிறது. அத்துடன் எந்த வயதுக்கு உட்பட்டவராக இருப்பினும், தவறான அளவில் இந்த மருந்துகளை கொடுப்பதால் மிகப்பெரிய விளைவுகளை இதனால் ஏற்படுத்துகிறது. எனவே, மருத்துவரின் பரிந்துரை இன்றி இருமல் மற்றும் சளி மருந்துகளை எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்கு கொடுக்க முயலாதீர்கள்.

6. மெல்லும் வகை மாத்திரை:

இந்த மாத்திரைகளில் அதிகளவில் சர்க்கரை மற்றும் பெருமளவில் நச்சுத்தன்மையும் காணப்படுகிறது. எனவே மெல்லும் தன்மை கொண்ட மருந்துகள் அடங்கிய மாத்திரையை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon