Link copied!
Sign in / Sign up
33
Shares

திருமணத்திற்கு பின்னால் மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய, ஆண்களை பற்றிய 10 விஷயங்கள்..!

திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்த இருவேறு உள்ளங்கள், முற்றிலும் வேறுபட்ட மனிதருடன், வேறுபட்ட விருப்பங்கள் கூடியவருடன் தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்த பின்னரே, ஒருவரை பற்றி மற்றவர் அனைத்து விஷயங்களையும் அறியத் தொடங்குவர். அப்படி பெண்கள் திருமணத்திற்கு பின் ஆண்களை பற்றிய சில விஷயங்களை இந்த பதிப்பில் காணலாம்..! 

1. குப்பைக்கூளம்..!

திருமணமாகி ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கையில் தான், உங்கள் கணவர் வீட்டினை எவ்வளவு குப்பையாக்குகிறார் என்று தெரிய வரும். நீங்கள் என்னதான் பொருட்களை தகுந்த இடத்தில் அடுக்கி வைத்தாலும், நடக்கத் துவங்கிய குழந்தை போல், எல்லாவற்றையும் குப்பை போல் போட்டு வைப்பார், உங்கள் கணவர்..

2. குளிர்..!

உங்கள் கணவர், மின்விசிறி 5 ல் ஓடினாலும் காற்று போதவில்லை, என்று குளிரூட்டியையும் (AC) போட்டுக் கொண்டு உறங்குவார்; இப்பொழுது தான் அவர் அமெரிக்கா அல்லது அண்டார்டிகாவில் பிறந்திருக்க வேண்டியவர் என்ற உண்மை உங்களுக்கு தெரிய வரும்.

3. பாதுகாப்பு..!

உங்கள் வீட்டிலோ வெளியிலோ ஏதேனும் கதவைத் திறந்தாள், அதை முட்டும் பழக்கம் என்பது கிடையவே கிடையாது உங்கள் கணவருக்கு..! இது போன்ற குணம் உள்ள கணவர்களிடம் தான் பாதுகாக்கும் பொறுப்பினை அளிக்க வேண்டும்..,:) அப்படி அளித்தால் அவ்வளவு தான் உங்கள் சேமிப்புகள் அனைத்தும் சேதமாகிவிடும்..!

4. உணர்ச்சிகள்..!

உங்கள் கணவர் எவ்வளவு மென்மையானவர், எத்துணை உணர்ச்சிப் பூர்வமானவர் என்பதை நீங்கள் திருமணத்திற்கு பின் நன்கு அறியலாம்.

5. சோம்பேறி..

உங்கள் கணவரை போல், சோம்பேறியை இந்த உலகில் எங்கும் காண முடியாது; இதை உங்களால் திருமணத்திற்கு பின்னரே உணர முடியும். உலகின் மிகச்சிறந்த சோம்பேறி என்ற பட்டத்தை உங்கள் கணவருக்கு வழங்க, நீங்கள் சிபாரிசு கடிதம் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..:)!

6. கலாப காதலன்..!

உங்கள் கணவர் காதலில் விழுந்து, காதல் கடலில் உங்களைத் திணரச் செய்வதை திருமணத்திற்கு பின்னரே உங்களால் அறிய முடியும். அப்பொழுது அறிவீர்கள் உங்கள் கணவர் எவ்வளவு பெரிய காதல் மன்னன் என்று..!

7. இல்லையே இந்த பழக்கம்..!

பொருட்களை அடுக்கி வைத்திருந்தால், அதை குலைப்பதில் உங்கள் கணவருக்கே முதல் பரிசு. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கம் உங்கள் கணவருக்கு இல்லை என்ற உண்மையை நீங்கள் திருமணத்திற்கு பின்னரே உணருவீர்கள்..

8. குளியலறை..!

எப்பொழுது குளியறைக்குள் சென்றாலும், எதையாவது செய்து, தரையை ஈரமாக்கி விட்டுத்தான் வெளியேறுவார், உங்கள் காதல் மன்னர்.தரையை காயவே விடமாட்டார்.

9. சிறுவயது புகைப்படங்கள்..!

தன் சிறுவயது புகைப்படங்களை பொக்கிஷமாய் சேகரித்து, உங்களிடம் காட்டி தன் நினைவுகளை உங்களுடன் பகிர்வதில் அளவற்ற ஆனந்தம் கொள்வார் உங்கள் கணவர்..!

10. உணவு..!

நீங்கள் சமைக்கும் உணவு எப்படியிருந்தாலும், அதை நன்றாக இருக்கிறது என்று கூறி உங்களை பாராட்டுவார்; மேலும் உங்கள் கைகளில் உள்ள உணவுகளை பிடுங்கி உண்பதில் அளவற்ற இன்பம் கொள்வார், உங்கள் கணவர்.

இதில் உங்கள் கணவரை பற்றி, திருமணத்திற்கு முன் அறியாத, பின் நீங்கள் அறிந்து கொண்ட விஷயத்தை comment செய்யவும். உங்கள் அன்புடன் சேர்த்து, இந்த பதிப்பினை நண்பர்களுடன் பகிரவும்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon