Link copied!
Sign in / Sign up
2
Shares

திருமணத்திற்கு பின், முன்னால் காதலை கையாள உதவும் 5 வழிகள்..!

உலகில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் முதல் காதல் அனுபவம் கட்டாயம் ஏற்பட்டிருக்கும்; சிலருக்கு முதல் காதலே கைகூடி வாழ்க்கை இன்பமயமாக மாறியிருக்கும்; சிலருக்கோ முதல் காதலில் தோல்வி ஏற்பட்டு, வாழ்க்கை சில வழுக்கல்களுடன் சென்றிருக்கும்.

இம்மாதிரியான தருணத்தில் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்த பின்னும், தமக்கு ஏற்பட்ட முன்னால் காதல் அனுபவங்களை மறக்க இயலாமலோ அல்லது அக்காதலனையோ, காதலியையோ நேரில் காணும் போதோ, மனதில் ஏற்படும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது பிரம்ம பிரயத்தனத்திற்கு இணையானது. இவ்விஷயத்தில் உங்கள் முதல் காதலைக் கையாள உதவும் எளிய வழிகளை இந்த பதிப்பின் வாயிலாக உங்களுக்கு அளிக்கிறோம்..

1. எல்லை..!

என்னதான் நீங்கள் முன்னர் காதலித்திருந்தாலும், இப்பொழுது தாம் திருமணமானவர் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் உணர்ச்சிகளுக்கு அணையிடுங்கள். நமது பாரம்பரிய, கலாச்சாரத்தின் படி, தாலிக்கும், திருமண பந்தத்திற்குமான முக்கியத்துவத்தை அளியுங்கள். உணர்ச்சிகளை வென்று, நேர்மையான முறையில் வாழ்க்கை நடத்துங்கள்.

2. இதுவும் கடந்து போகும்..

இந்த உலகில் எதுவும் நிலையில்லை. ஆகையால், உங்கள் மனதில் இடம்பெறும் தேவையற்ற எண்ணங்களில் இருந்து, மனதை திசை திருப்பி, கடந்தகாலத்தில் வாழாமல், நிகழ்கால வாழ்வின் நிதர்சன உண்மையை உணர்ந்து வாழத்தொடங்குங்கள்..!

3. இரகசியம்..

உங்கள் முன்னால் காதலை பற்றி உங்கள் துணையிடம் கூறுவதும் அல்லது அதை இரகசியமாக வைத்துக் கொள்வதும் உங்கள் மனோதைரியம் மற்றும் துணையின் குணத்தைப் பொறுத்தது. இவ்விஷயத்தில் சிந்தித்து செயலாற்றுங்கள்..

4. முடிவு..

உங்கள் பழைய காதலை விடாது தொடர்வதும் இல்லையேல் முடிவுகட்டி, திருமண வாழ்வில் முழு மனதுடன் நேர்மையுடன் ஈடுபடுவதும் உங்கள் கையிலே உள்ள முடிவாகும். ஆகையால், யோசித்து சரியான முடிவினை எடுங்கள்..!

5. காதல்…

காதல் என்ற வலையில் விழாத மனிதர்கள் இல்லை; நீங்கள் எவ்வாறு காதலித்தீரோ அதே போல் தான் உங்கள் காதலரும் உங்களை காதலித்திருப்பார். ஆனால், தனக்கென்று புது வாழ்க்கை தொடங்கியவுடன், பழைய நினைவுகளுக்கு மனதில் இடம் கொடாது, எவ்வாறு விதிக்கப்பட்ட புதிய வாழ்க்கையை நடத்துவது என்று தான் உங்கள் பழைய காதல் சிந்திக்கும். இந்த சிந்திக்கும் குணத்தை அக்காதலிடம் இருந்து கற்றுக்கொண்டு, புது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக ஈடுபட முயலுங்கள் நண்பர்களே..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon