Link copied!
Sign in / Sign up
12
Shares

திருமணத்திற்கு முன்னால், மணமக்கள் தெரிந்திருக்க வேண்டிய 7 விஷயங்கள்..!

 
உங்கள் திருமணத்தில், நீங்கள் தான் ராஜா-ராணி; திருமணம் என்பது வாழ்க்கையின் வாழ்வு, தொடங்கும் கட்டம் எனலாம். அத்தகைய திருமணத்தின் போது, மணமக்கள் மிகவும் சரியாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், முதலே கோணாலாகி விட்டால், முற்றும் கோணாலாகிவிடும்.
 
ஆகையால், திருமணத்திற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி காண்போம்..!
 
1. உடல் பருமன்..!
 
திருமணம் வாழ்வின் முக்கிய கட்டம். அதில் மணமக்கள் இருவரும் மிக அழகாக இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் எடை அதிகமுள்ளவராக இருந்தால், எடையைக் குறைக்க முயற்சி செய்வது நல்லது. திருமணத்திற்கு முன்னரே சில உடற்பயிற்சிகளை செய்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்..!
 
 
2. முக அழகு..!
 
வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே நிகழும் திருமணத்தில், மணமக்கள் அழகான முகப் பொலிவுடன் இருப்பது நலம். எனவே, உங்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்ளுங்கள்.
 
உங்களது முகத்தில் உள்ள மாற்றங்கள் உங்களது கண்களில் தான் நன்றாக தெரியும். எனவே முகம், கை, கால்கள், உடல், கூந்தல் என அனைத்தையும் அழகுபடுத்திக்கொள்ள மறக்க வேண்டாம்.
 
3. அழுகை, கவலை வேண்டாம்..!
 
திருமணத்திற்கு 5 நாட்கள் முன்னால் வெயிலில் சுத்துவது, மன அழுத்தத்துடன் இருப்பது, அழுகை, தூக்கமின்மை போன்றவை உங்களது முகத்தை அதிகமாக பாதிக்கும். இதனால் திருமணத்தன்று உங்கள் முகம் கலையிழந்து காணப்படும்.
 
ஆகையால், தேவையற்ற அலைச்சல், கோபம், கவலை, வருத்தம் இவற்றை தவிர்ப்பது நல்லது.
 
4. திருமண அழைப்பிதல்..!
 
உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று நினைத்தால், முன் கூட்டியே அவர்களது பெயர்களை மறக்காமல் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...!
 
ஏனெனில், நீங்கள் உங்களுடன் பழகியவரை, அழைக்க மறந்தால் அது அவருக்கும் உங்களுக்கும் சிறு மனவருத்தத்தை அளிக்கும்.
உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் படை சூழ, கூடி நடத்தப்படும் திருமணம் எல்லையற்ற இன்பத்தைத் தரும்.
 
 
5. விருந்தினர் கவனிப்பு.!
 
உங்கள் திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களை கவனிக்க வேண்டியது உங்களது கடமை. இரவில் அவர்கள் ஓய்வெடுக்க தகுந்த ஏற்பாடு செய்து கொடுங்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். எந்தவித அசௌகரியங்களும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
 
6. மகிழ்ச்சியாக இருங்கள்!
 
உங்கள் திருமணம் முழுக்க முழுக்க உங்களுக்கான ஒன்று. எனவே நீங்கள் உங்களது திருமணத்தன்று சந்தோஷமாக இருங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை செய்யுங்கள். மனம் திறந்து உற்சாகமாக பறக்க வேண்டியது உங்களது கடமையாகும்.
 
 
7. நன்றி சொல்லுங்கள்..
 
உங்களது திருமணத்திற்கு பலர் உதவி செய்து இருப்பார்கள். உடைகளை வடிவமைப்பது, உங்களை அழகுப்படுத்தியது என உங்களது சொந்தங்களும், நண்பர்களும் பல உதவிகளை செய்து இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அல்லது ஏதேனும் பரிசை கொடுங்கள். இது அவர்களை ஆனந்தப்படுத்தும்.
 
இந்த 7 விஷயங்களை, ஒருவர் மறக்காது திருமணத்திற்கு முன் செய்வாராயின், அவரை விட சந்தோஷசாலி வேறு எவரும் இலர்.
Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon