Link copied!
Sign in / Sign up
13
Shares

திருமணத்தில் தாலி காட்டுவது ஏன்?

ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் முக்கிய சடங்கான திருமணத்தில், முக்கிய பங்கு வகிப்பது தாலி கட்டும் நிகழ்வு. இந்த தாலி பெண்ணின் கழுத்தில் கட்டப்பட்டு, நெற்றி வகிட்டில் குங்குமம் இடப்பட்டால் மட்டுமே தம்பதியரின் திருமணம் முழுமையடைகிறது. அப்படிப்பட்ட தாலியின் முக்கியதத்துவம் மற்றும் அது ஏன் காட்டப்படுகிறது என்பது குறித்து இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

தாலி..!

தாலி எனும் புனித நூலினை, ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்க வேண்டும்; ஒவ்வொரு வருடமும் தாலியான புனித நூலினைப் புதுப்பிக்க வேண்டும். இன்றைய சூழலில், அந்நடைமுறை வழக்கத்தில் இல்லை; தாலி எனும் பெயரில் தடிமனான தங்க சங்கிலி போடப்படுகிறது; நூலில் தான் தாலி இருக்க வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட முறையிலான பருத்தி நூலாகவோ இல்லையேல் பட்டு நூலாகவோ இருக்க வேண்டும்.

ஆன்மிகக் காரணம்..!

தாலி எனும் புனித நூல், சம்பந்தப்பட்ட இருவரின் சக்தி நிலைகளைப் பயன்படுத்தி, நம்மை செய்யும் ஆன்மிக நோக்கத்தில் உருவாக்கப்படுகிறது. பெண்ணின் ஒரு குறிப்பிட்ட நாடியையும், ஆணின் குறிப்பிட்ட நாடியையும் (சக்தி நிலை) பயன்படுத்தி, அப்புனிதநூல் ஓர் குறிப்பிட்ட வழியில் தயாரிக்கப்பட்டு பின்பு அணிவிக்கப்படும்.

அதன்பின், ஆணும் பெண்ணும் உடலளவில் இணையும்போது, அது அவ்விரு உடல்களின் இணைப்பு மட்டுமல்ல; இருவரின் சக்தி நிலையும் பின்னிப்பிணைந்த சங்கமமாக இருக்கும்; இந்த சக்தி நிலைப் பிணைப்பு சாதாரணமானது அல்ல. 

முக்கியத்துவம்..!

இவ்வாறு உருவாக்கப்படும் இணைப்பை, உறவை சாதாரணமாக முறிக்க முடியாது; அப்படியும் வலிய முறித்தால் அக்குறிப்பிட்ட இருவருக்கும் மிகவும் மோசமான விளைவுகள் உண்டாகும். இவ்வாறே முன் காலத்தில் விவாஹங்கள் நடத்தப்பட்டன. அவ்வுறுதியான பிணைப்பு கதம்பதியருக்கு, ஒரு அபரிமிதமான சக்தியைக் கொடுத்தது. அவர்களின் சக்தி சமநிலையுடன் இருந்ததால் தான், தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய நினைக்கிறார்களோ, அதை எந்தவித மனச்சிதறலும் இல்லாமல் அவர்களால் செய்ய இயன்றது.

தன்னை விட்டுப்பிரிந்து விடுவாரோ/விடுவாளோ என்பது போன்ற பாதுகாப்பற்ற தன்மையால் தம்பதியர்கள் பாதிக்கப்படவில்லை; அந்த அளவிற்கு தம்பதியர்களிடம் உறுதியான பிணைப்பு இருந்தது; ஆனால், தற்போது மங்கள் சூத்திரம் என்பது வெறும் சடங்காகிவிட்டது. இன்றைய காலத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற தன்மை இந்தியாவிற்கும், இன்றைய இளைய தலைமுறைக்கும் மிகமிகப் புதிது.

வாழ்க்கையில் நாம் செய்ய நினைப்பதை பயமோ, பாதுகாப்பற்ற தன்மையோயின்றி உறுதியுடன் செய்து முடிக்க இயலும்; இதுவே ஆண் மற்றும் பெண்ணின் வெற்றிக்கும் காரணமாக விளங்கியது. தம்பதியர் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வாழ்வில் ஜெயித்துக்காட்டவே, திருமணம், தாலி எல்லாம் உருவாக்கப்பட்டது.

அறிவியல் காரணம்..!

பெண்ணின் மார்புக்குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது; இக்குழி ஆண்களில் காணப்படுவதில்லை; இந்நரம்பு முடிச்சு மூளையில் பேசல் ரீஜன் பகுதியோடு தொடர்பு ஏற்படுத்தும் பணியை செய்யும். இந்நரம்பு பாதை, பெண்ணுக்கு 2 நரம்புகள் கொண்ட பாதையாகவும், ஆணுக்கு 1 நரம்பு கொண்ட பாதையாகவும் இருக்கிறது. இதன் காரணமாகவே, ஆணைவிட பெண்ணுக்கு அதிக நியாபக சக்தியை உருவாக்குகிறது.....!

இந்த அதிக சக்தியால் ஆணைவிட பெண்ணுக்கு சில குழப்பங்களும் உண்டாகின்றன; பொதுவாக பெண் ஒரு விசயத்தில் ஒரு முடிவு எடுத்துவிட்டு பின், அதனால் குழப்பம் அடைவதற்கு இதுவே காரணம்.....!

இவ்வாறு பெண்களுக்கு குழப்பம் ஏற்படுவதைக் கண்டறிந்தபின், அதைக் குணப்படுத்த என்ன வழியுள்ளது என்று சிந்தித்த போது, உலோகங்களின் நினைவு தோன்றியது. அதன்படி ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு மருத்துவ குணமுண்டு என்று கண்டறியப்பட்டது; அதன் படி தங்கத்திற்கு இருக்கும் மருத்துவ குணத்தைக் கண்டறிந்து, அந்தத் தங்கம் பெண்ணின் மார்புக்குழியில் எப்பொழுதும் உரசிக் கொண்டிருந்தால், அது பெண்ணிற்கு நன்மை தரும் என "தாலி" முறையை நடைமுறைப்படுத்தினர், முன்னோர். அவ்வகையில் தாலியானது, சரியாக மார்புக்குழிக்கு வரவேண்டும் என 3 முடிச்சு போட்டால், தாலி சரியாக மார்புக்குழியில் வரும் என்று கணக்கிட்டு, தாலி முறையை அறிமுகப்படுத்தியாக ஒரு கதை நிலவி வருகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon