Link copied!
Sign in / Sign up
3
Shares

திருமணத்திற்கு பிறகு ஏற்படும் நெருக்கம் தொடர்பான 7 பிரச்சனைகள்

நாம் நினைப்பதை போல் திருமணத்திற்கு பிறகு அனைத்து விஷயங்களும் நடக்காது. குழந்தைகள், வேலை, மன அழுத்தம் என நீண்டு கொண்டே இருக்கும். திருமணமான தம்பதிகள் அனைவரும் ஒரு முறையாவது இந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து தான் வந்திருப்பார்கள். ஆனால் உங்களின் திருமண உறவு நிலைத்து இருக்க, உங்கள் துணையுடனான நெருக்கம் குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இது உடல் ரீதியாக மட்டுமல்ல உணர்வு ரீதியாகவும் தான். இவையெல்லாம் இல்லாமல் இருந்தால், உங்களின் திருமணம் ஒரு ஒப்பந்தத்திற்கு சமமாகும். இங்கு, திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்குள்  ஏற்படும் நெருக்கம் தொடர்பான 7 = பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம்.

1 மனநிலை

உங்களின் வாழ்க்கை, சாப்பிடுவது-தூங்குவது-வேலை செய்வது என ஒரே சக்கரமாக சுழன்று கொண்டிருக்கும்போது, உங்கள் துணையுடன் நெருக்கமாக இருப்பது கடினமான ஒன்று. உங்களுக்கு என்று சிறிது நேரம் கிடைத்தாலும், நீங்கள் ஓய்வெடுக்க தான் நினைப்பீர்களே தவிர, உங்கள் துணையுடன் நேரம் செலவிட மனது வராது.

2 குறையும் ஈர்ப்பு

உங்கள் வாழ்நாள் முழுவதையும் உங்கள் கணவருக்காக செலவழிக்க போகின்றீர்கள். ஆனால் அவரோ, நீங்கள் இருவரும் முதல் முறை சந்தித்ததை போலவே இப்போதும் இருக்கமாட்டார். ஆனாலும், நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்பொழுது, உங்கள் இருவருக்கும் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படும். எனவே, அவரது கவனத்தை உங்கள் மீது திருப்ப வேண்டும் என்றால், நீங்களும் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் துணைக்காக சிறிது அலங்கரித்துக் கொள்ளுங்கள், அவருடன் நேரம் செலவிடுங்கள்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் துணையிடம் உங்களுக்கு ஈர்ப்பு வரவில்லை என்றால், அதற்கு அவர் மீது உங்களுக்கு காதல் இல்லை என்று அர்த்தம் கிடையாது.

3 துரோகம்

திருமண பந்தம் என்பது நம்பிக்கையை அடித்தளமாக கொண்டு கட்டப்பட்ட பாலமாகும். உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவில் துரோகம் செய்வதும் மிக பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் துணை உங்களுக்கு துரோகம் செய்வார் என அஞ்சினால், அவரிடம் மனம் விட்டு பேசுங்கள். மனதிலே கோபத்தை வளர்த்து வந்தால் அது சூழ்நிலையை மென்மேலும் மோசமாக்கும்.

4 சிறு சிறு சீண்டல்கள்

திருமணமான புதிதில் இருப்பது போல் பல விஷயங்கள் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். உங்களின் துணை முன்பு போல், மலர்களையோ அல்லது பரிசுகளையோ அல்லது பாராட்டுகளையோ தராமல் இருக்கலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் சௌகரியமாக உணர்வதால், இந்த மேல்பூச்சுகள் எல்லாம் தேவை இல்லை என்று உங்கள் துணை நினைக்கலாம். ஆனால், சின்ன சின்ன சீண்டல்கள், விளையாட்டுகள் இல்லையென்றால், அந்த ஏமாற்றம் படுக்கையறையில் தான் பிரதிபலிக்கும்.

5 பெற்றோராதல்

உங்களுக்கு குழந்தை பிறந்த பின், உங்கள் கணவருடன் மிக குறைந்த நேரமே உங்களால் செலவிட முடியும். குழந்தைகளை கவனித்துக் கொள்ளவே உங்களின் சக்தி மற்றும் நேரம் போய்விடும் என்பதால், இரவு படுக்கைக்கு வரும் பொழுது நீங்கள் மிகவும் சோர்ந்து போய்விடுவீர்கள்.

இதற்கு தீர்வாக, வாரத்திற்கு ஒரு நாள் இரவாவது உங்கள் கணவருடன் செலவளிக்குமாறு திட்டமிடுங்கள். இந்த திட்டத்திற்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெளியே செல்லும் போது குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஒருவரை நியமிக்கலாம் அல்லது குழந்தையின் தாத்தா பாட்டியிடம் விட்டுச் செல்லுங்கள்.

6 சரியான பேச்சுவார்த்தை இல்லாதது

சரியான பேச்சுவார்த்தை இல்லாதது, மேலும் தவறான புரிதல், உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையே மிக பெரிய இடைவெளியை உருவாக்கிவிடும். உங்களின் ஆசை மற்றும் கற்பனைகளுக்கு குரல் கொடுங்கள். உங்கள் மனதில் உள்ளவற்றை எல்லாம் உங்கள் கணவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர் என்னதான் உங்களை புரிந்துகொள்ள கூடிய நபராக இருந்தாலும், உங்கள் மனதில் உள்ள அனைத்தையும் அவரால் தெரிந்துகொள்ள முடியாது.

7 உடலுறவு

தொலைக்காட்சிகளிலும் படங்களிலும் காட்டுவதை போல், நெருக்கமான தருணங்கள், நிஜ வாழ்க்கையில் அமைவது மிகவும் கடினம். உடலுறவு என்பது நிஜ வாழ்வில் அசௌகரியமாகவும், மோசமாகவும் இருக்கலாம். இதனால் மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்கள் துணையின் விருப்பு வெறுப்புகளை புரிந்துகொள்ள சில நாட்கள் ஆகும். ஆனால் இதையெல்லம் கடந்து வந்துவிட்டால், உங்களின் வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon