Link copied!
Sign in / Sign up
204
Shares

திருமணத்தின் பின் கிடைக்க பெறாத 7 விஷயங்கள்

ஒரு பெண் திருமணத்திற்கு முன் அவள் வீடு என்று உரிமையுடன் சொல்வது, திருமணத்தின் பின் தாய் வீடாகி போகிறது. அந்த வீடு நான்கு சுவர் கொண்டதாக இருந்தாலும், அதனுள் அவள் அன்பு, மகிழ்ச்சி, துன்பம், அழுகை மற்றும் அரவணைப்பு என அனைத்தும் அதில் அடங்கும். திருமணம் எனும் பந்தத்தில் இணையும் பெண்கள் பலவற்றை இழக்க வேண்டியிருக்கிறது. அப்படி அவர்கள் திருமணத்தின் பின் இழக்கும் 7 விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம். 

1 அம்மாவின் சமையல்

உங்கள் அம்மா சமைக்கும் உணவுகளை நீங்கள் கண்டிப்பாக இழந்ததாக உணர்வீர்கள். ஏனெனில், திருமணத்தின் பின் நீங்கள் சமையல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். என்னதான் நீங்கள் சுவையாக சமைத்தாலும், உங்கள் அம்மாவின் சமையல் உங்களுக்கு தேவாமிர்தமாக தோன்றும். உங்களுக்கு அவள் அன்புடன் பரிமாறுவது, உணவின் சுவையை மாற்றி கொடுக்கும். உங்கள் வீடு உங்களுக்கு சொர்க்கமாக தோன்றும்.

2 காலை உறக்கம்

உங்கள் திருமணத்தின் பின் நீங்கள் அதிகாலை எழுந்திருக்க வேண்டும். அனைவரையும் எழுப்பி அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும். ஆனால் உங்கள் வீட்டில் உங்கள் அம்மா உங்களை அன்புடன் எழுப்பி அனைத்தையும் செய்வார்கள். விடுமுறை நாளாக இருந்தால் நீங்கள் எவ்வளவு தாமதமாக வேண்டுமானாலும்  எழலாம்.

3 உங்களின் உடன்பிறப்புகள்

சகோதர, சகோதரிகளை நீங்கள் பிரிந்ததை உணர்வீர்கள். உங்களுடைய சிறந்த நண்பர்கள் மற்றும் எதிரிகள் இரண்டுமே உங்கள் உடன்பிறப்புகள் தான். அவர்களின் காலை எழுந்தது முதல் சண்டையிடுவது, அரட்டை அடிப்பது, கேலி செய்வது என அனைத்தையும் இழந்திருப்பீர்கள். அவர்கள் உங்களுக்கு கொடுத்த தொல்லைகள் மற்றும் உங்கள் அம்மாவிடம் உங்களை போட்டு கொடுத்திருந்தாலும், எல்லாம் இன்று சுகமாய் தோன்றும்.

4 தந்தையின் அறிவுரை

இந்த உலகமே உங்களுக்கு எதிராக நின்றாலும், உங்களுக்காக அவர்களுக்கு எதிராக நின்று போராடுவார். உங்கள் பிரச்சனைகளின் போது உங்கள் அருகில் அமர்ந்து அதை நிதானமாக கையாண்டு எப்படி அதை சரி செய்ய வேண்டும் என்று உங்கள் தந்தை அறிவுரை வழங்கி இருப்பார். இப்பொது அவற்றை நீங்களே சரி செய்ய  வேண்டிய நிலை வரும். இப்பொது நீங்கள் உங்கள் தந்தையை நினைத்து ஏங்குவீர்கள்.

5 வேலை செய்ய வேண்டியதில்லை

உங்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் உங்கள் அம்மா செய்திருப்பார். நீங்கள் இளவரசி போல இருந்திருப்பீர்கள். ஆனால் இப்பொது உங்கள் புதிய வீட்டில் பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது, வீடு சுத்தம் செய்வது, சமைப்பது மற்றும் பல வேலைகளை கூட நீங்கள் ஒருவராய் செய்ய வேண்டிய நிலை வரும். அப்பொழுது நீங்கள் உங்கள் வீட்டில் எப்படி இருந்தீர்கள் என்பதை நினைவுகூர்வீர்கள்.

6 பொருளாதார பொறுப்புகள்

உங்கள் செலவுகள் வரையறுக்கப்படும், வீட்டுக்கு மாதத்திற்கான பொருட்கள் வாங்குதல், தொலைபேசி கட்டணம், மின்சார கட்டணம் போன்றவற்றை செலுத்துதல் என அனைத்திற்கும் பணம் செலவிட்டு  போது பற்ற குறை ஏற்படும். அப்போது உங்களுக்கு பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கும். அப்போது உங்கள் தாயின் புலம்பல் ஞாபகம் வரும்.

7 நீங்கள் நீங்கலாக இருப்பது

உங்கள் வீட்டில் இருந்த போது நீங்கள் உங்களுக்கு பிடித்தாற்போல் இருந்திருப்பீர்கள். உங்கள் பெற்றோரும் அதையே விரும்பி இருப்பீர்கள். ஆனால் இங்கு யாருக்காகவோ, ஏன் உங்கள் கணவருக்காக கூட உங்கள் மாற்றி கொள்ளும் நிலை வந்திருக்கும். நீங்கள் எவ்வளவு சுவையை உணவு தயாரித்தாலும், அதற்கு நீங்கள் தகுதி இல்லை என்பதை போல இருக்கும். நீங்களே உங்களை பற்றி மறந்து போயிருப்பீர்கள். உங்கள் திறமைகள், பொழுதுபோக்குகள் மற்றும் பல விஷயங்களை மறந்து மாறியிருப்பீர்கள்.

மேற்குறிப்பிட்டவை திருமணத்தின் பின் மாறாமல் இருப்பதில்லை. இதில் எந்த தவறுகளும் இல்லை. இந்த உலகில் மாற்றம் மட்டுமே மாறாமல் இருக்கும் ஒன்று. என்னதான் உங்கள் குடும்பத்தை பிரிந்தாலும் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொள்கிறீர்கள் தானே. அவர்களை போல் நீங்களும் ஒரு குடும்பத்தை உருவாக்கி கொண்டிருக்கிறீர்கள். எப்போதெல்லாம் உங்களுக்கு பார்க்க வேண்டும் போல இருக்கிறதோ அப்போதெல்லாம் உங்கள் வீட்டிற்கு சென்று வாருங்கள்!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
50%
Wow!
50%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon