Link copied!
Sign in / Sign up
1
Shares

திருமணமான பெண்களுக்கு மார்பக புற்றுநோயா??

பெண்கள் தங்கள் கைகளினால் மார்பகத்தை அழுத்திப்பார்க்க வேண்டும்; ஏதேனும் கட்டி போன்று தென்பட்டாலோ அல்லது மார்பகத்தில் வலி இருந்தாலோ, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது; மேலும் மார்பகக்காம்புகளில் நீர் அல்லது ரத்தம் வடிந்தாலும் மிகவும் ஆபத்தே. சில பெண்களுக்கு கட்டி இருந்து, வலியில்லை எனினும் அபாயமே; ஆகையால், இத்தகு மார்பக புற்றுநோய் அபாயத்திற்கான தீர்வு தான் என்ன என இப்பதிப்பில் படித்தறியலாம்..!!

பெண் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை 2 வழி முறைகளில் அறியலாம். ஒன்று, சுய பரிசோதனை; மற்றோன்று, மேமோகிராஃபி பரிசோதனை.

மேமோகிராஃபி கருவி மற்றும் பரிசோதனை

மேமோகிராஃபி என்பது முலை ஊடு கதிர்ப் படம்; இந்த இயந்திரத்தில் தட்டு ஒன்று இருக்கும். அதன் மீது  மார்பகத்தை வைக்கவும்; பின்னர் மார்பகத்தின் மீது ஓர் அழுத்தும் கருவி வைக்கப்படும்; இவ்வாறு அழுத்தம் கொடுப்பதால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திசுக்களை தெளிவாகக்காண முடியும்.

பல கோணங்களில் மார்பகத்தைப் படம்பிடித்து ஆராய்தல் வேண்டும்; இம்முறையில் அளிக்கப்படும் அழுத்தம் காரணமாக, பெண்ணுக்கு அதிக அளவில் வேதனை ஏற்படும்; இதனால் பெண்களில் பலர், மேமோகிராஃபி பரிசோதனை என்றாலே பயந்துபோய், அதைத் தவிர்த்து விடுவார்கள்.

இந்த ஊடு கதிர்களால், ஆபத்து விளையுமோ என அச்சப்படத் தேவை இல்லை; இக்கதிர்களின் அபாயத் தன்மை மிகக் குறைவு. மேலும், இப்பரிசோதனை முழுக்க பெண்களால் மட்டுமே செய்யப்படுவதால், கூச்சப்படவும் அவசியமில்லை. அயல் நாடுகளில் 6 மாதங்களுக்கு ஒருமுறை, பெண்கள் அனைவரும் மேமோகிராஃபி பரிசோதனை செய்து கொள்கின்றார்கள்; ஆகையால், மார்பகப்புற்றுநோய் ஏற்பட்டால், அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரி செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வெற்றி வாய்ப்பு..

மார்பக புற்றுநோய்க்கு தொடக்கத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 95% உறுதி; தாமதமாகக் கண்டறிந்தால், முதலில் மார்பகத்தை முழுவதுமாக எடுக்க வேண்டிவரும்; பின் எலும்புகள் வரை புற்றுநோய் பரவியிருந்தால், உயிர் பிழைப்பது மிகவும் கடினம்!

மார்பகத்தில், ஒரு பக்கம் புற்றுநோய் ஏற்பட்டால், இன்னொரு பக்கமம் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். எனவே, மார்பகப்புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து கொள்பவர்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இள வயதினர்..!

இளம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்குதல் மிகவும் குறைவாகவே உள்ளது; அவர்களில், மார்பகத்தில் வீக்கம் ஏற்படுவதை, ப்ரீஸ்ட் லம்ப் என்று கூறுவர். இதை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் கண்டறிந்து விட முடியும்; தேவையெனில் மேமோகிராஃபி மேற்கொள்ளலாம். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குத்தான் இந்நோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே, திருமணமான பெண்கள் சுய பரிசோதனையை, மாதம் ஒருமுறை மேற்கொள்வது நல்லது; ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். வயதான பெண்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரை சந்தித்து மேமோகிராஃபி பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியமானது, இது மார்பகப்புற்றுநோயை விரைவில் கண்டறிந்து அதில் இருந்து தப்புவதற்கான வழியுமாகும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon