Link copied!
Sign in / Sign up
1
Shares

திருமணமான தம்பதிகள் குறித்த 5 உண்மைகள்

நாம் திருமணம் செய்துகொள்ளும் நாள் குறித்து பல ஆசைகளையும் கனவுகளையும் வைத்திருப்போம். திருமண வாழ்க்கை குறித்தும் பல எதிர்ப்பார்ப்புகளை வைத்திருப்போம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்காது. திருமண வாழ்க்கையில் உங்களின் எதிர்ப்பார்ப்புகளை மீறி சில விஷயங்கள் நடக்கும். சில நேரங்களில் அவை உங்களுக்கு மகிழ்ச்சி தரலாம் அல்லது ஏமாற்றங்களையும் தரலாம். இங்கு கொடுக்கப்பட்டு இருக்கும்  விஷயங்களில் ஏதாவது ஒன்றாக கூட இருக்கலாம்.

1 தேனிலவு

தேனிலவு நாட்கள் விரைவில் முடிந்துவிடும். திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கமும் மகிழ்ச்சியும், போக போக குறைந்து கொண்டே வரும். அதாவது, உங்கள் கணவர் உங்கள் பின்னால் சுற்றுவது குறைந்துவிடும். அதுவும் ஒரு குழந்தை பிறந்து விட்டால், இவை அனைத்துக்கும் இடைவேளை கிடைக்கும். நீங்கள் உங்கள் வேலை மற்றும் குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதால் உங்கள் இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் நெருக்கம் இல்லாமல் போக கூட வாய்ப்புகள் உண்டு.

2 மறதி

கணவரால் முக்கியமான நாட்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. இது முற்றிலும் உண்மை. பொதுவாக, கணவன்மார்கள் சில முக்கியமான நாட்களை மறந்துவிடுவார்கள். நீங்கள் முதன் முதலாக சந்தித்த நாள், நீங்கள் முதன் முதலாக வெளியில் சென்ற நாள், உங்களின் திருமண நாள், இப்படி பல விஷயங்களை மறந்துவிடுவார்கள். இது சற்று கவலைகொள்ள வேண்டிய விஷயமாக இருந்தாலும், இதில் ஒரு நல்லதும் உள்ளது. இந்த விசேஷமான நாட்களை அவர்கள் மறக்கும் போது மிகவும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பார்கள். எனவே, நீங்கள் என்ன கேட்டாலும் அதை வாங்கி கொடுப்பார்கள்.

3 நேரமின்மை

ஒரு பெற்றோராகவும், ஒரு கணவன்/மனைவியாகவும், ஒரு ஊழியராகவும், ஒரு பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டும் என்பதால், உங்களுக்கு உங்கள் துணையுடன் அடிக்கடி வெளியே செல்ல நேரம் கிடைக்காது. மேலும், உங்கள் குழந்தையை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் வெளியே செல்ல திட்டமிட கூட நேரம் கிடைக்காது என்றே சொல்லலாம்.

4 குழந்தை

திருமணமான தம்பதிகளின் உரையாடல்கள் போக போக குறைந்து கொண்டே வரும். மேலும், நீங்கள் பேசினாலும், குழந்தை வந்து விட்டால், குழந்தையை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கும். அவர்களின் கல்வி, உணவு, ஆரோக்கியம், விளையாட்டு என இதை பற்றிய பேச்சுக்களே அதிகமாக இருக்கும். இது தான் உண்மை. இதை நீங்கள் புரிந்துகொள்வது மிகவும் நல்லது.

5 சண்டை

உங்களின் வாழ்க்கைமுறை, உங்களது கணவரின் வாழ்க்கைமுறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இதனால், சில நேரங்களில், சிறு சிறு சண்டைகள் வாக்குவாதங்கள் வரலாம். ஈர துண்டை எங்கே வைக்க வேண்டும் என்பதில் இருந்து வீட்டு பணிகள் செய்வது வரை பல விஷயங்களுக்கு வாக்குவாதங்கள் எழும். மற்றவரின் வாழ்க்கை முறையை பழகிக்கொள்ள சில நாட்கள் பிடிக்கும். நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் இருவரும் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்து விடுவீர்கள்.

மேற்சொன்ன அனைத்தும் உண்மை என்றாலும், இதில் பல நன்மைகள் உள்ளன. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; இக்கரைக்கு அக்கரை எப்போதும் பச்சை தான். எனவே, உங்கள் துணையிடம் உள்ள நல்ல குணங்களை சற்றே ஞாபகபடுத்திக்கொள்ளுங்கள். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது என்ற பழமொழி உள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்களோடு, சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவித்து வாழ வேண்டியது தான். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon