முத்தம் காமத்தில் சேராத காதல் கருவி. மாபெரும் சோகத்தையும் கரைத்திடும் ஹாட் சிப் இதழ்கள். பிறந்த குழந்தை பெறும் முதல் பரிசு… வெற்றியின் போது ஆரத்தழுவி நாம் பெறும் கூடுதல் பரிசும் கூட முத்தங்கள் தான். அப்பா, அம்மா, காதலி, தோழமை, மனைவி, குழந்தைகள் என ஒவ்வொருவரிடம் இருந்தும் முத்தங்கள் பல்வேறு பரிமாணங்களில் நம்மை வந்தடையும். ஒரு நாளை முத்தத்துடன் துவக்கினால் அந்நாள் பொண்ணாளாகவே திகழும். தம்பதிகள் தினமும் ஐந்து முத்தங்கள் பரிமாறிக் கொண்டால் அவர்கள் இல்லறம் எப்படி மேன்மை அடையும் எனவும், இல்லறம் நல்லறமாக உதவும் சில விஷயங்கள் பற்றியும் இந்த பதிப்பில் பார்க்கலாம்…!
1. முத்தங்கள்…
கணவன், மனைவி தினமும் முத்தங்கள் பரிமாறிக் கொள்வதால் அந்த உறவில் சண்டைகள் குறைந்தும், இருவர் மத்தியிலான அன்யோன்யம் அதிகரிக்கும். இது அந்த உறவரை வெற்றிகரமாக இயக்க உதவும். காலப்போக்கில் முத்த பரிமாற்றங்கள் குறைவதால் கூட தம்பதி மத்தியில் லேசான விரிசல் உண்டாக காரணமாக இருக்கலாம்.
2. இதர காரணங்கள்:
ஒரு உறவில் முத்தங்கள் தவிர வேறு என்னென்ன காரணங்கள் உறவில் பிணைப்பு அதிகரிக்க காரணிகளாக இருக்கின்றன என்று ஆராய்ந்தால், அவற்றில் முதன்மை இடம் பெறுபவை சில…
1. தப்பை ஒப்புக்கொள்வது
2. வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வது
3. வாரம் இருமுறை உடலுறவு
3. குழந்தைகள்:
ஒரு ஒரு ஆய்வில் 2000 பேர் கலந்துக் கொண்டனர். இதில் இல்லறம் மகிழ்ச்சியாக என்னென்ன காரணம் என ஒரு பட்டியல் அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டது; அந்த தகவல்களின் மூலம், முதல் 20 இடங்களில் குழந்தைகள் என்ற காரணம் இடம்பெறவில்லை. ஏனெனில் இன்றைய தலைமுறை குழந்தைகளை பெற்றுக் கொண்டபின் அதிகம் சண்டையிடத் தொடங்கி பிரிந்து விடுகின்றனர்; குழந்தைகளே இல்லறத்தின் பலம் என்பதை மறக்கின்றனர்.
4. காதல்:
இருவரின் பொழுதுபோக்கு செயல்களை சேர்ந்து செய்வது, ஒரு நாளுக்கு ஒரு முறையாவது நான் உன்னை காதலிக்கிறேன் (ஐ லவ் யூ) என்று சொல்வது, குறிப்பாக உறங்கும் முன்னர் காதல் சொல்வது போன்றவை உறவை பூத்து குலுங்கும் சோலை வனமாக வைத்துக் கொள்ள உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளன.
5. திருமணம் அவசியம் இல்லை:
இருவரும் முழுநேர வேலைக்கு செல்வதும் இல்லற மகிழ்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணம் என்பது வெறும் சடங்கு தான். இருவர் மத்தியிலான இன்பத்திற்கு அது காரணமாக இருப்பதில்லை. அவர்கள் இருவருக்குள் இருக்கும் அன்யோன்யம் தான் அவர்கள் உறவை வலுப்படுத்தும்.
இரு உள்ளங்கள் இணைய திருமணம் என்பது தேவையில்லாத ஒன்றே; அவ்வாறு மனங்கள் இணைய காதலே அவசியம். ஆகையால், திருமணத்தில் இணைந்து விட்டோம் இனி காதல் தேவையில்லை என்று எண்ணாமல், வாழும் காலம் முழுதும் காதலித்து வாழ்ந்து இல்லறத்தை நல்லறமாக்குங்கள் நண்பர்களே..!
