Link copied!
Sign in / Sign up
14
Shares

திருமண நாளை மறக்கக் கூடாததற்கான 5 காரணங்கள்..!

பெண் குழந்தைகள் மண்ணில் உதித்த அந்த நாளிலிருந்து, அவர்களிடம் திருமணம் குறித்து படிப்படியாக சொல்லப்பட்டு வருகிறது. அப்படி கூறப்படும் விஷயங்களால், குழந்தை பருவத்திலேயே திருமணம் குறித்த ஒருவித எதிர்பார்ப்பு உள்ளது. பூப்படைந்த நாள் முதல் வரப்போகும் கணவரின் வர்ணனை, மேலும் நல்ல மனைவிக்கான தகுதிகள் என அனைத்து விதமான விஷயங்களையும் பெண் குழந்தைகளிடம் கூறி, திருமணம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் வளரச் செய்கின்றனர், பெற்றோர் மற்றும் உற்றார்..!  

இவ்வாறு குழந்தை பருவத்திலிருந்து, கேட்டு வந்த திருமணம் மற்றும் திருமண நாள், வாழ்வில் மறக்கவே முடியாத நாளாக இருக்க என்ன காரணங்கள் என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..!

1. காதல்..!

உங்களுக்கு அளவில்லாத காதல் தந்து, உங்கள் வாழ்வையே காதல் கடலாக மாற்றும் காதல் கணவரை இந்த திருமண நாளில் தான் சொந்தமாக அடைந்திருப்பீர். அப்படிப்பட்ட காதல் கணவரை தினம் தினம் காணும் போது, அந்த திருமண நாளின் நினைவும், அந்த திருமண தருணமும் மனதில் வந்து வந்து தானே போகும்..! இதில் மறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை..

2. ஆடைகள்..

திருமணம் என்றால், அந்த சமயத்தில் கல்யாண பட்டு, நிச்சயதார்த்த ஆடைகள், மற்ற ஆடைகள் என அந்த தருணத்தில் வாங்கியிருப்போம். அவற்றை பார்க்கும் போதோ, உபயோகப்படுத்தும் போதோ திருமண நினைவுகள் நெஞ்சில் அலையலையாய் உருவாவதை யாராலும் தடுக்க இயலாது..

3. புது குடும்பம்..

பிறந்ததில் இருந்து திருமண நாள் வரை இருந்தது ஓரிடத்தில், பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோருடன். திருமண நாள் முதலோ முற்றிலும் புதிய வீட்டில், புகந்தகத்தாருடன் வாழத் தொடங்கியிருப்போம். நம் பெற்றோரை நம்மால் ஒரு நாள் கூட மறக்க இயலாது; அவர்களை பிரிந்திருக்கிறோம் என்ற உண்மையை எண்ணும் போதெல்லாம் திருமண நாளின் நினைவும் வரும்..!

 

4. நிர்வாகம்..!

பிறந்த வீட்டில் பொறுப்பில்லாமல் இருந்திருப்போம்; அனைத்து விஷயங்களையும் பெற்றோரே பார்த்துக் கொள்வர். ஆனால், புகுந்த இடத்தில அனைவரின் தேவையையும் நிறைவேற்ற வேண்டிய கடமை உங்கள் கையில் உள்ளது. இதை குறித்து எண்ணும் போதெல்லாம், திருமண நாள் ஒரு கொடிய நாளாய் தோன்றும்..!

5. முழுமை..!

நீங்கள் மணந்த சரியான நபர், உங்கள் கணவர் உங்கள் வாழ்க்கையை அழகாக்கி, சந்தோஷங்களை அள்ளித் தருகையில், இந்த சந்தோஷங்களுக்கெல்லாம் காரணமான திருமண நாளை எண்ணி பூரிப்படைகிறது, பெண்ணின் மனது..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon