Link copied!
Sign in / Sign up
9
Shares

சாப்பிட்ட உடன் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள்...

மனிதனுக்கு மிகவும் தேவையான 3 விஷயங்கள் இவை தான். அது 1. உண்ண உணவு 2. உடுத்த உடை மற்றும் 3. இருக்க இடம். அதற்காக இவை மூன்றுமே அளவுக்கு அதிகமாக நமக்கு கிடைக்குமெனில் அதுவும் வாழ்வில் ஆபத்தை பல வழிகளில் தேடி தருகிறது. எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ... உணவு விஷயத்தில் இது கண்டிப்பாக பொருந்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி இருக்க உணவிற்கு என்று ஒரு சில கட்டுப்பாடுகள் காணப்படுகிறது. அவற்றுள் சாப்பிட்ட பிறகு நாம் என்ன செய்யக்கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்.    

என்ன செய்ய கூடாது?

1. சாப்பிட்ட உடன் அளவுக்கதிகமாக தண்ணீர் குடிப்பது தவறாகும். இதனால் அஜீரண கோளாறுடன் பல பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. சாப்பிட்டு 40 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் தாகம் எடுக்கும். அப்போது குடிக்க வேண்டும்.

2. சாப்பிட்டவுடன் படுத்துவிடக்கூடாது. இதனால் குடல் செயல்பாடு என்பது சிரமம் மிகுந்த தாக காணப்படும். அது போல் சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து உறங்குவதுதான் மிக நல்லது. மதிய நேரத்திலும் இதையே பின்பற்றலாம்.

3. சாப்பிட்ட உடன் குளிக்கக்கூடாது. 2 மணி நேரம் கழித்தே குளிக்க வேண்டும்.

6. சாப்பிட்ட உடனே பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் பழங்கள் என்பது திண்ம நிலையிலிருப்பதால் நீங்கள் உண்ட உணவை செரிமானம் செய்ய வைக்க கடினமாக இருக்கக்கூடும்.

7. அதேபோல் சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல் மற்ற எந்த உணவையும் எடுத்து கொள்ள வேண்டாம். இதுவே சர்க்கரை வியாதிக்கு காரணமாக அமைகிறது.

8. எப்போதுமே நீங்கள் உண்ட உணவு ஜீரணமாக ஒரு குறிப்பிட்ட வெப்பம் தேவை. எனவே, கூல் டிரிங்க்ஸ், ஐஸ்கிரீம், ஐஸ் வாட்டர் போன்றவற்றை சாப்பிட்டவுடன் குடிப்பதை தவிர்க்கவும். இல்லையேல் குடலுக்கு தேவையான வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.

9. அதேபோல் சாப்பிட்டவுடன் பரபரப்பாக எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் நீங்கள் உண்ட உணவு மேல் நோக்கி வருமே தவிர, கீழ் நோக்கி செல்லாது அஜீரண கோளாறை ஏற்படுத்தும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon