Link copied!
Sign in / Sign up
0
Shares

40 வயதிற்குள் பெண்கள் செய்ய வேண்டிய 9 விஷயங்கள்!

1) உடற்பயிற்சி:

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் முதுகு வலி, தோள்பட்டை வலி, தசை வலி என அவதிப்பட வேண்டியிருக்கும். இந்த வலிகள் எல்லாம் உங்களை தாக்காமல் இருக்க வேண்டுமெனில், உடற்பயிற்சி செய்யுங்கள். அது ஒரு 30 நிமிட நடைப்பயிற்சியாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

2) இசை நிகழ்ச்சி:

உங்களின் வார இறுதி நாட்களில் ஏதாவது ஒரு இசை நிகழ்ச்சிக்கு செல்லுங்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. திரளான 20 வயது டீன்ஏஜ் பருவத்தினருடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். ஏனெனில், இது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். மீண்டும் அந்த பாடலை நீங்கள் கேட்க நேர்ந்தால், அது உங்களின் ஞாபகத்தை தூண்டி விடும்.

3) பொது உரையாடல்:

நீங்கள் பொது நிகழ்வுகளில் பேச தயக்கப்படுவீர்களா? அப்படியெனில், அதிலிருந்து வெளியே வாருங்கள். உங்களின் குடும்பத்தினரை தவிர்த்து, வேறு ஒரு குழுவிடம் பேசுங்கள். அப்போது தான், நீங்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி விடுவீர்கள் என்ற பயம் உங்களை விட்டு அகலும். உங்களுக்கு வேண்டுமெனில், ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை கூட ஏற்பாடு செய்யலாம்.

4) கடற்கரைக்கு செல்லுங்கள்:

கடற்கரையில் நின்று காற்று வாங்குவது, பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் காற்றாட நடப்பது, குளிர்ந்த காற்று, பாறைகளில் மோதும் அலைகளின் ஒலி இவையெல்லாம் உங்களின் சிறந்த அனுபவங்களின் ஒன்றாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

5) வேலைக்கு செல்லுங்கள்:

வேலை செய்வது என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். ஒரு மிகப்பெரிய அதிகாரம் கொண்ட நபருக்கு கீழ் வேலை செய்கிறீர்கள் என்றால், அவர் கொடுக்கும் வேலையை முடிக்கும் கடமை உணர்வு உங்களுக்கு வரும். ஆரம்பத்தில் இது திருப்திகரமாக இல்லை என்றாலும், அது உங்களின் தொழில் தேர்வை பிரதிபலிப்பதோடு, தொழில்ரீதியாக உங்களை மேலும் மெருகேற்றும்.

6) வெளிநாட்டு பயணம்:

ஒரு பத்தாண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில், விமான பயணத்தின் செலவு இன்று மலிவாகவே உள்ளது. முடிந்த வரையில், அருகில் இருக்கும் நாடுகளுக்கு சென்று வாருங்கள். இந்த அனுபவத்தால், அயல்நாட்டு கலாச்சாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், திறந்த மனநிலையோடு இருந்தால், நாம் செல்லும் எல்லா இடங்களிலும், நம்மை கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்பார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

7) ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணையுங்கள்:

உங்களை விட குறைவான வசதி வாய்ப்புகள் உள்ள ஒருவருக்கு உதவுங்கள். அது ஒரு நாளாக இருந்தால் கூட, உங்களின் நேரத்தையும் கவனத்தையும், சுயநலமில்லாத ஒரு காரியத்திற்கு செலவிடுங்கள். நீங்கள் கல்வி கற்றுக்கொடுத்தாலும் சரி அல்லது மருத்துவ உதவி செய்தாலும் சரி, அது உங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். பல தொண்டு நிறுவனங்கள், பலரின் சிறிய உதவியையும் கூட எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.

8) இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டுங்கள்:

வேகம் மற்றும் ஆபத்துகள் சூழ்ந்த இரு சக்கர வாகன பயணம் நமக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால், மறக்காமல் ஹெல்மெட் போட்டுக்கொண்டு வண்டி ஓட்டுங்கள்.

9) தொழில் தொடங்குங்கள்:

இது தேவையில்லை என்றாலும் ஆரம்பியுங்கள். இதன்மூலம், நீங்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். பல மக்களை சந்திப்பீர்கள், வேகமாக விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள், பல விஷயங்களை திறமையாக கையாளுவீர்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கு பதற்றமாவதை குறைத்துக்கொள்வீர்கள். அதுமட்டுமில்லாமல், நீங்கள் ஒரு சாதனை செய்த உணர்வு அப்போது தான் உங்களுக்கு ஏற்படும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon