Link copied!
Sign in / Sign up
6
Shares

குழந்தை பிறந்த முதல் வருடம் செய்ய வேண்டிய 7 அழகிய விஷயங்கள்...

உங்கள் திருமண நாள் என்பது எப்பொழுதும் உங்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. விருப்பமான இடத்தில் நீங்கள் இருவர் மட்டும் இரவு உணவை காதலோடு உண்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் இருவர் மட்டுமல்ல மூன்றாவதாய் உங்கள் குழந்தையும் உங்களுடன் இருக்கிறார்கள். எனவே உங்கள் முதல் திருமண நாளை உங்கள் குழந்தையுடன் எப்படி கொண்டாடுவது? குழந்தை பெற்றவுடன் உங்கள் முதல் திருமண நாளை கொண்டாட 7 வழிகளை நாம் இப்போது பார்க்கலாம்.

1, வீட்டில் இரவு உணவு

திருமண நாளன்று டின்னருக்கு வெளியே செல்வது சாதாரண ஒன்று, ஆனால் இப்போது அவ்வாறு இல்லை. நீங்கள் வேறு எந்த கவனச்சிதறல்கள் இல்லாமல் தனியாக வெளியே செல்ல விரும்பினால் உங்கள் பெற்றோர்களிடம் உங்கள் குழந்தையை விட்டு செல்லலாம், ஆனால் நீங்கள் உங்கள் விருந்து பெரும்பாலும் உங்கள் குழந்தையை பற்றியே பேசி முடிவடையும் என்பது உறுதி. எனவே வீட்டிலேயே விருந்தை உண்பதுதான் சிறந்தது. நீங்கள் விரும்பும் உணவை வீட்டிலேயே சமைக்கலாம் அல்லது வெளியிலிருந்து ஆர்டர் செய்யலாம். இதில் வசதி என்னவென்றால் உங்கள் குழந்தை உங்கள் பார்வையிலேயே இருப்பார்கள்.

2. முதல் நாள் காதல்

உங்கள் முதல் சந்திப்பை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இந்த உலகம் உங்கள் இருவருக்காக உருவாக்கப்பட்டதாய் உணர்ந்த நேரம், இடத்திற்கு செல்லுங்கள் ஆனால் உங்களின் அழகிய குழந்தையுடன் செல்லுங்கள். அந்த அழகிய தருணங்களை மீண்டும் உருவாக்குங்கள். அனைத்து தம்பதியினரும் இதை ஒரு திருமண நாளாவது செய்ய வேண்டும் ஏனெனில் இந்த நினைவுகள் மிகவும் அழகானது.

3. ஹோட்டல் ரூம்க்கு செல்லுதல்

உங்கள் குழந்தை பிறப்பதற்கு முன் உங்கள் துணையுடன் அடிக்கடி சிறிய சுற்றுலாக்களுக்கு சென்று வருவீர்கள். இப்போது அது சாத்தியமில்லை, ஆனால் உங்களுக்கான சில மணி நேரங்களை நீங்களே உருவாக்கலாம். உங்கள் குழந்தையை பெற்றோரிடம் கொடுத்துவிட்டு ஒரு ஹோட்டல் அறைக்கு சென்று விரும்பியதை பேசலாம், பரிசுகள் கொடுக்கலாம், பிடித்த உணவுகளை சாப்பிடலாம் இதனை உங்கள் குழந்தையுடன் சென்றும் செய்யலாம்.

4, குழந்தைக்கான விழா

உங்கள் குழந்தையை விட்டு நீங்கள் கொண்டாட விரும்பவில்லை என்றால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும். வீட்டிலேயே குழந்தையை வரவேற்க சிறிய விருந்து ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து சிறந்த உணவு, சிறந்த பானங்கள் என ஏற்பாடு செய்து உங்கள் வாழ்க்கையில் குழந்தை எவ்வளவு முக்கியமானவர் என்று உணர்த்துங்கள்.

5. காட்சி நேரம்

உங்கள் பெற்றோர் கடமைகளில் இருந்து சில மணி நேரங்கள் விலகி தொலைவில் இருப்பது ஒன்றும் கடினமானதல்ல.நீங்கள் உங்கள் குழந்தையை தங்கள் தாத்தா பாட்டியிடம் விட முடியும், ஆனால் உங்கள் குழந்தை உங்களுடன் வேண்டுமென்றால், நீங்கள் அவர்களை அழைத்துச் செல்லலாம். குழந்தையுடன் திரைப்பட அரங்கில் சிரமமாக இருக்கலாம் என்று கவலைப்படுகிறீர்கள் என்றால், குழந்தையுடன் பார்க்க ஒரு வேடிக்கையான படத்தை தேர்வு செய்யுங்கள். உங்கள் குழந்தையும் அனுபவிக்கும் ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுப்பதில் எந்தத் தீங்கும் இல்லை.

6. மெழுகுவர்த்தி இரவு உணவு

நீங்கள் இரவு உணவிற்கு வெளியே செல்ல விரும்பவில்லை என்றால் வீட்டிலேயே இரவு உணவு சாதாரணமாக இருக்க வேண்டுமென ஆசைப்பட்டால் கவலை வேண்டாம்.. உங்கள் வீட்டு மொட்டை மாடியில் அல்லது பால்கனியில் ஒரு மெழுகுவர்த்தி இரவு உணவை ஏற்பாடு செய்து கொண்டாடுங்கள்! இந்த வழியில், உங்கள் குழந்தையின் பார்வையிலேயே இருக்க முடியும்.

7. விளையாட அல்லது செல்லுதல்

உங்கள் குழந்தையை பௌலிங் விளையாட்டுக்கு அழைத்து செல்லுங்கள். நீங்களும் உங்கள் கணவரும் ஒருவரையொருவர் வெல்ல போட்டியிடும்போது அவர்கள் சிரிப்பதை பாருங்கள். வீட்டை அடைவதற்கு முன் இத்தாலிய உணவுகளையோ அல்லது சைனீஸ் உணவுகளையோ சாப்பிட மறந்துவிடாதீர்கள். உங்கள் குழந்தையும், நீங்களும் ஒரே நேரத்தில் எளிய முறையில் மகிழ்ச்சியாக இருக்க இது சிறந்த வழியாகும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon