Link copied!
Sign in / Sign up
8
Shares

தேங்காய் லட்டு - பொங்கல் ஸ்பெஷல்..!!

தமிழர்களின் ஒரு முக்கிய விழா உழவர் திருநாள் அதாவது பொங்கல். இந்த நாளில் புத்தாடை அணிந்து, நமக்கு ஒளியளித்து உணவளிக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிட்டு, புலால் சேர்க்காத உணவு உண்டு, வாழ்க்கையை மேலும் இனிமையாக்க, இனிப்பான கரும்பு கடித்து கொண்டாடி மகிழ்கிறோம்..! இந்த இனிய விழாவில் மேலும் இனிமை சேர்க்க, குழந்தைகளுக்கு மேலும் மகிழ்ச்சியை வழங்க அவர்களுக்கு பிடித்த லட்டு செய்வது எப்படி என இப்பதிப்பில் படித்தறிவோம்..! லட்டு செய்து சுவைத்து மகிழ்வோம்..!

தேவையானவை:

பால் - 2 கப், தேங்காய் துருவல் - 2 கப், ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி, சீனி - 1 கப், வெண்ணெய் - 2 தேக்கரண்டி, பதாம் பருப்பு - 10

செய்முறை:

1. ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்

2. பால் நன்றாக கொதித்ததும், அதில் தேங்காய் துருவல் சேர்த்து, நன்கு கிளறி 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்

3. பின்னர் சீனி சேர்த்து , சீனி கரையும்வரை கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்

4. மிதமான சூட்டில் இருக்கையில், சற்று வெண்ணெயை கையில் தடவி லட்டுகளாக பிடித்து, அதன் மீது பதாம் பருப்பை வைக்கவும் இல்லையேல், பாதம் பருப்பை பொடியாக்கி மேற்கூறிய கலவையில் சேர்த்து, பின் வெண்ணெய் சேர்த்து லட்டுகளாக பிடிக்கவும்

அவ்வளவே, குழந்தைகளுக்கு பிடித்த சுவையான, சத்தான தேங்காய் லட்டு தயார்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon