Link copied!
Sign in / Sign up
25
Shares

தேகத்தை வஜ்ரமாக்கி மிளிரச் செய்ய உதவும் உணவு பற்றி அறிவீரா?

பெண்கள் இயற்கையிலேயே பலம் குறைந்த தேகத்தினை கொண்டு, மண்ணில் பிறப்பெடுக்கின்றனர். பிறந்து வளரும் தருணங்களில் பூப்படைதல், பிரசவம், தாய்ப்பாலூட்டல் என பலவித செயல்களுக்கு பெண்கள் அதீத உடல் ஆரோக்கியத்தை கொண்டிருக்க வேண்டியது அவசியம்; மேலும் அவர்களின் எலும்புகளும் தசைகளும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டிருக்க வேண்டும். 

அப்படிப்பட்ட ஆரோக்கியத்தை, எலும்புகளுக்கான பலத்தை அள்ளித்தரக் கூடிய உணவாக திகழ்வது உளுந்தம் பருப்பு கொண்ட உணவுகள். உளுந்தங்கஞ்சி உண்டால், முதுகு வலி, இடுப்புவலி போன்ற வலிகள் நீங்கி, கருவை தாங்கும் கர்ப்பப்பையும், மங்காத கண்களும், சுருங்காத தோலும், தேயாத எலும்புகளும், பெருக்காத இடுப்பும் பெண்கள் பெறுவார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை. அப்பேற்பட்ட உளுந்தங்கஞ்சியை செய்வது எப்படி என்று இப்பதிப்பில் படித்தறியலாம்..! 

தேவையான பொருட்கள் 

உளுந்தம்பருப்பு - ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது), வெந்தயம் - ஒரு தேக்கரண்டி, பச்சரிசி - அரை டம்ளர், பூண்டு - 20 பல், வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவைக்கு ஏற்றது போல், தேங்காய் - அரை மூடி

செய்முறை

1. பச்சரிசி, உளுந்தம்பருப்பு, உரித்த பூண்டு, வெந்தயம் அனைத்தையும் சேர்த்து, 6 டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) நீர் ஊற்றி, குக்கரில் 8 விசில் வரும் வரை வேக விட வேண்டும்

2. பின்னர் வெல்லம் அல்லது கருப்பட்டியுடன், சிறிது நீர் ஊற்றி, பாகு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும்

3. அதே நேரத்தில், தேங்காய் அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்; முன்னர் குக்கரில் வேகவைத்ததில், எட்டு விசில் வந்த பின் இறக்கி, அக்கலவை சூடாக இருக்கும் போதே, நன்றாய் மசித்து, வெல்லப்பாகு, தேங்காய்ப்பால் இரண்டையும் ஊற்றி சூடாக உண்ணத் தொடங்கவும்; தேங்காயை துருவியும் சேர்க்கலாம்.

இந்த உணவை தினசரி அல்லது அடிக்கடி உட்கொண்டு வந்தால், எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் சுகப்பிரவத்தில் பெற்று, வாழ்நாள் முழுதும் சுகமாக வாழலாம்..

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon