Link copied!
Sign in / Sign up
4
Shares

தீய பழக்கம் குறித்து உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்த 10 வழிகள்!

இது முக்கியமான ஒன்றாகும். எனவே கவனமாக உங்கள் குழந்தைகளிடம் பேச வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு இதன் தீவிரம் புரியாது என்றாலும், நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் குறித்த வித்தியாசத்தை அழுத்தி கூற வேண்டும். நீங்கள் குழந்தைகளிடம் உரையாடும் பொழுது மனதில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்:

1) அவர்களின் உடலின் மீது உள்ள உரிமை:

அவர்களின் உடலின் மீது அவர்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, வேறு எவருக்கும் இல்லை என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

2) தகுந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்:

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்னர் அவர்களின் உடல் குறித்து ஆர்வம் ஏற்பட துவங்கும். எனவே, உடல் பாகங்களின் பெயரை சொன்னால், அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க எளிதாக இருக்கும்.

3) உரையாடல் மென்மையாக இருக்க வேண்டும்:

உங்கள் குழந்தைக்கு இந்த விஷயத்தின் தீவிரம் புரியாது என்பதால், அவர்களின் கவனத்தை ஈர்க்க உரையாடலை மென்மையாக வைத்திருக்க வேண்டும்.

4) நீச்சலுடை விதி:

உங்கள் குழந்தைகளின் எந்த உடல் பாகங்கள் அந்தரங்கமானது என புரிய வைக்க நீச்சலுடை விதி பயன்படும். இந்த விதியின் படி எந்த உடல் பாகங்கள் நீச்சல் உடையால் மூடப்பட்டிருக்கிறதோ அந்த பாகங்கள் எல்லாம் அந்தரங்கமானவை. அவற்றை யாரும் தொட கூடாது. இந்த தலைப்பின் முக்கியத்துவத்தை புரிய வைக்க இது ஒரு ஆரம்பமே.

5) பாதுகாப்பான தொடுதல் குறித்து சொல்லி கொடுக்கவும்:

பாதுகாப்பான தொடுதல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு நட்புரீதியான தொடர்பு. இதை உங்கள் குழந்தைகள் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் அவர்கள் நட்பான தொடுதல் மற்றும் மோசமான தொடுதலை வேறுபடுத்தி கொள்ளலாம். கைகொடுத்தல், கட்டிப்பிடித்தல் மற்றும் முதுகில் தட்டி கொடுத்தல் பாதுகாப்பான தொடுதல் ஆகும்.

6) முடியாது என்று சொல்ல கற்றுக்கொடுக்க வேண்டும்:

அவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இல்லை / முடியாது என்று சொல்ல அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு பிடிக்காதவற்றை ஒரு போதும் செய்யக்கூடாது என்பதை எடுத்துச்சொல்லுங்கள்.

7) புத்தகங்களை பயன்படுத்தலாம்:

இந்த தலைப்பை குறித்து படங்களுடன் கூடிய புத்தகங்கள் வந்துள்ளன. இதனால் உரையாடலின் போது உங்கள் குழந்தையால் நன்றாக புரிந்துகொள்ள முடியும்.

8) அவர்களின் உள்ளுணர்வை நம்ப சொல்லுங்கள்:

குழந்தைகளின் உள்ளுணர்விற்கு நாம் அவ்வளவாக மதிப்பளிப்பதில்லை. பல நேரங்களில் குழந்தைகளால் அவர்கள் நல்ல கைகளில் இருக்கிறார்களா அல்லது மோசமான கைகளில் இருக்கிறார்களா என்பதை கூற முடியும். அவர்களின் உள்ளுணர்வை நம்ப சொல்லுங்கள்.

9) நாடகம்:

இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, அவர்கள் நன்றாக புரிந்து கொள்ளவும் உதவும்.

10) குழந்தைகளிடம் இருந்து பாசத்தை கட்டாயப்படுத்தி வாங்க கூடாது:

ஒரு பெற்றோராக இதை நீங்கள் கண்டிப்பாக செய்ய கூடாது. உங்கள் குழந்தைகளுக்கு அசௌகரியமாக இருக்கும் பட்சத்தில் அவர்களை உங்களுக்கு முத்தம் கொடுக்கவோ, கட்டிபிடிக்கவோ கட்டாயப்படுத்த கூடாது. அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் அதை செய்ய வேண்டாம் என்று கூறுங்கள். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon