Link copied!
Sign in / Sign up
5
Shares

கர்ப்பிணிகள் வயிறு சொல்லும் சுகப்பிரசவமா! சிசேரியனா!

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கடைசி வரை ஏற்படக்கூடிய ஒரு குழப்பம் தான் இந்த சுகப்பிரசவமா? இல்லை, சிசேரியனா? என்பதை தெரிந்துக்கொள்வதாகும். ஆனால், கர்ப்பிணி பெண் அனுபவிக்கும் கடைசி நிலை வரை இதை அவ்வளவு துல்லியமாக சொல்வது மிக கடினம். காரணம், இன்றைய காலக்கட்டத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் தான். ஆம், சுகப்பிரசவம் என சொல்லி, இறுதியில் குழந்தையின் தலையை தொப்புள் கொடி சுற்றிக்கொண்டதாக கூறி சிசேரியனுக்கு பரிந்துரை செய்யும் மருத்துவர்கள் எத்தனையோ பேர். விளைவு, சிசேரியன் இன்று வியாபாரமாக மாறிய அவலம் எங்கும் நடந்தேறியது தான் மிச்சம். இன்று தனக்கு மீண்டும் சுகப்பிரசவம் நடக்காதா என ஏங்கும் பெண்கள் எத்தனையோ பேர். கவலைப்படாதீர்கள்! சுகப்பிரசவத்தை உங்கள் கருவிலிருக்கும் குழந்தை கொண்டே நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலம் படித்து பயனடையுங்களேன்...

1. பின்னணி உயரம் கொண்டு கணக்கிடல்:

உங்களுடைய கருவில் வளரும் குழந்தை வளர தொடங்க, அதன் வளர்ச்சியை உங்கள் மருத்துவர் அளவிடுவார். அதாவது, இடுப்பு எலும்பு மற்றும் கருப்பைக்கு இடைப்பட்ட தூரத்தை அவர் கணக்கிடுவார். இதை தான் பின்னணி அளவு என அழைக்கப்படுகிறது.

ஓர் உதாரணத்திற்கு, நீங்கள் 29 வார கர்ப்பிணியாக இருந்தால் உங்களுடைய பின்னணி உயரமானது  29 சென்டி மீட்டராக இருக்கும். இந்த அளவை பொறுத்து எப்போது குழந்தை பிறக்கும் என்பதை சொல்ல முடியுமாம்.

25 வார கர்ப்பிணி பெண்களுக்கான பின்னணி உயரமாக 23 முதல் 27 சென்டிமீட்டர் இடைப்பட்ட பின்னணி  இருக்கக்கூடும். ஒருவேளை இந்த அளவில் இல்லாத பட்சத்தில் உங்களுக்கு சுகப்பிரசவம் என்பது சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

2. உயர வித்தியாசம்:

உங்கள் பின்னணி உயரம் அதிகமிருந்தால் உடல் பருமனும் அதை பொறுத்து அமைகிறது. உங்களுடைய வயிற்று தசைகள் தளர்வுடன் இருக்கக்கூடும். அப்படி என்றால், உங்கள் இடுப்பு எலும்பு நேராக இருக்க, குழந்தையை வெளிநோக்கி முன்பே தள்ளுகிறது. இதனால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படுகிறது.

ஒருவேளை உங்கள் பின்னணி உயரம் குறைவாக இருக்குமெனில் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு காணப்படுகிறது. இந்த நிலையில் உங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்க, வயிற்று தசைகளும் வலுவுடன் இருக்கிறது.

3. பின்னணி உயரம் மற்றும் அல்ட்ரா சவுண்ட் வித்தியாசம்:

கர்ப்பம் என்றவுடன் ஒருபக்கம் இயற்கை வழி நோக்கி நடைப்பயணம் செல்ல, இன்னொரு பக்கம் இடையில் செயற்கை முறைகள் நம்மை அன்புடன் அழைக்கிறது. கர்ப்பிணிகளின் பின்னணி உயரம் கொண்டு பிறக்க போகும் குழந்தையை பற்றி முந்தைய காலத்தில் தெரிந்துக்கொள்ள, அதுவே இன்று அல்ட்ரா சவுண்ட் பயன்படுத்தப்பட்டு கண்டுபிடிக்கப்படுகிறது இந்த அல்ட்ரா சவுண்ட் கொண்டு குழந்தையின் பாலினம் வரை தெரிந்துகொள்ள முயல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தையின் தலை, வயிறு, தொடை எலும்புகள் பற்றியும் நம்மால் தெரிந்துக்கொள்ள முடிகிறது. இன்று குழந்தையின் ஆரோக்கியத்தையும் அல்ட்ரா  சவுண்ட் உதவியுடன் தெரிந்துக்கொள்கிறார்கள். 


Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon