Link copied!
Sign in / Sign up
1
Shares

தாய்ப்பால் வழியாக குழந்தைக்குச் செல்லும் அபாயங்கள்..!

பத்து மாதம் பார்த்து பார்த்து உண்டு, பாதுகாத்து வந்து, பாதுகாப்பாக குழந்தையை பெற்று, இப்பொழுது அதற்கு தாய்ப்பால் வழியாக நோய் எதிர்ப்பு சக்தி வழங்கிக் கொண்டிருக்கும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களே! இப்பதிப்பு உங்களுக்காக..!! தாய்ப்பால் கொடுக்கையில் நீங்கள் உண்ணும் உணவுகளால், குழந்தைக்கு அபாயத்தை ஏற்படுத்தும் சில சத்துக்கள் தாய்ப்பால் வழியாக குழந்தையை சென்றடைகின்றன. 

இதனால், குழந்தைகள் பல அபாயங்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்; எனவே, தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள், தாங்கள் உண்ணும் உணவுகளால் தங்கள் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை அறிய வேண்டும். அவ்விஷயங்களை உங்களுக்கு அறிவிக்கவே, இப்பதிப்பு..! படித்து பயனடையுங்கள்..!

விட்டமின் சி..

விட்டமின் சி நிறைந்த பழங்கள் அல்லது உணவுகளை உண்ணும்போது, அதிலுள்ள அமிலம் தாய்ப்பால் வாயிலாக குழந்தையின் வயிற்றை அடைந்து, குழந்தைக்கு அபாயம் கலந்த அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்; ஆகையால் இதனை தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தவிர்ப்பது நலம்..!

காஃபின்..

காபியில் உள்ள இந்த காஃபின் என்பது நீங்கள் காபியை அதிகம் அருந்துவதால், அது தாய்ப்பால் வழி சென்று குழந்தைக்குத் தூக்கமின்மையை கொடுக்கும். இதனை தவிர்ப்பது நல்லது.

சாக்லேட்..

சாக்லேட்டில் உள்ள தியோப்ரோமைன் போன்ற வேதிப்பொருட்கள், குழந்தையின் உடலில் கலந்தால், அது குழந்தைக்கு வாயுத்தொல்லையை ஏற்படுத்தும்.

மருந்துகள்..! 

நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம்; ஆனால், மருந்து உட்கொள்வதை நிறுத்தினால் உங்கள் நலம் கெடும். எனவே, குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் சென்று அதற்கு நீங்கள் உட்கொள்ளும் மருந்து காரணமா? என்று கேட்டுத் தெரியுங்கள்..! அப்படி ஆம் என்றால், சில நாட்கள் மருந்தை மருத்துவ ஆலோசனையுடன் நிறுத்தி, பின் மேற்கொள்ளலாம்..!

மது, புகை 

தாய்ப்பாலூட்டும் நேரங்களில், நீங்கள் மது அருந்தினாலோ அல்லது புகை பிடித்தாலோ அது குழந்தையை பாதிக்கும்; ஆகையால், இந்த பழக்கங்களை தாய்ப்பாலூட்டும் தருணங்களில் நிறுத்துவது நல்லது..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon