Link copied!
Sign in / Sign up
9
Shares

தாய்ப்பால் புகட்டும் அன்னையருக்கான 6 சிறந்த பிராக்கள்..!!

பெண்களே! நீங்கள் சாதாரணமாக அணிந்து கொள்ளும் பிராக்களை குழந்தை பிறந்து, தாய்ப்பால் புகட்டையிலும் உபயோகிக்க முடியாது. ஏனெனில் உங்களின் மார்பகங்களின் அளவு மாறுபட்டிருக்கும் மற்றும் நீங்கள் அடிக்கடி குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால், பால் கொடுக்க ஏதுவான, சிறந்த பிராக்களை உபயோகிப்பது நல்லது.

அத்தகைய பிராக்களின் வகைகள் மற்றும் அவைகளின் தனித்தன்மை குறித்து இப்பதிப்பில் படித்து அறியலாம்..!

1. Underwire பிரா..

இது பெரும்பாலும் அனைத்து அன்னையர்களாலும் உபயோகிப்படும் ஒரு வகை. இதில் கிளிப்புகள் இடம் பெற்றிருக்கும்; இக்கிளிப்புகள் பிராவினை எளிதில் கழட்டி, பால் கொடுக்க ஏதுவான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இது எந்தவித தடுப்புகள் மற்றும் தடங்களை மார்பகங்களில் ஏற்படுத்தாது.

2. Soft Cup பிரா..

இவ்வகை பிராக்கள் மார்பகங்களுக்கு ஏற்றவை; இது அனைத்து அன்னையராலும் விரும்பி உபயோகிக்கப்படும் பிரா வகை. தொங்கும் மார்பகங்களையும் சரியான அளவில் வைக்க உதவுகிறது; தாய்ப்பால் கொடுக்க ஏற்றது. இது அனைத்து அளவிலான மார்பகங்களுக்கும் பொருந்தக் கூடியது.

3. Sleep பிரா..

இவை மார்பகங்களுக்கு அதிக மிருதுவான தன்மை அளிக்கக் கூடியவை; இவற்றை இரவில் மட்டுமல்ல பகலிலும் அணிய ஏற்றவை. இவை தாய்ப்பால் புகட்டுவதற்கு சிறந்தவை.

4. Tank Top பிரா

இந்த வகை பிராக்கள், டாப்ஸ்கள் போன்ற மேலாடைகளின் உள்ளக தைக்கப்பட்டிருக்கும். இவற்றை கழட்டி, மாட்டிட கிளிப்புகள் அமைந்திருக்கும். இவையும் தாய்ப்பால் புகட்ட சிறந்தவை.

5. Breast Pumping பிரா..

இந்த வகை பிராக்கள் மார்புகளை அழுத்தி, தாய்ப்பாலினை எளிதாக குழந்தைக்கு எட்டுமாறு கிடைக்க வழிவகை செய்கின்றன. இந்த பிராக்கள் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டும் வகையில் அமைந்து, உதவுகின்றன.

6. Sporty பிரா..

இவை நீங்கள் எத்தகைய வேலைகள் செய்து உடல் வியர்த்துக் கொட்டத் தொடங்கினாலும், உங்கள் மார்பகங்களில் வியர்வை இடம்பெறாமல் காக்கும். இதனால், குழந்தைக்கு எந்த நோய்த்தொற்றும் உங்கள் மூலம் பரவாமல் பாதுகாக்கப்படும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon