குழந்தை பிறப்புக்கு பின், குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளித்து, குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் கடமையாகும். இந்தப்பணியை சிறப்பாய் செய்ய, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க தாய்மார்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து படித்தறியுங்கள்..!
1. சால்மான் மீன்..
சால்மான் மீன் BFA மற்றும் ஒமேகா 3 அமிலங்கள் கொண்டது. இதை வேக வைத்து உண்டால், இது தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கும். உடலுக்குத் தேவையான சக்தி அளிக்கும்.
2. சர்க்கரை கிழங்கு..
இதில் உள்ள கார்போஹட்ரேட், வைட்டமின் சி, பி-காம்ப்ளெக்ஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் தாய்ப்பால் சுரப்பிற்கு பேருதவி புரிவதாக உள்ளன.
3. பாதாம்..
பாதாமில் உள்ள வைட்டமின் இ எண்ணெய், ஒமேகா 3 அமிலம் போன்றவை தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க உதவுகின்றன.
4. பசும்பால்..
பசும்பாலில் உள்ள EFA மற்றும் இதர சத்துக்கள் தாய்ப்பால் சுரப்பினை அதிகரித்து, தாய்ப்பாலுடன் பசும்பாலும் குழந்தைக்கு கிடைத்து, நல்ல ஆரோக்கியம் அளிக்கின்றன.
5. பிரவுன் அரிசி..
பிரவுன் அரிசி எனும் கைக்குத்தல் அரிசி வகை அதிக புரதம், கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்ததாய் உள்ளது. இவை தாய்ப்பால் சுரக்க உதவுகின்றன.
6. பூண்டு..
தாய்ப்பால் கொடுக்கும் பெண்மணிகள் தங்கள் உணவில் தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று பூண்டினை சேர்த்துக் கொள்வது தாய்ப்பால் அதிகரிப்பிற்கு உதவும்.
7. பேசில் (basil) இலைகள்..
இந்த இலைகள் தாய்ப்பால் சுரப்பினை அதிகரிப்பனவாக விளங்குகின்றன.
8. கேரட்..
கேரட்டில் வைட்டமின் எ நிறைந்துள்ளது; இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பேருதவி புரிகிறது.
9. ஓட்ஸ்..
ஓட்ஸ் உணவு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உதவும்.
10. கீரை வகைகள்..
தாய்ப்பால் அளிக்கும் பெண்கள், தங்கள் உணவில் தினம் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உதவும்..
