Link copied!
Sign in / Sign up
22
Shares

தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும் உணவுகள்..!

குழந்தை பிறப்புக்கு பின், குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளித்து, குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் கடமையாகும். இந்தப்பணியை சிறப்பாய் செய்ய, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க தாய்மார்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து படித்தறியுங்கள்..!

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குறைந்தது 2000 கலோரி சத்து அளவான உணவாவது உண்ண வேண்டும்; குறைந்தது 8 டம்ளர் அளவு திரவ உணவு பருகியிருக்க வேண்டும்; பால், ஜுஸ், சூப் போன்றவை இதில் அடங்கும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கால்ஷியம் சத்து நிறைந்த உணவு, பால், பால் சார்ந்த உணவு, பச்சை காய்கறிகள், கீரை, மீன் போன்றவை சிறந்தது.

பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்..!

1. நீங்கள் குடிக்கும் காபி குழந்தையை தூக்கமின்மையாக்கி, அமைதியாய் இராமல் இருக்கும்; ஆகையால், காபி குடிப்பதை தவிர்த்து பால் பருக முயற்சிக்கவும்.

2. பழங்களும், காய்கறிகளும் மிகப்பெரிய உணவாக வேண்டும்; அதவது அதிக அளவு உண்ண வேண்டும்.

3. முழு தானிய உணவு, நார்சத்து உணவுகள் அவசியம்.

4. கொழுப்பு நீக்கிய அசைவ உணவு, சோயா உணவு, கொழுப்பு நீக்கிய பால், பால் பிரிவுகள் மிகவும் நல்லது.

5. ஆயுர்வேதத்தில் சிறிது வெந்தயம் உணவில் சேர்ப்பது பால் சுரப்பதினை அதிகரிக்கும் என்பர்.

6. குழந்தை பால் குடிக்கும் பொழுது மனதினை அமைதியாய் வைத்திருங்கள்.

7. குழந்தைக்கு தேவையான அளவு பால் கொடுங்கள்.

8. பம்ப்பிங் முறையில் பால் சேகரிக்கும் பொழுது இரண்டு மார்பகங்களில் இருந்தும் பால் எடுத்து சேமியுங்கள்.

9. உங்கள் குழந்தையின் உடலோடு உங்கள் உடலோடு அதாவது ஆடையின்றி ஒட்டி பால் குடிக்கும் பொழுது குழந்தை நிதானமாய் நன்கு பால் குடிக்கும் உங்களைச் சுற்றி மெல்லிய துணியினை போர்த்திக் கொள்ளலாம்.

10. இரு மார்பகளிலிருந்தும் ஒரு நேரத்தில் மாறி மாறி கொடுக்கும் பொழுது, இரு மார்பகங்களிலிருந்தும் பால் நன்கு சுரக்கும்.

11. சீரகம், சோம்பு, பூண்டு, கறுப்பு எள் இவை பால் சுரம்பினை அதிகரிக்கும்.

12. துளசி டீ அருந்துங்கள்.

13. பருப்பு வகைகள் பால் சுரப்பதற்கு உதவுவதோடு மற்ற சத்துகளும் கிடைக்கின்றன.

14. தினமும் சிறிது பாதாம் எடுத்துக் கொள்ளுங்கள்.

15. ஓட்ஸ் உணவு இரும்பு, கால்சியம், நார்சத்து வழங்கக் கூடியது.

16. உங்களுக்கு எந்த உணவு நெஞ்செரிச்சல் தருகின்றதோ அந்த உணவு குழந்தைக்கு வயிற்று வலி ஏற்படும். ஆகையால் அவற்றை தவிர்ப்பது நலம்.

17. நீங்கள் குறிப்பிட்ட உணவு உண்ட சில மணி நேரத்தில் குழந்தைக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் அதனை தவிர்த்து விடுங்கள்.

10-12 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக பால் கொடுக்க 10 நிமிடம் முன்னால் கண்டிப்பாய் நீர் குடியுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon