Link copied!
Sign in / Sign up
34
Shares

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள் எது?

தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் நலனுக்காக மட்டுமில்லை. தாய்ப்பால் கொடுப்பது தாயின் ஆரோக்கியத்திற்கும் நல்லது தான். ஆம், தாய்ப்பால் கொடுப்பதால் பெண்கள் மார்பக புற்றுநோயில் இருந்து விடுபட முடிகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காது. 

இதற்கு எல்லாம் காரணம், ஊட்டச்சத்து குறைபாடு மட்டும் தான். இதனை நீங்கள் மிகவும் எளிமையான முறையில் சரி செய்ய முடியும். இதற்கு நீங்கள் வீட்டிலேயே, மிகவும் சத்துவாய்ந்த தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது...! இந்த பகுதியில் தாய்ப்பால் சுரப்பிற்கு உதவும் உணவு வகைகளை பற்றி காணலாம்.

1. வெந்தயம் 

வெந்தயம் பெண்களுக்கு உற்ற தோழி என்று கூறினால் மிகையாகாது. வெந்தயம் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை முதல் பால் சுரப்பு பிரச்சனை என அனைத்திற்கும் உதவியாக உள்ளது. வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போல செய்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். மேலும், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும்.

2. பேரிச்சம் பழம் 

பேரிச்சையில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. 100 கிராம் பே‌ரிச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு‌ச் ச‌த்து உள்ளது. இது இரத்தம் அதிகரிக்க உதவியாக உள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம் போன்றவை உள்ளன. பேரிச்சம்பழத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குழந்தையும் நன்கு வளரும். குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

3. வெற்றிலை 

வெற்றிலையின் பயன்கள் பற்றி நமக்கு அதிகமாக தெரியாது. இந்த வெற்றியிலையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.

குழந்தைகளுக்கு குறைந்தது முதல் ஆறு மாதம் வரையாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. எனவே தாய்ப்பாலை நிறுத்திவிடாமல் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மருத்துவர் அறிவுரையின் பெயரில் மட்டுமே தாய்ப்பாலை நிறுத்த வேண்டும். மற்றபடி எந்த காரணத்திற்காகவும் தாய்ப்பாலை நிறுத்துவது என்பது தவறு.

சில பெண்கள் தங்களது அழகு குறைந்து விடும் என்று நினைத்து தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு சிந்தனையாகும். இவ்வாறு செய்வதால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தாய்ப்பாலுக்கு நிகரான சத்தை எந்த ஒரு உணவும் கொடுத்துவிட முடியாது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon