Link copied!
Sign in / Sign up
6
Shares

தாய்மார்கள் பாலூட்டும் போது துணியால் போர்த்திக் கொள்வதேன்?

தாய்மார்கள் பாலூட்டுகையில், துணியால் போர்த்திக் கொண்டு பாலூட்டுவார்கள்; அது ஏன் என்று தெரியுமா? மார்பகத்தை யாரும் பார்க்காமல் மறைக்க என்று எண்ணினால், அது ஒரு வகையில் சரி. ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல; அப்படி என்ன காரணமாக இருக்கும் என்று சிந்திக்கிறிர்களா? அந்த உண்மைக் காரணம் என்னவென்பதை இந்த பதிப்பில் படித்தறிவோம். 

தாய்ப்பாலின் அவசியம்!

குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதம் வரை அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும்; ஆறு மாதத்திற்கு பின், குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் இணை உணவுகள் கொடுக்கத் தொடங்கலாம். தாய்ப்பால் குழந்தைகளுக்கு நன்கு கிடைத்தால் மட்டுமே அவர்களின் உடல் ஆரோக்கியம் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தி பெருகி குழந்தை நலமாக வாழ்வர்.

முன்னோர் அறிவுரை!

நம் முன்னோர்கள் உணவினை உண்ணும் போது, பேச வேண்டாம்; வேறு எந்த சிந்தனையும் கொள்ளாமல், சாப்பிடும் போது சாப்பாட்டை குறித்து மட்டுமே யோசிக்க வேண்டும் என்று கூறி சென்றுள்ளார்கள். அதை நம்மில் பெரும்பாலோனவர்கள் பின்பற்றுவதில்லை; சாப்பிடுகையில், சாப்பாட்டில் முழு கவனம் செலுத்தி சாப்பிடும் பொழுது, உணவின் ருசியை முழுமையாக உணர்ந்து உண்ண இயலும்; மேலும் முழுக்கவனத்துடன் உண்ணும் போது, அது வயிறை எளிதில், விரைவில் நிரப்பி, பசியை போக்கிவிடும். மேலும் உண்ணும் போது நீர் பருகாமல், உண்டு முடித்த அரை மணி நேரத்திற்கு பின், நீர் பருகுவது சாலச் சிறந்தது.

கவனச்சிதறல்..!

குழந்தைகள் என்றாலே வேடிக்கை பார்ப்பதில் கொள்ளை பிரியம் கொண்டிருப்பர்; அதனால், தாய்மார்கள் பாலூட்டும் பொழுது துணி கொண்டு மறைத்து அளிக்கையில், குழந்தைகள் கவனம் வேறெங்கும் செல்லாமல், பால் குடிப்பதியிலேயே இருக்கும். இவ்வாறு, கவனச் சிதறல்கள் தவிர்க்கப்படுவதனால், குழந்தைகள் தங்களுக்கு போதுமான அளவு பாலை, விரைவாக குடித்து விடுவார்கள். 

இதனால், தாய்க்கும் குழந்தையின் வயிறு நிரம்பி விட்டது என்ற திருப்தி ஏற்படும்; குழந்தையும் விரைவில் பால் குடித்து முடித்து, அழாமல் உறங்கத் தொடங்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon