Link copied!
Sign in / Sign up
43
Shares

தாயான பின்னும், இளமையான அழகிய தோற்றம் பெற 7 வழிகள்..!

தாயான பின்னும், இளமையான அழகிய தோற்றம் பெற 7 வழிகள்…!
ஒரு தாயாய், மற்றோரு உயிரை மண்ணிற்கு கொண்டு வருகையில், உடலின் தோற்றத்தில் இளமை குறைவது இயல்பே. ஆனால் இழந்த மேனியழகை மீட்டெடுப்பது எவ்வாறு?  தாயான பின் தேகம் தளர்ந்ததால் கவலையா? இதோ உங்கள் கவலையைப் போக்கி, அழகான தோற்றம் பெற சில குறிப்புகள்…
1.உடலை உருக்குலையாது காக்கும்
உடற்பயிற்சி…


இழந்த இளமையை மீட்டுக் கொணர, யோகா பயிற்சிகள், உடற்பயிற்சிகள் எளிதாய் வழிவகுக்கின்றன. உடற்பயிற்சி என்றாலே, ஜிம்மிற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; வீட்டில் இருந்தே இழந்த உடல் எடையை மீண்டும் பெறலாம்.
எளிய உடற்பயிற்சிகள் மற்றும் பத்மாசனம், பச்சிமோஸ்தாசனம், திரிகோணாசனம், வஜுராசனம் போன்ற  யோகா பயிற்சிகள் உடல் எடையை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
உடல் மற்றும் யோகா பயிற்சிகளை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்வது பெரும் நன்மை பயக்கும்.
2. முடி உதிர்வுக்கு முடிவு…
பிரசவத்திற்கு பின் முடி உதிர்வது என்பது பெரும் பிரச்சினையாய் இருந்து வருகிறது. இதைத் தடுக்க வைட்டமின் பி மற்றும் சி நிறைந்த உணவுகளான நெல்லி, பப்பாளி, புரோக்கலி போன்ற காய் கனிகளை உட்கொள்ள வேண்டும்.
இயற்கை சீகைக்காய் மற்றும் எண்ணெய் வகைகளை பயன்படுத்துதல் முடிக்கு ஆரோக்கியம் அளிக்கும்.
3. ஊட்டமளிக்கும் உணவுகள்…

“உணவே மருந்து!” எனும் வாக்கின் வாயிலாய், உடல் ஊட்டம் பெற்று இளமையாய் தோன்ற சரியான புரத, வைட்டமின்கள் மற்றும் சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை உண்ணுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், தோற்றப்பொலிவையும் எளிதாய் பெறலாம்; உலர் பழ வகைகள், பெர்ரி கனிகளும் அழகிய இளமை தோற்றம் பெற உதவும்.

4. தோற்றப் பொலிவோடு தோற்றமளிக்க....

‘நீர் இன்றி அமையாது உலகு’ போல், நீர் இல்லாது உடலும் அமையாது. அதிக தண்ணீர் அருந்துவதால் பொலிவளிக்கும் தேகத்தை இயல்பாய் பெறலாம்; ஏனெனில், தண்ணீர் தாகம் தீர்ப்பதோடு, உணவைக் கடத்தவும், உடலின் சமநிலையைக் காக்கவும், இறந்த உடல் செல்களை புதுப்பிக்கவும் துணை புரிகிறது.
சரியான உறக்கம் கொள்வதும் பொலிவான சருமத்திற்கு அவசியம்; குழந்தை உறங்கும் சமயம், தாயும் சிறிது ஓய்வு கொள்ளலாம்.  உறங்கி எழுவதால் உடல் புத்துணர்வு பெறுகிறது.
5. ஆள் பாதி ..! ஆடை பாதி..!

நமது உடையே நம்மை  பற்றி பறைசாற்றும் ஊடகமாக விளங்குகிறது; ஆகையால், ஆடை உடுத்துவதில், கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடலுக்கு பொருந்தும் ஆடையை சரியாய் தேர்வு செய்து உடுத்துதல் நல்லது.
6. புத்துணர்வாகுங்கள் புத்துயிரோடு…

மழலையின் மேனியழகை எத்துணை சிரத்தையோடு மேம்படுத்த முயல்கின்றிரோ  அதே போல் உங்கள் உடல் நலன் மீதும் அக்கறை கொண்டு கேச மற்றும் தேக அழகை மெருகூட்டுங்கள்.
ஸ்பா, சிகை அலங்காரம், முக பூச்சுகள்  போன்ற பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துவதால் அழகான தோற்றம் பெறலாம்.இதமான பாடல்களை கேட்கும் போது, மனம் புத்துயி ர் பெறுகிறது.
7. நலமளிக்கும்  நடைப்பயிற்சி…

நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராகி, பாயும்; உடலின் எடையை கட்டுக்குள் வைக்க இது ஒரு எளிய பயிற்சி முறையாகும். இத்தகைய  எளிய பயிற்சியை தங்கள் குழந்தையோடும் மேற்கொள்ளலாம்.
 
இந்த எளிய குறிப்புகளும் வழிமுறைகளும், உங்கள் இளமையை மீட்டெடுத்து, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வுக்கு துணை புரியும்.
Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon