Link copied!
Sign in / Sign up
1
Shares

தவழும் குழந்தைகளின் பெற்றோர்கள் அறியாதவை..!!

குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் தவழ மற்றும் தட்டுத்தடுமாறி நடக்க ஆரம்பிக்கையில், அவர்கள் மிகவும் சுறு சுறுப்பாக இருப்பார்கள்; அச்சமயம் பெற்றோர்களுக்கு நிறைய பொறுமையும், அதிக அமைதியும் வேண்டும். இந்நேரத்தில் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது எப்படி மற்றும் அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

1. அழைத்தல்..

குழந்தைகள் தவழவும், தட்டுத்தடுமாறி நடக்கவும் தொடங்குகிறார்களோ, அச்சமயம் அவர்களை அதிகம் உற்சாகப்படுத்தும் வகையில், குழந்தைகளின் முன் சற்று தூரத்தில் நின்று கொண்டு, அவர்களை உங்களிடம் வருமாறு அல்லது ஏதேனும் பந்து அல்லது விளையாட்டு சாமான்களை/கண் கவரும் பொருட்களை எடுக்குமாறு அழைக்கலாம்.

2. கவனம்..

குழந்தைகள் தவழ ஆரம்பிக்கையில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம்; எந்தவொரு பொருளையும் சாளரத்தின் (ஜன்னல்) அருகே வைக்கக் கூடாது; ஏனெனில் அப்பொருள் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அமைந்து விட்டால், கண்களைப் பறித்தால் கட்டாயம் அதை எடுக்க குழந்தைகள் முயற்சி செய்வர்; இம்முயற்சி அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். 

மேலும் எந்தவொரு கூர்மையான பொருளையும் குழந்தைகள் முன்னிலையில் வைக்க வேண்டாம்; வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு வேலை செய்வதை தவிர்த்திடுங்கள். நீங்கள் என்ன வேலை செய்தாலும் குழந்தைகளின் மீது கவனமாக இருக்க வேண்டும் இல்லையேல் அவர்களை கவனிக்க ஒரு ஆளை நிறுத்திவிட்டு நீங்கள் உங்கள் வேலைகளை தொடரலாம்..!

3. சுத்தம்..!

கீழே கிடைக்கும் பொருட்களை குழந்தைகள் வாயில் வைத்துவிடும் அபாயமும் உண்டு; ஆகையால் குழந்தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; மேலும் அதிக கவனத்துடன் அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. கண்காணிப்பு..!

தவழவோ, நடக்கவோ தொடங்கிய குழந்தைகள் ஒரே இடத்தில் இருப்பது என்பது நடவாத காரியம்; ஆகவே குழந்தைகளை தனியாக விட்டுவிட வேண்டாம். அதிலும் குறிப்பாக கட்டிலில் தனித்து விட வேண்டாம்; ஏனெனில் என்னதான் அவர்களைச்சுற்றி விளையாட்டுப் பொருட்கள், தலையணை என வைத்தாலும், தவழ ஆரம்பித்து விட்டால், குழந்தைகளின் கை, கால்கள் துறு துறுவென்று இருக்கும்; இதனால், குழந்தைகள் கட்டிலில் இருந்து விழ நேரிடலாம். உயரம் குறைந்த கட்டிலாக இருந்தால் பரவாயில்லை, ஆனால், உயரம் அதிகமாக இருந்தால் ஆபத்து தான். 

எனவே, உங்கள் குழந்தை தவழ ஆரம்பிக்கையில் மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் நினைவில் கொண்டு செயல்பட்டு, குழந்தையை உற்சாகப்படுத்தி, சிறந்த பெற்றோராக வாழ்வீராக..!!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon