Link copied!
Sign in / Sign up
2
Shares

தாத்தா பாட்டிகளும், பேரக்குழந்தைகளும்


தாத்தாவிடமோ பாட்டியிடமோ உங்கள் உலகம் யாரென கேட்டால் துளியும் யோசிக்காமல், எங்கள் பேரக்குழந்தைதான் என சொல்வார்கள்.அதேபோல்தான் குழந்தைகளிடம் உங்களுக்கு மிகவும் பிடித்தது யாரென கேட்டால் தாத்தா மற்றும் பாட்டியைத்தான் சொல்வார்கள்.

தாத்தா, பாட்டி மற்றும் பேரக்குழந்தைகளுக்கு இடையே உள்ள உறவானது மிகவும் அழகான ஒன்று. மற்ற உறவுகளை போல் இல்லாமல் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சந்தோஷத்தை மட்டும் தரக்கூடிய அற்புத உறவாகும். ஒருவருக்கோ அது வாழ்வின் இறுதி பகுதி மற்றொருவருக்கோ வாழ்க்கையின் தொடக்கம். அவர்கள் இருவரும் இணைந்து தங்கள் அனுபங்களை பகிர்ந்து கொள்ளும்போது இருவரின் ஆனந்தத்திற்கும் எல்லைகளே கிடையாது. அவர்களின் உறவினுடைய சில சுவாயரசமான அனுபவங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

1 பேரக்குழந்தைகள் தங்களின் எதிர்காலத்தில் மகத்துவதோடு விளங்கவேண்டுமென தாத்தா மற்றும் பாட்டி விரும்புவார்கள். அவர்கள் விரும்புவது எல்லாம் தங்களின் அடுத்த தலைமுறை எல்லாவற்றையும் பெற்று வளமாய் வாழ்வதை பார்த்து மகிழ்வதோடு அதில் பங்கெடுக்க வேண்டுமென்பதே.

2 குழந்தைகளுக்கு வீட்டில் அதிகம் செல்லம் கொடுப்பது தாத்தா பாட்டியே. அவர்கள் குழந்தைகள் செய்ய தடைபோட்ட அனைத்து விஷயங்களையும், அவர்களின் பேரக்குழந்தைகளை செய்ய அனுமதிப்பார்கள்.

3 குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர்களின் கடந்த காலத்தையும் அவர்கள் சிறுவயதில் செய்த குறும்புகளை தெரிந்துக்கொள்ள அதிக ஆர்வம் இருக்கும். தாத்தா பாட்டி மட்டுமே இந்த ஆசையை நிறைவேற்ற முடியும்.

4 குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் தாத்தா பாட்டியிடம் இருக்கவே ஆசைப்படுவார்கள். காரணம் அவர்களோடு இருக்கும்போது தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதையும், தங்கள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்வார்கள்.

5 அவர்களுடன் இருக்கும்போது பெரியவர்களின் மதிப்பையும் அவர்களின் முக்கியத்துவத்தையும் அறிவார்கள்.

6 தாத்தா பாட்டி வீட்டில் கிடைக்கும் உணவுகளின் சுவை என்றுமே அளாதிதான். குழந்தைகளுக்கு அவர்களின் பாட்டியே உலகின் சிறந்த சமையல் நிபுணராக தெரிவார்கள்.

7 குழந்தைகள் பெரியவர்களாகும் போது அவர்களின் பொறுப்புகள் மாறிவிடும். இதுவரை தங்களை பார்த்துக்கொண்டு தாத்தா பாட்டியை இனிமேல் அவர்கள் பார்த்துக்கொள்ள துவங்குவார்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon