Link copied!
Sign in / Sign up
0
Shares

தங்களுக்கு ஊக்கமளிக்கும் அம்மாக்கள் குறித்து சொல்கிறார்கள் 3 குழந்தைகள்!

அம்மா என்பவர் யார்? அம்மா என்பவர், ஒரு குழந்தையை பெற்றெடுத்த ஒருவர் என்பதை விட அதிகமாகும். ஒரு தாய் என்பவள், தன் குழந்தையை கவனித்துக்கொள்ள தன் உடல், பொருள், ஆன்மா என அனைத்தையும் அர்பணிக்கிறாள். அவள் குழந்தைக்கு அனைத்துமாக இருக்கிறாள்; ஒரு ஆசிரியராக, ஒரு தோழியாக, குழந்தைக்கு என்றும் உதவியாக இருக்கிறாள். நாம் எங்கே சென்றாலும், என்ன செய்தாலும், நம் தாய் எப்போதும் நம் மனதில் இருந்துகொண்டு, நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பாள். நாம் பெற்றோர் ஆகும் போதும், நமது தாய் தந்தை போலவே நடந்துக்கொள்ள முயற்சி செய்வோம்.

தன் கடமைகளை தாண்டி நமக்கெல்லாம் ஒரு தூண்டுதலாக விளங்கும் 3 தாய்மார்கள் குறித்து பார்ப்போம்.

1 நல்ல துணை

" எனக்கு நினைவிருக்கும் வரை, என் அம்மா என் கூட எப்போதும் இருப்பார். நான் வெறும் வார்த்தையாக சொல்லவில்லை. அவர் உண்மையில் என்னோடு இருந்தார். அது பள்ளி விழாவாக இருந்தாலும் சரி அல்லது எனக்கு ஒரு துணை தேவைப்படும் போதும் சரி, என் அம்மாவிற்கு எந்த வேலை இருந்தாலும் என்னோடு இருப்பார். என்னோடு நேரத்தை செலவிடுவார். என் குழந்தை பருவத்தில், என் பெற்றோர் ஒரு போதும் என்ன பார்த்து கொள்ள ஒரு ஆளையோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களையோ ஏற்பாடு செய்ததே இல்லை. என் அம்மா எப்போதும் என்னுடன் இருப்பார்.

என் அம்மாவிற்கு வேலை எதுவும் செய்யாமல் இருந்தால் பிடிக்காது என்று எனக்கு தெரியும். இருந்தாலும், என்னுடனும் என் சகோதரனுடனும் நேரத்தை தயக்கம் இல்லாமல் செலவிடுவார். நாங்கள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது அவர் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக வேலை நேரத்தை எங்கள் வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டார். சில நேரங்களில் ஆசிரியையாக பணியாற்றினார், சில நேரங்களில் பகுதி நேர எழுத்தாளராக பணியாற்றினார், சில நேரங்களில் சமையல்காரராகவும் பணியாற்றினார். வேலை எதுவும் கிடைக்கவில்லை எனில், நாங்கள் அவருடன் நேரம் செலவழிக்கும் வரை அதையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார். ஒவ்வொரு முறை அவர் வெளியே செல்லும் போதும் எங்களையும் அழைத்து சென்று எங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார். அது மளிகை சாமான் வாங்குவதாய் இருந்தாலும் சரி, அல்லது கார் பழுது பார்ப்பதாய் இருந்தாலும் சரி எங்கள் எல்லோரையும் அழைத்து செல்வார். நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்".

2 சிரிப்பு

ஒரு மகனும் மகளும் ஒரு தாய் பற்றி கூறியது.

" எங்கள் தாய் தான் எங்கள் குழந்தை பருவத்தின் ஒளி. எங்களின் வாழ்வில் மட்டுமல்ல, அவர் சந்தித்த அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றினர். அவர் எப்போதும் சிரித்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார். நாங்கள் சந்தித்த மனிதர்களிலேயே மிகவும் கனிவானவர். நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்த போது எங்கள் தந்தை வேலையை இழந்தார். அப்போது எங்களின் தாய் ஒரு இல்லத்தரசியாக இருந்தார். அந்த கஷ்ட காலங்களிலும் எங்கள் வீட்டில் இருந்த மகிழ்ச்சி குறையாமல் பார்த்துக்கொண்டார். எங்களுக்கு கஷ்டம் தெரியாமல் பார்த்துக்கொண்டார். எங்களிடம் என்ன இருந்ததோ அதை வைத்து தான் அவர் செய்வார், ஆனால் எதுவும் இல்லை என்ற உணர்வை எங்களுக்கு கொடுத்ததே இல்லை. எங்கள் தந்தைக்கு வேறு வேலை கிடைக்கும் வரை, ஒரு பத்திரிகையில் பகுதி நேர எழுத்தாளராக பணியாற்றினார். பணத்தை மிகவும் சிக்கனமாக கையாண்டார். ஒவ்வொரு பண்டிகைக்கும், ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வீட்டில் தேவையான அளவு பணம் இருந்தது.

எங்கள் வாழ்க்கையில் என்ன சோகம் நடந்தாலும், எங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் மந்திரம் அவருக்கு தெரியும். அவர் உண்மையில் ஒரு அற்புதமான பெண்".

3 பலம்

" என் அம்மா அவர் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்ததால், ஒரு குழந்தையை தத்தெடுக்க போவதாக அவர் கூறிய போது நிறைய எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறார். அப்போது அவருக்கு என் தந்தையுடன் திருமணமாகி இருந்த போதிலும், குழந்தை தத்தெடுப்பில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இதன் மூலமாக தான் நான் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தராக மாறினேன். என்னை தத்தெடுக்க அவரின் ஒட்டுமொத்த சமூதாயத்திற்கும் எதிராக நின்றார். ஆனால், அவர்களை பற்றியோ என்னைப் பற்றியோ ஒரு குறை கூட சொன்னதில்லை. என் பெற்றோர்கள் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். ஆனால், என் தங்கை பிறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்பு என் தந்தை இறந்து விட்டார். அப்போது எனக்கு 7 வயது இருக்கும். ஆனால் என் தாயோ, எங்கள் தந்தையின் இறப்பு எங்கள் வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக்கொண்டார். என் தாய் எல்லாவற்றையும் வலுவோடு எதிர்கொண்டார். கணவனை இழந்து கர்ப்பமாக இருந்த போதும், பிறக்காத என் தங்கையையும் என்னையும் நன்றாக கவனித்துக்கொண்டார். குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தன்னையும் நன்றாக கவனித்துக்கொண்டார். அவரை நாங்கள் இருவரும் எப்போதும் சோகமாக பார்த்ததேயில்லை. என் தங்கை பிறக்கும் வரை என் தாயின் சகோதரர் எங்களை பார்த்துக்கொண்டார். என் தங்கையை கூட எடுத்துச்செல்ல அனுமதிக்கும் ஒரு வேலையை தேடிக்கொண்டார். என்ன தான் அவர் சம்பாதிப்பது எங்களின் தேவையை சரியாக பூர்த்தி செய்வதாய் இருந்தாலும், எங்களை அன்போடும் மகிழ்ச்சியோடும் கவனித்துக்கொண்டார். தந்தை இல்லை என்ற ஏக்கம் எங்களுக்கு வராமல் பார்த்துக்கொண்டார். சில வருடங்கள் கழித்து மறுமணம் செய்ய முடிவெடுத்த போது எங்களின் புதிய தந்தைக்கும் எங்களுக்கும் முதலில் நல்ல இணக்கத்தை ஏற்படுத்தினார். இப்போது நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

நான் பார்த்த மனிதர்களில் என் அம்மா தான் மிகவும் வலிமையானவர். அவரிடம் இருக்கும் பாதி தைரியத்தையாவது நான் பெற்றிருக்கிறேன் என்று நம்புகிறேன்".     

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon