Link copied!
Sign in / Sign up
22
Shares

தாம்பத்தியத்தை கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய தருணங்கள்

ஒரு பெண் கர்ப்பமடையும் வரை இது வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் இருந்திருப்பாள். ஆனால் கர்ப்பமடைந்த பின் அவளது பொறுப்புகளை உணர துவங்குவாள். இனி கணவன் மனைவியாக மட்டும் இல்லாமல், அவர்களின் பொறுப்புகள் மாற துவங்கும். இப்போது அவர்கள் தங்களில் தாம்பத்திய வாழ்வின் அர்த்தமாக, அவர்களின் குழந்தைக்கு பெற்றோர் என்னும் ஸ்தானத்தை அடைகிறார்கள். இது அவர்களின் திருமண வாழ்வின் முக்கியமான படிநிலைகளில் ஒன்றாகும்.

நீங்கள் கருத்தரித்த பின்னும் உங்கள் தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியாக ஈடுபடலாம். உங்கள் குழந்தை கருப்பையில் இருக்கும் ஜவ்வினுள் முழுமையான பாதுகாப்புடன், மிகவும் பத்திரமாக இருக்கும். இந்த ஜவ்வானது சளி போன்ற ஒரு பொருளால் கருப்பை வாயில் மூடப்பட்டுள்ளது. இது கருப்பையினுள் பாக்ட்டீரியா மற்றும் வைரஸ் போன்றவை நுழைவதை தடுக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆழமாக உடலுறவு கொண்டாலும், குழந்தையை பாதிக்காது. எனவே, நீங்கள் கவலை அடைய தேவையில்லை.

ஒரு சில பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் உங்களால் முடிந்தால், மருத்துவர் வேண்டாம் என்று சொல்லும் வரை உடலுறவில் ஈடுபடலாம். உங்கள் மருத்துவர் வேண்டாம் என்று சொன்ன பின் நிறுத்தி விட வேண்டும். இல்லையேல் அது உங்கள் குழந்தையை பாதிக்கலாம். இங்கு கர்ப்பகாலத்தின் போது தாம்பத்தியத்தை தவிர்க்க வேண்டிய தருணங்களை பார்க்கலாம்.

1 நஞ்சுக்கொடி முன்வருதல்

உங்கள் குழந்தைகள் கருப்பை சவ்வினுள், அம்னியோடிக் திரவம் மற்றும் நச்சுக்கொடியின் ஒரு அடுக்கினால் பாதுகாக்கப்படுகிறது. சில நேரத்தில் நஞ்சுக்கொடி தவறான நிலைக்கு நகர்ந்து விடுகிறது. அது அதன் சரியான நிலையிலிருந்து கீழ் நகர்ந்து அங்கு வளர துவங்கி விடும். இது போன்ற தருணங்களில் உடலுறவை தவிர்ப்பது சிறந்தது.

இதை உங்கள் கர்ப்பத்தின் 16 முதல் 20 வாரத்திற்குள் மட்டுமே பரிசோதிக்க முடியும். இது அம்மாவிற்கு அதிக வலியையும், குழந்தைக்கு ஆபத்தையும் ஏற்படுத்தும்.

2 குறைமாத பிரசவ வலி

இது உங்கள் குழந்தை பிறக்க வேண்டிய நாளிலிருந்து முன் பிறப்பதாகும். நீங்கள் கர்ப்பகாலத்தின் 37 வது வாரத்தை அடைவதற்கு, முன்னர் உங்கள் கருப்பை வாய் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படும், வழக்கமான சுருக்கங்களை நீங்கள் சந்தித்தால், நீங்கள் குறைமாத பிரசவத்தின் கீழ் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். கர்ப்பிணி பெண்களுக்கு குறைப்பிரசவ வாய்ப்பு அதிகமாக இருக்கும் போது, உடலுறவை தவிர்க்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

3 பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு

நீங்கள் உங்கள் பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதை கண்டால், உடனடியாக உடலுறவை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. இது ஆழ்ந்த உடலுறவினால், உள்ளுக்குள் ஏற்பட்டிருக்கும் இரத்தப்போக்காகவும் இருக்கலாம். இது போல் திடிரென்று இரத்தப்போக்கு ஏற்படும் போது, உடலுவை தொடர்வது நல்லதல்ல மற்றும் ஆபத்தானதும் கூட. அந்த நேரத்தில் உங்கள் பிறப்புறுப்பில் ஏற்படும் அசாதாரண வெளியேற்றம் இது. இது போன்ற அசாதாரண வெளியேற்றம் ஏற்படும் போது, நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரை சந்திப்பது சிறந்தது. முடிந்தவரை உங்கள் குழந்தை பிறக்கும் வரை உடலுறவு கொள்ளாமல் இருப்பது சிறந்தது.

4 பனிக்குடம் உடைத்தல்

உங்கள் பனிக்குடம் உடைந்தால், குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம். உங்கள் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, உங்கள் கர்ப்பப்பை விரிவடைய துவங்கும். அதனால் உங்கள் குழந்தையை வெளியே தள்ள நீங்கள் முயற்சிக்க வேண்டும். எனவே உங்கள் கர்ப்பகாலம் முடிவடைய கூடிய அந்த தருணத்தில் உடலுறவை தவிர்க்க வேண்டியது அவசியம்.

5 கர்ப்பப்பை வாய்ப் பற்றாக்குறை

உங்கள் கர்ப்பப்பை குழந்தையை தாங்கும் திறனற்றதாக இருந்தால், உங்கள் குழந்தையால் உள்ளிருக்க முடியாது. இது உங்கள் கருப்பை வாயை விரைவில் விரிவடைய செய்யும். எனவே உங்கள் குழந்தை குறைப்பிரசவத்தில் முன்கூட்டியே பிறப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.

இதனால் குழந்தை குறை பிரசவத்தில் பிறப்பது அல்லது கருச்சிதைவு ஏற்படுவது போன்றவை நிகழலாம். எனவே, கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை தவிர்த்து கொள்வது சிறந்தது.  

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon