Link copied!
Sign in / Sign up
27
Shares

தம்பதியர்களே! உங்கள் காதல் எந்த வகை..??!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில், வழக்கமாக கொள்ளும் பழக்கங்களில் சில வகைகள் இருப்பது போல, காதல் என்பதிலும் சில வகைகள் உள்ளன. காதலில் வகையா? என்று அதிர்ச்சியாகாதீர்கள். உண்மையில் காதலில் 6 வகை உள்ளன; அதில் உங்கள் காதல் எந்த வகை என, பதிலை comment செய்யுங்கள்..! 

ஏரோஸ் (Eros)

இது ஒரு நபரின் உடல் ரீதியான ஈர்ப்பு கொண்டு காதல் கொள்வது. பெரும்பாலும், “எனக்கு வேணும்…” என காதலிக்க அடம்பிடிக்கும் அன்பர்களுக்கு இப்படிப்பட்ட காதல் தான் வாய்க்கும். அவர்களுக்குள் மிக அரிதாக தான் மன ரீதியான உணர்ச்சிப் பூர்வமான நிலை உண்டாகும்.

இவர்கள் ஆரம்பக் கட்டத்தில் செம்ம ஸ்பீடாக காதலிப்பார்கள். வேறு அழகான, வடிவான நபர்களை காணும் போது இவர்களது எண்ணம் அலைபாயும். ஆரம்பத்தில் இருக்கும் அந்த ஈர்ப்பு போக போக இருக்காது.

லூட்ஸ் (Ludus)

விளையாட்டாக, விளையாட்டுத்தனமாக, மிக இயல்பாக, திரைப்பட வசனம் எல்லாம் பேசாமல் காதலிப்பவர்கள். இவர்களுக்குள் பெரிதாக உடன்பாடு என ஒன்றும் இருக்காது. இவர்களை காதலிக்கும் போது இவன் நம்மள ஏமாத்திட்டு ஓடிடுவானோ என்ற எண்ணம் துணைக்கு எழலாம்.

இவர்கள் தனக்கு போதுமான அளவு தான் உறவில் ஒன்றி இருப்பார்கள். மிக குறைவாக தான் தனிப்பட்ட தகவல்களை பகிர்வார்கள். இவர்களிடம் தன்னை தானே காதலிக்கும் குணம் அதிகமாக இருக்கும்.

மேனியா (Mania)

உடைமையாக்கக் காதலர்கள்! என் புருஷன் தான், எனக்கு மட்டும் தான்… என காதலிப்பவர்கள். தங்கள் துணை என்ன செய்தாலும் அதை கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள், கட்டுப்படுத்தி கொண்டே இருப்பார்கள்.

காதலிப்பதற்கும், தொல்லை செய்வதற்கும் வித்தியாசம் புரியாமல் வாட்டி எடுப்பார்கள். இவர்களுக்கு தங்கள் துணை மீது அதிக நம்பிக்கை இருக்காது. அதிக காதலை வெளிப்படுத்தும், எதிர்பார்க்கும் நபர்கள். எளிதாக காயப்பட்டுவிடுவார்கள், மனதளவில். காலாவதி ஆகிவிட கூடாது என பொத்திக் பொத்திக் காதலிப்பார்கள்.

அகப்பே (Agape)

சுயநலம் அற்ற காதல், உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யலாம், என காதல் துணைக்கு சுதந்திரம் அளிக்கும் நேர்மையான காதலர்கள். காதலை பெறுவதை காட்டிலும், கொடுப்பதில் தான் அதிக கவனம் கொள்வார்கள். இப்படி ஒரு காதலர் கிடைத்தால் விட்டுவிட வேண்டாம்.

எல்லையற்ற காதல் கொண்டிருப்பார்கள். நேர்மையாக காதலிப்பார்கள். துணைக்கு தேவையான அனைத்தும் வகையிலும் உதவுவார்கள்.

பிரக்மா (Pragma)

நடைமுறை எதார்த்தத்துடன் காதலிக்கும் நபர்கள். எதையும் மேம்படுத்தி காண மாட்டார்கள். இருப்பதை உள்ளப்படி கூறி, இது சரி, இது தவறு என நேருக்கு நேர் கூறும் காதலர்கள்.

இவர்களுக்கு காதல் மட்டும் போதாது, பொருளாதார நிலை, ஆன்மிகம், குடும்ப வரலாறு, கலாச்சாரம் என அனைத்து வகையிலும் நமக்கு ஒத்துவருமா? வராதா? என யோசித்து காதலிக்கும் கணிப்பான் காதலர்கள். பாகுபாடு காண்பர். ஒருவரை தேர்வு செய்யும் முன்னர் அனைத்திலும் கவனமாக இருப்பார்கள்.

ஸ்டோர்ஜ் (Storge)

தோழமையான காதலர்கள்! இவர்களுக்குள் அதிக நட்புறவு இருக்கும். நீ என் காதலி, நீ என்னுடன் மட்டும் தான் நேரம் செலவழிக்க வேண்டும், என்னைத் தவிர வேறு யாருடனும் நீ பேசக்கூடாது என எந்த தொல்லையும் இருக்காது. நட்பெது, காதல் எது, காமம் எது என அனைத்தும் அறிந்த காதலர்கள்.

இவர்கள் உடல் தோற்றம் கண்டு காதலிக்க மாட்டார்கள். நிலையான காதல். நாடகம் எல்லாம் செய்ய மாட்டார்கள். இயற்கையாக காதலிப்பார்கள்.

மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon