Link copied!
Sign in / Sign up
4
Shares

தம்பதியர்களுக்குள் சண்டை ஏற்பட இதுதான் காரணமா?

திருமணத்திற்கு முன் காதல் கொள்கையில் இருக்கக் கூடிய ஆர்வமும், அன்பின் மிகுதியால் வரக் கூடிய ஊடலும், திருமணத்திற்கு பிறகு இருப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. கல்யாணம் ஆவதற்கு முன், எப்பொழுது தான் திருமணம் நடக்குமோ என்று ஆவல் கொண்டவர்கள் திருமணத்திற்குப் பின் எதுக்கு தான் திருமணம் செய்து கொண்டோமோ என நினைக்குமளவிற்கு பல மாற்றங்களை தம்பதியர்கள் உணர்கின்றனர். ஏன் இந்நிலை ஏற்படுகிறது? என்ன காரணம் என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்..! சண்டையை நிறுத்தலாம்..!

இன்றைய காலகட்டத்தில் தம்பதியர் இருவரும் வேலைக்குச் செல்வதால், அவர்களால் உடலளவில் கூட இணைய முடிவது இல்லை. இடவ்வாறு, இணையாமல் உடலுறவு கொள்ளாமல் இருப்பதால் மனக் கசப்புகள் அதிகமாகும். அதுமட்டுமில்லாது, ஒரு முத்தம் கொடுக்கும ளவிற்குக் கூட நேரமும் மனநிலையும் இல்லாத அளவிற்கு தான் தம்பதியர்களின் இன்றைய வாழ்க்கை முறையுள்ளது.

தம்பதியர்கள் உடலுறவு கொள்ளாமல் இருப்பது, தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே அவர்களுக்குள் ஏற்படும் சண்டை மற்றும் மனக்கசப்புகளுக்கு காரணமாகிறது..!

அதாவது ஒரு மாதத்திற்கு குறைந்த பட்சம் 11 முறையாவது உடலுறுவு கொள்ளலாம்; அது தம்பதியருக்கிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் உடலுறவு கொள்கையில் அவர்களுக்கென்று தனிப்பட்ட நேரம் ஒதுக்குகையில், தம்பதிகள் மனம் விட்டு பேசிக்கொள்ளவும் இயலும்; இவ்வாறு இருவரும் பேசிக்கொள்கையில், தங்களுக்குள்ள மனக்கசப்புகளை, சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும் இயலும்..!

தம்பதியர் உடலளவில் இணைந்திருப்பதும் மனதளவில் ஒத்திருப்பதும் மிகவும் அவசியம். எனவே, தம்பதியர் ஒருவரையொருவர், உடலளவில் மகிழ்ச்சியாகவும் திருப்தியுடனும் வைத்திருப்பது நல்லது. 

எனவே, தம்பதிகள் உடலுறவு மற்றும் காதலை சரியாக பகிர்ந்து புரிந்து வாழ்ந்தால், அது அன்றாட வாழ்வில் நடக்கும், நடக்கவிருக்கும் பிரச்சனைகளை தடுத்து இன்பமயமான வாழ்வைக் கொடுக்கும்..!

வாரத்திற்கு குறைந்தது 3 நாட்களும், மாதத்திற்கு 11 நாட்களும் என்பது மிகக் குறைந்தபட்ச எண்ணிக்கையே. ஆகையால், தம்பதியர் தங்களுக்கென நேரம் ஒதுக்கி, பேசி மகிழ்ந்தும், உடலுறவு கொண்டு உடலை மறந்தும் வாழ முயற்சி செய்ய வேண்டும்..! இது வாழ்வை சண்டை சச்சரவுகள் இல்லாமல் வளமாக்க உதவும்..! 

உங்களுக்கு துணையின் மீது ஏதேனும் கோபம் தோன்றினாலும், அதை இவ்வாறு காட்டி, இவ்வகையில் சண்டையிட்டுக் கொள்ளலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon