Link copied!
Sign in / Sign up
1
Shares

தம்பதியர் ஒன்றாய் வீட்டுவேலை செய்வது உடலுறவிற்கு நல்லதா?

திருமணம் என்ற உறவில் இணைந்த தம்பதிகள் வாழ்நாள் முழுதும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, ஒருவர் மற்றவரை மகிழ்வித்து, இன்பமயமாக வாழ வேண்டும். தம்பதியர்கள் நல்ல நண்பர்களைப்போல், எல்லாவற்றையும் பகிர்ந்து வாழ வேண்டும்; இவ்வகையில் தம்பதிகள் வீட்டில், ஒன்றாக சேர்ந்து வேலை செய்வது அவர்களின் உறவில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அப்படி என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..!

ஆய்வு

சமீபத்திய ஆய்வில், வீட்டு வேலைகளை சேர்ந்தோ பகிர்ந்தோ செய்யும் தம்பதியர் மத்தியில் உடலுறவு மிகவும் சிறந்து காணப்படுகிறது; அவர்கள் முழுமையாக வாழ்க்கையில் மற்றும் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என கண்டறியப்பட்டது. வேலைகளை பகிர்ந்து கொள்ளாத (அ) சேர்ந்து செய்யாத தம்பதிகள், உடலுறவு சார்ந்த உள்ளுணர்வு குறைவாகவே கொண்டுள்ளனர், என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மன நிறைவு

தங்கள் வீட்டு வேலைகளை துணையுடன் சேர்ந்து செய்யும் ஆண்கள் திருப்தியான, மன நிறைவான உடலுறவில் ஈடுபடுகிறார்கள், உணர்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காதல் 

வேலைகளில் ஈடுபட உறுதுணையாக ஆண்கள் இருப்பது, பெண்களின் மனதில் காதல் அதிகரிக்கவும், உறவில், உடலுறவில் பிணைப்பை ஏற்படுத்தவும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

அன்யோன்யம் 

ஒன்றாக சேர்ந்து வீட்டு வேலைகளில் ஈடுபடும் போது, உங்களுக்குள் கோபம் குறையும், முன்னர் நடந்த கசப்பான நினைவுகள் மறையும், அன்யோன்யம் அதிகரிக்கும்; இவையனைத்தும் தம்பதியருக்கிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும்.

புரிதல் 

ஒன்றாக சேர்ந்து வேலை செய்வதால், வீட்டில் மனைவியின் பணிச்சுமை என்ன, மனைவி எவ்வளவு வேலை செய்கிறாள் என்பதை கணவரால் உணர முடிகிறது; இது தம்பதியரிடையே சரியான புரிதலை ஏற்படுத்துகிறது.

முக்கியத்துவம்

மேலும், இவ்வாறு ஒன்றாக சேர்ந்து வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, உடலுறவில் மற்றும் திருமண உறவில் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. இவ்விஷயங்கள் தம்பதியர் உறவில் அதிக பிணைப்பை ஏற்படுத்துகின்றன, இதனாலே தான் உடலுறவிலும் தம்பதிகளிடையே ஈடுபாடு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon