Link copied!
Sign in / Sign up
10
Shares

தள்ளிப்போகும் மாதவிடாயை சீராக்க உதவும் 7 வழிகள்!

பெண்களில் பலர் மாதவிடாய் சரியாக நடைபெறாத காரணத்தால், அதிகம் மன வருத்தத்திற்கு, அழுத்தத்திற்கும் உள்ளாகிறார்கள்; இந்த பிரச்சனையால், கருத்தரிப்பில் ஏதேனும் குறை ஏற்படுமோ என்று எண்ணியும் பயம் கொள்கின்றனர். பெண்களின் இந்த பிரச்சனையை தீர்த்து, அவர்களின் பயத்தை போக்க இந்த பதிப்பை அளிக்கிறோம். படித்து பயனடையவும்..!

மாதவிடாய்!

மாதவிடாய் சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒரு முறை பெண்களில் நடைபெறும். ஆனால் ஆரோக்கியமற்ற புகைப்பிடித்தல், வாழ்க்கை முறை, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, மது அருந்துதல்,  தேவையில்லாமல் மருந்துகள் உட்கொள்வது போன்றவை மாதவிடாய் சுழற்சிக்கு பெரும் தடையை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறு தாமதமாக மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால், சில சமயங்களில் உங்களுக்கு அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரத்தப் போக்கு ஏற்படுவதோடு, கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். இம்மாதிரி ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்து, தாமதமான மாதவிடாயை சரிசெய்ய உதவும் உணவுகள் குறித்து படித்தறியுங்கள்..!

மாதவிடாய் சுழற்சியை சீராக்க!

சோம்பு!

சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, தினசரியாக காலையில், அந்த நீரை வெற்று வயிற்றில் குடித்து வந்தால், மாதவிடாய் சுழற்சியானது சரியாகி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். 

காய்கறிகள் 

தினசரி உணவு உட்கொள்கையில், அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகளை, கீரைகள், கத்திரிக்காய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை சீரான மாதவிடாய் சுழற்சியை நடைபெறச்செய்யும்.

நட்ஸ் 

நட்ஸில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமுள்ளதால், இது மாதவிடாய் சுழற்சியை சீராக நடைபெறச்செய்து, ஹார்மோன்களின் செயல்பாட்டையும் சீராக வைக்கிறது.

எள் 

இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பதை சற்று அதிகரித்து, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். 

சோயா பால் 

இது சாப்பிட்டாலும், மாதவிடாய் சுழற்சி தவறாமல் நடைபெறும்.

முட்டை

முட்டையை வேக வைத்து சாப்பிட்டால், அதிலுள்ள புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் மாதவிடாயில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

திராட்சை ஜூஸ்

தினசரி, ஒரு டம்ளர் சிவப்பு அல்லது பச்சை நிற திராட்சை ஜூஸை குடித்து வந்தால், மாதவிடாய் சுழற்சியை சீராக்கலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon