Link copied!
Sign in / Sign up
0
Shares

தலைவலி ஏற்படுத்தும் 3 விஷயங்கள்..!

நம்மில் பலருக்கு அடிக்கடி தலைவலி உண்டாகலாம். இதற்கு பலர் மாத்திரைகளின் உதவியை நாடி, நிவாரணம் தேடுவதுண்டு; சிலரோ உறக்கத்தின் மூலம் நிவாரணம் பெற முயற்சிப்பர். என்ன காரணம் என்றே தெரியாமல் ஏற்படும் தலைவலியை எப்படி போக்கிக் கொள்வது என்று யோசித்து யோசித்தே தலைவலி அதிகமாவதும் உண்டு. ஆகையால், தலைவலியை ஏற்படுத்தும் உடற்செயலிய நிகழ்வுகளை பற்றி, இந்த பதிப்பில் படித்தறிவோம்...

1. நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் சமநிலையற்ற நிலை..

செரோடினின், டோபமைன், GABA போன்றவை மூளையிலுள்ள நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள் ஆகும். இவையே மூளையின் செய்தித் தூதர்கள். இந்த ட்ரான்ஸ்மிட்டர்கள் குறைந்த அளவில் இருந்தால், 'மைக்ரைன்' எனும் தலைவலி ஏற்படுகிறது; மேலும் இதனால், மனஅழுத்தம், கோபம், இதய பலவீனம், பலவீன எண்ணங்கள் ஆகியவை ஏற்படலாம். அமினோ அமிலங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம், இந்த ட்ரான்ஸ்மிட்டர்களின் அளவை அதிகரிக்கலாம்.

2. ஹார்மோன் சமநிலையற்ற நிலை..

மாதவிடாய் அல்லது ஏதேனும் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கையில், தலைவலி ஏற்பட்டு பெண்களை வருத்துகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டெரோன் ஹார்மோன்கள் குறைவாக இருந்தாலும், அதிகம் இருந்தாலும் தலைவலி ஏற்படும். இந்த பிரச்சனைக்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுமுன் DUTCH பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இந்த பரிசோதனையின் முடிவுகளால், மருத்துவரால், சரியான மாத்திரைகளை வழங்க முடியும்.

3. கல்லீரல் சமநிலையற்ற நிலை..

நறுமண சென்ட்டின் வாசத்தை நுகர்ந்தாலோ அல்லது வேறு ஏதேனும் வாசத்தாலோ தலைவலி ஏற்பட்டால் அதற்கு கல்லீரலின் சமநிலையற்ற நிலையே காரணம். இதில் இரண்டு படிகள் உள்ளன. படி 1ல் படி 2ற்கான டாக்ஸின்கள் தயார் செய்யப்படுகின்றன. இவ்வாறு தயார் செய்கையில் இந்த டாக்ஸின்கள் அதிக விஷத் தன்மை கொண்டதாய் மாறிவிட்டால், படி 2ல் இவற்றை சரிவர சமாளிக்க இயலாமல், உடல் முழுவதும் இவை பரவிவிடும். ஆகையால், வாசனைகள் விரும்பத்தகாததாக இருந்தால், தலைவலி ஏற்படலாம். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon