Link copied!
Sign in / Sign up
3
Shares

தலைமுடி பிரச்சனைக்கு திராட்சை தீர்வா?

இன்று பலருக்கும் தலைமுடி தொடர்பான பிரச்சனையுள்ளது. நீங்கள் உங்களது கூந்தலை மிருதுவாகவும், முடிப்பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் ஏதேனும் வழியுள்ளதா என யோசித்தால் உங்களுக்கு ஏதேனும் விடை கிடைக்கிறதா? கடைகளில் விற்கும் பலவித எண்ணெய்களை ஷாம்புக்களை கண்ணைக் கவரும் விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தி, தலைமுடி பிரச்சனைக்கு இயற்கை முறையில் தீர்வே இல்லையென நம்மை எண்ண வைத்து, அவற்றையே நம்மை உபயோகிக்கவும் வைத்து விடுகின்றனர்.

அப்படி தலைமுடி பிரச்சனைக்கான ஒரு எளிய இயற்கை தீர்வு குறித்து இப்பதிப்பில் படித்தறிவோம்..!

திராட்சை விதை எண்ணெய்..!

தலைமுடி பிரச்சனைக்கு ஒரு மிகச்சிறந்த தீர்வு திராட்சை விதை எண்ணெய்; ஏனெனில் இந்த எண்ணெய் முடிக்கு மிகவும் நல்லது; கூந்தல் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க உதவியாகவுள்ளது. திராட்சையின் விதைகளிலிருந்து எடுக்கப்படுவது தான், இந்த திராட்சைவிதை எண்ணெயாகும். 

சத்துக்கள்..!

இதில் அதிகளவு கொழுப்பு அமிலங்கள், அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது. இவ்வெண்ணெய் முடியை மிருதுவாக்க உதவுகிறது; அதிக வாசனையுள்ள எண்ணெய்களில் வேதிப்பொருட்கள் கலந்திருக்கும். நீங்கள் அவற்றை பயன்படுத்தினால் உங்கள் முடி சேதமடையலாம்.

குணநலன்கள் மற்றும் பயன்கள்..!

தேங்காய் எண்ணெய்யைப்போல, திராட்சை விதை எண்ணெய் குளிர்காலத்தில் உறைந்துவிடாது. இது அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்றது; இது கூந்தலில் அதிக எண்ணெய்ப்பசையை ஏற்படுத்தாது.

இது முடிக்கு உயிரூட்டம் தர இயற்கை வழியில் உதவும். இதிலுள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலம், உங்களது முடி வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. திராட்சை விதை எண்ணெய் உங்கள் வேர்க் கால்களை சுத்தம் செய்கிறது.

இது முடிஉதிர்வை தடுத்து, புதிய முடிகளை வளர வைக்கிறது; உடலில் நோய்யெதிர்ப்பு சக்தி குறைவால் உண்டாகும் முடிஉதிர்வை சரிசெய்து, புதிய முடிகள் வளர உதவுகிறது.

உங்களுக்கு பொடுகுத்தொல்லை இருந்தால், தலையில் அரிப்பு, முடி உதிர்வு, முகத்தில் பருக்கள் போன்றவை உண்டாகும். இந்த எண்ணெய்யானது பொடுகுத்தொல்லையை முற்றிலும் ஒழிக்க உதவுகிறது.

திராட்சை விதை எண்ணெய்யை தனியாகவோ அல்லது வேறு எண்ணெய்களுடன் கலந்தோ உபயோகிக்கலாம்; சூடு ஏற்றி பயன்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும். இதனுடன் கலந்து உபயோகிக்க லெவண்டர், டீ ட்ரீ எண்ணெய் இரண்டும் நல்ல ஒரு கலவையாகும்; இந்த எண்ணெய்யை தலையிலிட்டு 2 நிமிடங்கள் அல்லது அதற்கு மேலாக மசாஜ் செய்யவேண்டும். 1/2 மணிநேரம் தலையில் ஊற விட்டு, தலைமுடியை கழுவிவிட வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon