Link copied!
Sign in / Sign up
0
Shares

தல-தளபதி நமக்கு உணர்த்தும் வாழ்க்கை பாடங்கள்

தமிழ்நாட்டில் தல மற்றும் தளபதியை தெரியாதவர்கள் என யாரும் இருக்க முடியாது. இருவரின் திறமையையும் ரசிக்காதவர்களும் கிடையாது. இவரிடமிருந்து நடனம், ஸ்டைல் மற்றும் நடிப்பு போன்றவற்றை கற்றுக் கொண்டிருப்போம். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், இவர்களை தனித்தனியாய் பார்க்கும் ரசிகர்கள் தான் அதிகம்.

பெரும்பாலும் நாம் நடிகர்களின் நடிப்பை திரையில் பார்த்து அவற்றை ரசித்திருப்போம். சிலவற்றை பின்பற்றவும் செய்திருப்போம். ஆனால், இவர்கள் இருவரும் குடும்ப வாழ்க்கையிலும் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்கள். அவர்கள் குடும்ப வாழ்க்கையில் செய்பவையும், உங்களுக்கு வழங்கும் அறிவுரையையும் பார்ப்போம்.

1 விஜய் :

சுற்றுலா

வருடத்திற்கு ஒரு முறையாவது மனைவி சங்கீதா மற்றும் மகன் சஞ்சய் உடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அங்கு, மகன் சஞ்சயின் விருப்படி பல இடங்களை சுற்றி பார்ப்பதும் வழக்கம்.

அறிவுரை : வேலை என்பது அவசியம் தான். ஆனால், குறைந்த நேரமாவது குடும்பத்துடன் செலவிட வேண்டியது உங்கள் கடமை. முடிந்தவரை திட்டமிட்டு சுற்றுலா செல்வது, வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது போன்றவற்றை செய்யுங்கள்.

அம்மா

படப்பிடிப்பின் காரணமாக எந்த இடத்திற்கு சென்றிருந்தாலும், பிறந்தநாள் என்றால் அம்மாவுடன் தான் என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பவர் விஜய். அவரது எல்லா பிறந்தநாளின் போதும் இதை தவறாமல் தொடர்ந்து செய்துவருகிறார். அந்த நாள் முழுவதையும் அம்மாவுடன் செலவிடுவார்.

அறிவுரை : அம்மா இல்லை என்றால் நம் வாழ்வில்லை. பிறப்பிற்கு காரணமான அம்மா உடன் பிறந்தநாள் கொண்டாடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அன்றைய தினம் அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதை போல், நீங்களும் அவர்களை மகிழ்ச்சியை வைத்து ஆசீர்வாதங்களை பெற வேண்டும்.

உணவு

உணவுகளில் விஜய் மிகவும் விரும்புவது அசைவம் தான். பெரும்பாலும் அம்மாவின் சமையலை விரும்பி சாப்பிடுவாராம். அதிலும், அம்மா சமைத்த அசைவம் என்றால், உணவு கட்டுப்பாடு ஏதுமின்றி வழக்கத்திற்கு அதிகமாக சாப்பிடுவாராம்.

அறிவுரை : என்ன தான் வெளியிடங்களில் சாப்பிட்டாலும், வீட்டில் சாப்பிடும் உணவை போல் வராது. உணவில் உள்ள குறையை சுட்டிக் காட்டும் நமக்கு நன்றாக இருக்கும் போது அதை பாராட்ட தோன்றுவதில்லை. அவர்கள் நமக்காக அன்புடன் செய்தது நன்றாக இருந்தால், மறக்காமல் பாராட்டுங்கள்.

2 அஜித்
செல்லமாய் கூப்பிடுவது

மனைவியிடம் மரியாதையாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அஜித் ஒரு சிறந்த உதாரணம். தனது மனைவியை பெயர் சொல்லி அழைப்பதை விட செல்லமாய் டார்லிங் என்று அழைப்பதையே விரும்புவாராம். வெளியில் செல்லும் போது மனைவியை கட்டியணைத்து விட்டு தான் செல்வாராம்.

அறிவுரை : கணவரிடம் மனைவிகள் எதிர்பார்ப்பது சின்ன சின்ன விஷயங்களை தான். அவற்றை நிவர்த்தி செய்து விட்டாலே வீட்டில் பிரச்சனைகள் குறையும். மனைவியை அன்போடும், மரியாதையோடும் நடத்துங்கள்.

குழப்பமின்மை

அஜித் தனது வேலைகளை பற்றி வீட்டிலோ அல்லது வீட்டை பற்றி வேலை நேரத்திலோ சிந்திப்பதில்லை. இரட்டையும் சரியாக திட்டமிட்டு கவனம் செலுத்துவதில் திறமை வாய்ந்தவர். வெற்றி தோல்வியை பெரிதாக எடுத்து கொள்ளும் குணம் இல்லாதவர்.

அறிவுரை : ஆண்கள் வீட்டு வேலையையும், அலுவலக வேலையையும் குழப்பிக் கொள்வதாலேயே பெரும்பாலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவற்றை சரியாக செய்ய துவங்கி விட்டாலே போதும் பிரச்சனைகள் சரியாகி விடும்.

வீடு

அஜித் தனது பழைய வீட்டை முழுவதும் இடித்துவிட்டு, புதிய தொழில்நுட்பத்துடன் மாற்றியமைத்துள்ளார். அவர் மனைவி குழந்தைகளின் வசதிக்காக அனைத்தையும் செய்துள்ளார். இப்போது அவர் புதுப்பித்துள்ள வீட்டில் கூட, ஷாலினிக்கு தனியாக ஒரு உள்ளரங்க கோர்ட் மற்றும் நடனம் பயிலும் தனது மகளுக்கு தனி டான்ஸ் ஃப்ளோர் அமைத்து கொடுத்துள்ளார் அஜித்.

அறிவுரை : நீங்கள் அதற்காக புது வீடு வாங்கி தர வேண்டும் என்றில்லை. அவர்களின் விருப்பத்திற்காக சிலவற்றை செய்தாலே போதும். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon