Link copied!
Sign in / Sign up
16
Shares

தாயான பிறகும் தாயிடமிருந்து கேட்க விருப்பும் 5 விஷயங்கள்

உங்களுக்கு திருமணம் ஆனாலும், நீங்கள் திருமண வாழ்விற்காக உலகின் மறுமுனைக்கே போனாலும், தான் கொண்ட அன்பிலிருந்து மாறாத ஒரு உறவு அம்மா எனும் உறவே. நீங்கள் ஒரு குழந்தைக்கே தாய் ஆனாலும், உங்கள் அம்மாவிற்கு நீங்களே குழந்தையாக தோன்றுவீர்கள். ஆயிரம் உறவுகள் உடனிருந்தாலும், அம்மாவின் அன்பிற்காக மட்டுமே எப்போதும் ஏங்குவீர்கள்.  நீங்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் அம்மாவை பற்றி நினைக்காமல் இருக்கமாட்டீர்கள். உங்கள் அம்மாவை பிரிந்திருப்பதாக தோன்றினாலோ அல்லது உங்கள் அம்மாவுடன் நீங்கள் இருந்த நாட்களை நினைவுபடுத்த எண்ணினாலோ, இதோ உங்கள் அம்மாவினால் உங்களிடம் கேட்கப்படும் சில விஷயங்கள்.

1 சாப்பிட்டாயா?

அதிகப்படியான நேரங்களில், நீங்கள் உங்கள் மேசையில் உணவு உண்பதற்கு அம்மா மட்டுமே காரணமாக இருக்க முடியும். அவர்கள் வீட்டில் பசியுடன் இருக்கும் இரண்டு குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவது, அவர்களின் கணவருக்கு உணவளிப்பது என அனைத்தையும் செய்வார்கள். அவர்கள் தான் உடல் ஆரோக்கியத்தையும் மறந்து வீட்டிற்கு வேண்டிய அனைத்தையும் செய்வார்கள். நீங்க எப்போது உங்கள் அம்மாவிடம் அலைபேசியில் பேசினாலும், அவரிடம் இருந்து கேட்கப்படும் கேள்விகள் ஒன்று சாப்பிட்டாயா? என்பதுதான். இது நாளடைவில் பழகி, வெகு நாட்களுக்கு பிறகு உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் ஒன்று.

2 இன்றைய நாள் எப்படி இருந்தது

இந்த கேள்விக்கு, அன்றைய நாள் முழுதும் நீங்கள் சந்தித்த சந்தோசம், சோகம் மற்றும் கோபம் என அனைத்தையும் மிகவும் நம்பிக்கைக்குரியவரான உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்வீர்கள். உங்களை பற்றி சரியாய் கணித்து, மதிப்பிட்டு, உங்கள் முடிவுகளை நிர்ணயிக்க உங்கள் அம்மாவினால் மட்டுமே முடியும். உங்களுடைய சிறிய பிரச்சனைகளுக்கும் கூட, உங்களுக்கென மனதளவில் சிந்தித்து, உங்களுக்கு நன்மை மட்டுமே செய்ய எண்ணி, உங்களுக்கு அறிவுரை வழங்கும் ஒரு நல்ல உள்ளம் உங்கள் அம்மாவினுடையது.

3 எப்போது வீட்டுக்கு வருவாய்

நீங்கள் உங்கள் அம்மாவுடன் இருக்கும் போது, அவர்கள் உங்கள் வரவை எதிர்பார்த்திருப்பார்கள். நீங்கள் உங்கள் வீட்டிற்கு வரும் வேளை தவறினால், உங்களிடம் கேட்கப்படும் கேள்விதான் எப்போ வீட்டுக்கு வருவாய் என்பது. சில நேரங்களில் உங்களுக்கு சூடாக இரவு உணவு பரிமாற வேண்டும் என்பதற்காகவும் கேட்பார்கள்.

திருமணத்தின் பின்னும் கூட அதே நிலைதான், என்ன நீங்க அவர்களுடன் இல்லாததால் உங்கள் வரவை எதிர்ப்பது நாட்களை எண்ணிக்கொண்டிருப்பார்கள். உங்களை மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற ஆவலிலும் கேட்கப்படும். என்னதான் உங்கள் கணவர் மற்றும் குழந்தை என இருந்தாலும், உங்கள் அம்மாவிடம் பேசும்போது, உங்களுக்காக உங்கள் வீட்டில் ஒருவர் காத்திருப்பதாக உணர்வீர்கள்.

4 நான் உன்னை நினைத்து பெருமையடைகிறேன்

இந்த வார்த்தையை நீங்கள் உங்கள் அலுவலகத்திலோ, உங்கள் கணவரிடமோ அல்லது வேறு யாரிடமோ பல முறை கேட்டிருக்கலாம், ஆனால் அதை உங்கள் அம்மாவிடம் இருந்து கேட்கும் போது அது ஒரு மதிப்பிட முடியாத மகிழ்ச்சியை கொடுக்கும். அது நீங்கள் செய்த அனைத்து வேலைகளுக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டதாக உணர செய்யும். உங்கள் நாள் மிக மோசமானதாக இருந்தாலும், இந்த வார்த்தையை உங்கள் அம்மாவிடமிருந்து கேட்ட பிறகு, உங்களுக்குள் ஒரு நம்பிக்கை கிடைக்கும்.

5 நான் உன்னை நேசிக்கிறேன்

இதை உங்கள் அம்மா உங்களிடம் சொன்னதும், இந்த உலகில் உங்களை நேசிக்க எந்த உயிரும் தேவையில்லை என்பதை போல் உணர்வீர்கள். நீங்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும், தகுதியற்றவராகவோ இருந்தாலும், உங்கள் அம்மாவினால் நேசிக்கப்படுவீர்கள். உங்களுக்கு இடமளிக்க அந்த வீடு எப்போதும் காத்திருக்கும். உங்கள் சம்பாத்திய பணமோ அல்லது உங்களது சாதனைகளோ அவர்களுக்கு முக்கியமன்று, அவர்கள் விரும்புவது உங்கள் அருகமையையே. இந்த வார்த்தையை விட வேறு ஏதும் உங்களை வசதியாக உணர செய்யாது.

இதை வாசித்த பின் நீங்களும் இதை உணர்தல், உடனே உங்கள் அலைபேசியை எடுத்து உங்கள் அம்மாவிற்கு அழையுங்கள். உங்கள் அம்மாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். உங்களுக்கென யோசிக்கும் உங்கள் அம்மாவுடன் பேசவோ அல்லது சந்திக்கவோ நேரம் ஒதுக்குங்கள். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon