Link copied!
Sign in / Sign up
18
Shares

தையல்-1: உங்கள் ஜாக்கெட்டை நீங்களே தைப்பது எப்படி?

பெண்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை அனைத்துவித கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்; இல்லத்தரசியோ அல்லது வேலைக்குச் செல்லும் பெண்மணியோ எவராயினும் கற்றிருக்க வேண்டிய சில முக்கிய கலைகள் உள்ளன. அப்படிப்பட்ட முக்கியமான கலைகளுள் ஒன்று தான் தையல்..! தையற்கலை என்பது அணைத்து பெண்டிரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று; ஏனெனில் தற்காலத்தில் நாம் சம்பாதிக்கும் அனைத்து பணத்தில் பெரும்பகுதி,  தையலுக்கு தான் செல்கிறது; இதுவே உண்மை நிலை.

பெண்கள் மட்டும் தையற்கலையைக் கற்றுக் கொண்டால், அவர்களின் ஓய்வு நேரத்தில், தமக்குத் தேவையான ஆடைகளை தாங்களே, தங்களுக்கு பிடித்த விதத்தில் தைத்துக் கொள்ளலாம்; இவ்வாறு செய்வதால், பணத்தை நன்கு சேமிக்கலாம், உங்கள் தையல் திறனும் மேம்படும். மேலும் துணிகளில் ஏதேனும் கிழிசல்கள் ஏற்பட்டுவிட்டால், அதைத் தைக்க உங்களால் இயலும்; அவசரமான நேரத்தில் கிழிசலை சரி செய்ய தையற்கடையை தேடி அலைய வேண்டிய அவசியமில்லை; மேலும் அதற்கென செய்யப்படும் செலவுகளும் குறையும்..!

கர்ப்பிணிகள் குழந்தைகளுக்கான ஸ்வெட்டர் மற்றும் ஆடைகளை தன் கையால் செய்து அவர்களுக்கு அணிவிக்கும் பொழுது, அது கர்ப்பிணி பெண்களை குழந்தைகளுடன் மேலும் இணைக்கிறது; தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கான ஆடைகளை தாங்களே வடிவமைக்கலாம். மேலும் கணவருக்கான ஆடைகளை அழகாய் வடிவமைத்து, அவரின் மனதைக் கவரலாம்; மேலும் வீட்டிலுள்ளோரின் மனதைக் கவர, உங்கள் தையற்கலையை உபயோகிக்கலாம்..!!

அப்படிப்பட்ட தையற்கலையை எளிதில் கற்கும் வகையில், காணொளி வடிவிலான பதிப்பை வழங்குகிறோம்..! படித்து பார்த்து தையல் நிபுணராக வாழ்த்துக்கள்..!!

 

Video Credits: Sew with Shama youtube channel

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon