Link copied!
Sign in / Sign up
16
Shares

தாய்ப்பாலூட்டும் பெண்களின் கணவர்கள் செய்ய வேண்டிய 6 விஷயங்கள்..!

தாய்ப்பாலூட்டுவது என்பது சவாலானது. என்ன செய்ய வேண்டுமென்று அம்மா அறிந்தாலும், அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படலாம். தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு அப்பாக்கள் எவ்வாறு உதவலாம் என்பதுதான் இது. தாய் மற்றும் குழந்தை இருவரும் வசதியாக இருப்பதை உறுதி செய்யக்கூடிய சில வழிகள் உள்ளன, இவை குழந்தைக்கு ஒழுங்காக உணவளிக்க உதவுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதில் அப்பாக்கள் அம்மாவுக்கு எப்படி உதவலாம் என்ற 6 வழிகள் இங்கே தரப்பட்டுள்ளது.

1. தலையணையை சரி செய்தல்

குழந்தைக்கு உணவளிக்கையில், தாய்மார்கள் பொதுவாக தலையணையை பயன்படுத்திகிறார்கள், இதன்மூலம் அவர்கள் ஒழுங்காக உணவளிக்க முடிகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தலையணையை சரி செய்வது எளிதான ஒன்றாக இருக்கலாம், ஆனால் குழந்தை கையில் இருக்கும்போது தலையணையை தேடுவதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஒரே நேரத்தில் இரண்டு வேலையை கவனிப்பது அவர்களுக்கு சிரமமானது. அப்பா தலையணையை சரியாக ஏற்பாடு செய்யலாம், அம்மா மற்றும் குழந்தை வசதியாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

2. பால்குடித்த பின் ஏப்பம் விடுவதை உறுதிசெய்தல்

குழந்தை சாப்பிட்டு முடித்தபின் ஏப்பம் விடுவது அவர்களை உற்சாகப்படுத்தும். அம்மா பாலூட்டியபின் களைப்பாக இருக்கும்போது அப்பா குழந்தையின் முதுகை இதமாக மசாஜ் செய்து அவர்களின் உணவு செரிக்க உதவிசெய்யலாம்.

3. பாலூட்டுவதை உற்சாகப்படுத்துங்கள்

சில உற்சாகப்படுத்தும் வார்த்தைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைக்கு ஆரம்ப காலத்தில் தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது. ஒருவேளை வேறுமுறைகளை பயன்படுத்தாமல் தாய்ப்பால் கொடுக்க உங்கள் மனைவி முடிவெடுத்திருந்தால், அவரின் முடிவுக்காக அவர்களை பாராட்டுங்கள். இது அவர்களை உற்சாகப்படுத்தும், மேலும் தாய்ப்பால் கொடுப்பதில் இருக்கும் சவால்களையும் சமாளிக்க உதவும்.

4. சில வேலைகளை செய்யுங்கள்

தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாக்கள் மிகவும் சோர்வடைகிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்கள் எப்பொழுதும் தூக்கமின்றி இருப்பார்கள். அவர்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்க சில வீட்டு வேலைகளை செய்ய முயற்சி செய்யுங்கள், துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் உதவுங்கள். உங்கள் மனைவி இதை கவனித்து நிச்சயம் உங்களை பாராட்டுவார்கள்.

5. இரவுகளில் விழித்திருத்தல்

உங்களின் தொடர்ச்சியான வேலைகளின் காரணமாக இதனை தினமும் செய்ய இயலாது, ஆனால் முடிந்தவரை இரவுகளில் பால்கொடுக்கும்போது அவருடன் விழித்திருக்க முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு குடிக்க தண்ணீரோ, போர்த்திக்கொள்ள போர்வையோ, அல்லது பேச்சுத்துணையாக இருக்கவோ நீங்கள் தேவைப்படலாம். ( இல்லையெனில் அவர்களை தூங்க வைத்துவிட்டு குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கலாம்). உங்களின் இதுபோன்ற உதவிகள் சில கடுமையான இரவுகளை எளிதாக கடக்க இருவருக்கும் உதவும்.

6. ஒன்றாய் கற்கவும்..

தாய்ப்பால் கொடுப்பது எளிதான ஒன்றாக தெரியலாம், ஆனால் இது மிகவும் கடினமான ஒன்று. ஒருவேளை அது உங்களின் முதல் குழந்தையாக இருந்தால், இதுபற்றி இருவரும் சில தகவல்களை அறிந்திருப்பது அவசியம். கர்ப்பமாக இருந்தபோது அந்த உடற்பயிற்சிக் வகுப்புகள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தன என்பதை நினைவில் வையுங்கள்? ஆமாம், அது வேடிக்கையானதாக இருக்கும், நீங்கள் கற்பனை செய்து கொண்டதை விட மிகவும் எளிதாக தாய்ப்பாலூட்டுவதை பற்றி முழுமையான செயல்முறையை உங்களுக்கு அறிய உதவும். மேலும், இது மேலும் குடும்பத்தில் பிணைப்பை உருவாக்க உதவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon