Link copied!
Sign in / Sign up
14
Shares

தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்பதை தாய் அறிவது எப்படி?

இன்றைய சூழலில் பெற்ற குழந்தையை தூக்கவே பயப்படும் நபராக இளம் தாய்மார்கள் விளங்குகின்றனர்; மேலும் இன்றைய இளம் தாய்மார்களுக்கு குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கொடுத்தோமா? குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைத்ததா? என்று அறிவது எப்படி என்று தெரிவதில்லை. இத்தகைய சூழலில் இளம் தாய்மார்களுக்கு உதவும் வகையில் இப்பதிப்பை அளிக்கிறோம்..! இந்த பதிப்பில் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்பதை அறியும் முறைகளை அளித்துள்ளோம்., படித்துப் பயனடையவும்..!

தாய்ப்பால் - குழந்தை!

குழந்தை தாய்ப்பால் குடிக்கையில், மார்ப்பகத்தில் தொடர்ந்து உறிஞ்சிக் கொண்டிருக்கும்; இவ்வாறு தொடர்ந்து உறிஞ்சுவதால், தாய்ப்பால் சுரப்பு அதிகரித்து குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்கிறது.

குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைத்தால் அதனை முழுங்கும்; குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைத்து விட்டது என குழந்தையின் தாடை அசைவை வைத்து, பாலை குழந்தை முழுங்குகிறதா இல்லையா என கண்டு அறியலாம்.

தாடை அசைவு இல்லையெனில் குழந்தை பாலை விழுங்கவில்லை என்று பொருள்; குழந்தை பாலை தொடர்ந்து உறிஞ்சிக்கொண்டே இருந்தால், இதனால், ஏற்படும் சோர்விலேயே, பல நேரங்களில் குழந்தை பால் குடிக்காமலேயே உறங்கிவிடும். எனவே, குழந்தைக்கு பால் கொடுக்கும் போது, குழந்தையின் அசைவுகளை தாய் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

1 மணி நேரம் 

குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடித்திருந்தால், குழந்தை நன்கு உற்சாகமாக இருக்கும்; குழந்தை எப்பொழுதும் சோர்வுடன் இருந்தால், அதற்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று பொருள்.

தாய்ப்பால் குடித்த 1 மணி நேரம் நேரத்தில், குழந்தை பசிதாங்காமல் அழுதால், அதற்கு தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கவில்லை என்பதை தாய் புரிந்து கொள்ள வேண்டும்.

கவனிப்பு..!

குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதை, மலத்தின் நிறத்தை தொடர்ந்து கண்காணிதுக் கொண்டே வேண்டும். குழந்தை பிறந்த முதல் நாள் மலம் கருப்பு நிறத்திலும், பின்பு இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் பச்சை நிறத்திலும், நான்காம் நாள் அல்லது ஐந்தாம் நாட்களில் மலம் மஞ்சள் நிறத்திலும் வெளியாகும்; குழந்தையின் மலம் மற்றும் அதன் நிறம் குழந்தை உட்கொள்ளும் உணவைப் பொறுத்தே அமையும்!

உடல் எடை 

குழந்தை பிறந்த தருணத்தில் இருந்த எடையை விட, பிறந்த ஒருவாரத்தில் 5-7% குழந்தையின் எடை குறையும்; இதுவே 10% சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தால், குழந்தைக்கு போதுமான அளவு உணவு கிடைக்கவில்லை என்று பொருள். குழந்தை பிறந்த முதல் 10 நாட்கள் மட்டுமே இந்த எடை மாறுபாடு காணப்படும்; பின் எந்தவித எடை குறைபாடும் காணப்படாது.

மார்பகம்

குழந்தைக்கு பால் கொடுத்தற்கு முன்னும் பின்னும் உங்கள் மார்பகத்தை நன்கு கவனியுங்கள்; குழந்தை பால் குடிப்பதற்கு முன் மார்பகம் அதிக பாரம் கொண்டதாகவும், விறைப்பாகவும் இருக்கும்; குழந்தை சரியாக, நன்கு பால் குடித்த பின்னர், மார்பகம் இலேசாக மாறிவிடும்.

தூங்கும் போது

சில குழந்தைகள் தூங்கும் நேரத்தில் மட்டும் பால் குடிக்க எண்ணினால், அவர்களுக்கு சரியான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று அர்த்தம்; பகலில் மற்றும் பிற நேரங்களில் அவர்களுக்கு போதுமான அளவு பால் கிடைக்கவில்லை என்பதை தாய்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இடைவேளி 

குழந்தை பசிக்காக, பாலுக்காக அடிக்கடி அழுதால், பால் கொடுத்த ஒரு மணி நேரத்திற்குள் என குறுகிய கால இடைவெளியில் குழந்தை அழுதால், குழந்தைக்கு பால் போதவில்லை என்று பொருள்.

குழந்தைக்கு பால் போதவில்லை என்ற குறையை போல, குழந்தைக்கு பால் அதிகமாக அளித்துவிட்டால், என்ன செய்வது என்று தாய் பயப்பட தேவையில்லை; மார்பகத்தில் இருந்து உறிஞ்சிக் குடிக்கும் போது, குழந்தை தனக்கு தேவையான அளவு மட்டுமே பால் குடிக்கும்; பாட்டிலில் பால் குடித்தால் மட்டுமே அதிகமான பாலை குழந்தை குடிக்க வாய்ப்புள்ளது..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon