Link copied!
Sign in / Sign up
5
Shares

தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு 10 குறிப்புகள்!

உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்கான சிறந்த வழி தாய்ப்பால் ஆகும். குழந்தையின் சிறந்த வளர்ச்சிக்கு ஒரு வயது வரை தாய்ப்பாலூட்ட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. தாய்ப்பாலூட்டுவது உங்களுக்கு புதிது என்பதால், அதை எளிதாக்க உங்களுக்கான சில குறிப்புகள்.

1) இது வலி மிகுந்தது:

ஆரம்பத்தில் இது வலி நிறைந்ததாக இருக்கும். உங்கள் மார்புக்கு பால் சுரந்து பழக்கமில்லை; மேலும், உங்கள் குழந்தைக்கு பால் குடித்து பழக்கமில்லை. ஆதலால் முதல் இரண்டு வாரங்களுக்கு இது கடினமாக இருக்கும். பின்பு வலி குறைந்துவிடும்.

2) அறிகுறிகளை கவனிக்க வேண்டும்:

ஆரம்பத்தில், குறைந்த இடைவெளியில் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். ஏனென்றால், நீண்ட நேரம் பசியமர்த்தும் அளவிற்க்கு உங்களுக்கு பால் சுரப்பு இருக்காது. உங்கள் குழந்தை அதன் உதடுகளை அடிக்கடி சப்பினாலோ அல்லது விரலை வாயில் வைத்தாலோ, அவர்கள் பசியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். குழந்தை அழும் வரை காத்திருக்க வேண்டாம்.

3) குழந்தை திருப்தியடைந்து விட்டதா?

உங்கள் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது? அதற்கான முதல் அறிகுறி குழந்தையின் உடல் எடை அதிகரிப்பு. ஒவ்வொரு வாரமும் உங்கள் குழந்தையின் எடை சிறிதளவேனும் கூடினால், குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கிறதென்று அர்த்தம். இதற்கான மற்றொரு அறிகுறி, குழந்தை அடிக்கடி மலம் கழித்தல்.

4) பால் சுரப்பு அதிகரிப்பு:

நாங்கள் முன்பு கூறியது போல், உங்கள் மார்பகங்களுக்கு பால் சுரந்து பழக்கமில்லை. இதனால் ஆரம்பத்தில் பால் சுரப்பு குறைவாக இருக்கும். நீங்கள் தாய்ப்பால் கொடுக்க கொடுக்க பால் சுரப்பு அதிகரிக்கும். இதனால் உங்கள் குழந்தை விரைவாக பசியாறிவிடும்.

5) பால் மட்டுமே உணவு:

முதல் ஆறு மாதங்களுக்கு உங்கள் குழந்தைக்கு கிடைக்கக்கூடிய ஒரே உணவு பொருள் பால் மட்டுமே. குழந்தையின் வாழ்நாள் முழுவதும் உதவிபுரியும் ஆன்டி பாடிஸ் மற்றும் நோயெதிர்ப்பு திறன் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. ஆறு மாதங்களுக்கு பிறகு மருத்துவரின் அறிவுரைபடி பாலுடன் சேர்த்து மற்ற உணவு பொருட்களை கொடுக்கலாம்.

6) உங்களை முதலில் கவனித்துக்கொள்ள வேண்டும்:

நீங்கள் நன்றாக சாப்பிட்டால் தான் பால் சுரக்கும். உங்கள் மார்பு வீங்கி வலி நிறைந்ததாக இருந்தால் ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து மார்பில் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் பால் சுரப்பு சீராக இருக்கும். மேலும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

7) வேலைக்கு செல்லும் தாயாக இருந்தால்:

நீங்கள் பிரசவத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், தாய்ப்பாலை பம்ப் செய்து பாட்டிலில் சேமித்து வைக்கலாம். பிரிட்ஜில் வைத்தால் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். நேரடியாக பாலை சூடு பண்ணவோ அல்லது பாட்டிலை சுடுநீரில் வைக்கவோ கூடாது.

8) மார்பு காம்புகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்:

சில நேரங்களில் மார்பு காம்புகளை சுற்றியுள்ள சருமம் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு, ரத்தக்கசிவு கூட ஏற்படலாம். ஆயின்மென்ட் தடவ விருப்பமில்லை என்றால் ஆலிவ் எண்ணெய் தடவலாம். அல்லது தாய்ப்பாலை பயன்படுத்தலாம்.

9) ஆலோசகர்:

குழந்தை பிறந்த பின்பு நீங்கள் அவர்களை கவனித்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அல்லது சந்தேகம் தோன்றினால், தொடர்புகொள்ள உங்கள் ஆலோசகரின் எண்ணை கையில் வைத்துக்கொள்வது நல்லது.

10) பொது இடத்தில் பால் கொடுத்தல்:

இறுதியாக பொது இடத்தில் நீங்கள் தாராளமாக பால் கொடுக்கலாம். எந்த காரணத்தை கொண்டும் நீங்கள் இதை செய்யாமல் இருக்க கூடாது. ஒரு மெல்லிய போர்வை அல்லது துண்டை உங்கள் மீது போர்த்திக்கொண்டு குழந்தைக்கு பால் கொடுக்கலாம்.

இந்த குறிப்புகள் நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு உதவும் என நம்புகிறோம். வாழ்த்துக்கள்!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon