Link copied!
Sign in / Sign up
314
Shares

தாயின் கருவறையில் சிசு அடிக்கும் லூட்டிகள்..!!

தாயின் கருவறையில் பத்து மாதங்களாய் வளரும் குழந்தைகள் எப்பொழுதும் 24*7 என உறங்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்று எண்ணினால், நாம் நினைப்பது பெரிய தவறு ஆகும். பின் குழந்தைகள் தாயின் இருட்டு கருவறையில் என்ன செய்யும் என்று நீங்கள் எண்ணலாம்?! அவர்கள் அழுவர்களா? உணவு உண்பார்களா? இது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.    

உங்களின் இக்கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையிலே இப்பதிப்பினை சமர்ப்பிக்கிறோம். இந்த பதிப்பில் தாயின் கருவறையில் குழந்தைகள் என்னென்ன சேஷ்டைகளை புரிகின்றனர் என்பதை நீங்களே படித்தறியலாம்; புகைப்படங்களையும் காணொளியையும் கண்டும் அறியலாம்.

1. பயம்  

கருவறையில் உள்ள குழந்தைகள், தாயின் குரலை தவிர எந்தவொரு சப்தம் மிகுந்த ஒலியை கேட்க நேரிட்டாலும் அவர்கள் பயம் கொள்வர்.

2. விக்கல் 

கருவறையில் உள்ள குழந்தைகளுக்கும் விக்கல் எடுக்கும்; அப்படி கருவிற்கு விக்கல் ஏற்பட்டால், தாயின் வயிறு ஏறி இறங்குவதை பெண்களால் உணர முடியும்.

3. சுவைத்தல் 

தாய் உட்கொள்ளும் அத்தனை உணவு வகைகளையும், தொப்புள் வாயிலாக பெற்று குழந்தை சுவை பார்க்கிறது.

4. சிறுநீர் கழித்தல் 

ஆம்! குழந்தைகள் தாயின் கருவறையில் சிறுநீர் கழித்து, அந்நீரையே பருகுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5. அழுதல் 

குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதை நம்மால் கேட்க முடிகிறது; ஆனால், அவர்கள் தாயின் வயிற்றிலேயே அழுகின்றனர், அதை நம்மால் செவியுற இயலாது.

6. கேட்டல் 

குழந்தைகள் என்னதான் முழுமையாய் வளர்ச்சியடையாத செவிகளை பெற்றிருந்தாலும், தன் தாயின் இதயத்துடிப்பு மற்றும் தாயின் குரலை கருவில் உள்ள குழந்தையால் கேட்க இயலும்.

7. பார்த்தல் 

குழந்தைகளின் பார்வை பிறந்த 1 வயதில் தான் முழுமையான வளர்ச்சியை பெறும்; இருப்பினும் கருவறையில் வளரும் குழந்தையால் மிகவும் பிரகாசமான ஒளியை உணர முடியும். கருவின் கண் 26-28 வாரங்களில் திறக்கப்பட்டு, குழந்தை பார்க்க முயலும்.

8. அடக்குதல் 

கருவிலுள்ள குழந்தை தனக்கு வரும் மலத்தினை இருக்காமல் அடக்கி வைத்துக்கொண்டே இருக்கும்; பிறந்தவுடன் தான் முதன்முதலாக குழந்தை மலம் கழிக்கும்; அந்த மலத்தில் முடி, தோல், புரதம், WBC போன்றவை வெளியேறி காணப்படும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon