Link copied!
Sign in / Sign up
11
Shares

தாயான பின் ஏற்படும் தொப்பையைக் குறைக்க உதவும் பத்திய சாப்பாடு!

திருமணமான இளம் பெண்களுக்கு, கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்று எடுப்பது என்பது, பெண்ணுக்கு அளவற்ற பூரிப்பையும், மகிழ்ச்சியையும் தரும் வாழ்வின் மறக்க முடியாத முக்கிய தருணமாக இருக்கும். தான் பெற்றெடுத்த குழந்தைக்கு பாலூட்டும் போது, சுற்றத்தாரின் வாழ்த்துக்களில், உறவினர் மனநிறைவினில், தாய்மையின் பரவசத்தில், உள்ளம் நெகிழ்ந்துபோய், உடல் பெருக்க ஆரம்பிப்பாள், இளம் அன்னை.

இந்த நிலை தரும் உற்சாகத்தில், கர்ப்ப காலத்தில் நீங்கள் தவிர்த்த உணவுகளையெல்லாம், மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் உள்ளத்தில் பொங்கும். இம்மாதிரி ஆர்வத்தில், பூரிப்பில் கூடிவிட்ட எடையை குறைக்க உதவும் பத்திய சாப்பாடு மற்றும் பத்திய பொடி வகைகளை பற்றி இப்பதிப்பில் படித்தறிவோம்..! 

பத்திய சாப்பாடு 

பெண்களுக்கு பிரசவமான பின், பத்திய சாப்பாடு என சில மாதங்களுக்கு, வெந்தயக்களி, உளுந்து சாதம், உளுந்தங்கஞ்சி போன்ற பத்திய சாப்பாட்டை, சாப்பிட வைப்பார்கள். இதனை முறையாக சாப்பிட்டு வந்தாலே, உடல் எடை கூடாது, உடலும் நன்கு தெம்பாக இருந்திருக்கும். 

பத்திய பொடிகள்..!

அங்காயப்பொடி 

நாம் சிற்றுண்டிக்குத் தயார் செய்யும் இட்லி பொடியைப் போல, இந்த பொடியை செய்வதும் எளிமையானது. இது பிரசவித்த பெண்களின் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. 

தேவையானவை!

கொத்தமல்லி - 100 கிராம், மிளகு, சீரகம் - தலா 25 கிராம், வேப்பம்பூ - 50 கிராம், சுக்குப்பொடி -10 கிராம், சுண்டைக்காய் வற்றல் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 10 கிராம், கறிவேப்பலை சிறிதளவு, பால்பெருங்காயம் - 10 கிராம், இந்துப்பு சிறிது. 

செய்முறை!

1. வாணலியில் மிதமான சூட்டில், வேப்பம் பூ, கொத்தமல்லி, சுண்டைக்காய் வற்றல் போன்றவற்றை தனித்தனியே வறுத்து வைக்கவும் 

2. பின்பு எல்லாவற்றைவும் ஒன்றாய் வறுத்து, இக்கலவை ஆறிய பின், உப்பு சேர்த்து பொடியாக்கினால், அவ்வளவு தான்; அங்காயப் பொடி, தயார்! 

பயன்கள் 

இந்த பொடி, வயிற்றிலுள்ள நச்சுக்களை அழித்து, உடலை சுத்தப்படுத்தி உடலினை வலுவாக்கும்; மேலும் இது உடலில் தேங்கியுள்ள கொழுப்பு சத்துக்களைக் கரைத்து, உடலை மெல்லிசாக மாற்றும்; இப்பொடியை தினசரி, மதிய சாதத்தில் கலந்து, நெய் ஊற்றி பிசைந்து, சாப்பிட்டு வர வேண்டும். இப்பொடி,  உடலை மெலிய வைத்து, சருமத்தை பொலிவடைய வைக்கும். 

கறிவேப்பிலை பொடி 

பிள்ளை பெற்று தளர்ந்த உடலைத் தேற்றி, வலிமையாக்க, கறிவேப்பிலைப் பொடி பெரிதும் உதவும்.  

தேவையானவை!

கறிவேப்பிலை இலைகள் - இரு கைப்பிடி அளவு, உளுத்தம் பருப்பு - 10 கிராம், மிளகு, சீரகம் - தலா 25 கிராம், காய்ந்த மிளகாய் - 10 கிராம், பெருங்காயம் - 5 கிராம், புளி மற்றும் கடுகு - சிறிது, இந்துப்பு - தேவையான அளவு

செய்முறை!

வாணலியில் சிறிது எண்ணையை விட்டு, அதில் கறிவேப்பிலை உள்ளிட்ட எல்லாவற்றையும் நன்கு வறுத்து ஆறவைத்து, பொடியாக்கி, சாப்பாட்டில் பிசைந்து சாப்பிட, பிரசவித்ததால், உடல் தளர்ந்த பெண்களின் உடல் தசைகள் சீராகி, உடல் நன்கு வலுவாகும். 

பூண்டு, மிளகு பத்தியக் குழம்பு 

த்திய சாப்பாடு மற்றும் பொடிகளைப் போல, பத்தியக் குழம்பும் பெண்களின் உடலுக்கு தெம்பையும், மனதுக்கு அமைதியையும் அளிக்கும். 

செய்முறை!

1. சிறிதளவு புளியை நீரில் கரைத்து, கொத்தமல்லி, கருப்பு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, மிளகு போன்றவற்றை வறுத்து, பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்  

2. அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை, சீரகத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, இக்கலவையை புளி நீரில் இட்டு, நன்கு கரைத்துக் கொள்ளவும்  

3. எண்ணெயை வாணலியிலிட்டு, பூண்டுகளை வறுத்து, நீரினை ஊற்றி, நன்றாக வேக விடவும்; இது வெந்தபின், புளிநீரை அதில் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்

4. பூண்டு கரைந்தவுடன், கடுகை தாளித்து ஊற்றி, இறக்கி வைத்து, சற்று சூடு ஆறிய பின், குழம்பை சாதத்தில் ஊற்றி, நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்

இந்த குழம்பு செரிமான பாதிப்புகள், வயிறு மந்தம், வாயுத்தொல்லை, கெட்ட நச்சுக்கள் போன்றவற்றை சரிசெய்து, உடலை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும்.

பழங்களும் கீரைகளும் 

பிரசவித்த பெண்களின் உடல் எடையைக் குறைக்க, தினமும், கீரைகள், நார்ச்சத்துமிக்க தானியங்களை உணவில் சேர்த்து, ஆரஞ்சு போன்ற பழங்களையும் உண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்; மேலும் அதிக தண்ணீர் குடித்து வருவதும் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon