Link copied!
Sign in / Sign up
12
Shares

தாயான பின்னர் உங்களால் தவிர்க்கப்படும் 5 உறவுகள்

ஒவ்வொரு தனிமனிதனியும் இணைத்து, பிணைத்து ஒரு குடும்பமாக்கி, ஒரு நல்ல சமுதாயம் உருவாகக் காரணமாக இருப்பது உறவுகள். மனிதன் வாழ்வில் வளர்வதும், வாழ்வதும், உறவுகளாலே. உறவுகள் பல வகைகளில், பல நேரங்களில் உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்களுக்கு உதவுவது உங்கள் உறவுகளே! இத்தகைய உறவுகளை ஒரு பெண், தாயாகும் போது, சில உறவுகளை பின்னுக்குத் தள்ள நேரிடுகிறது. தாயாகும் போது பின்னுக்குத் தள்ளப்படும் உறவு முறைகள் பற்றி காணலாம்.  

1. நெருக்கமான உறவுகள்..!

ஒரு பெண் தாயான பிறகு, தன் குழந்தையை கவனிப்பதிலேயே 24 மணி நேரத்தினையும், அத்தனை நாள்களையும், மாதங்களையும், வருடங்களையும் செலவிடுகிறாள். அம்மாவின் வாழ்வே தன் குழந்தையாகிறது. குழந்தையை கவனிக்கும் அந்த தருணத்தில், உங்கள் கணவருடன் நெருக்கமாக இருக்கவோ அல்லது வேறு நபர்களை கவனிக்கவோ நேரமின்றி, தாயின் நெருக்கமான உறவுகளில் நெருடல் ஏற்பட்டு, அவை பின்னேறுகின்றன.

2. உணர்ச்சிப்பூர்வமான உறவுகள்..!

ஒரு பெண் தன் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த்த்தும் ஒரே நபர், அவள் கணவர். ஆனால், குழந்தை பிறந்தவுடன், பெண் தன் கணவரிடம் பேசும் தருணமோ அல்லது தன உணர்ச்சிகளைப் பார்க்கும் தருணமோ மிகவும் குறைந்துவிடுகிறது. தாயானபின், தன்னுடைய உணர்வுப்பூர்வ உறவுகளை பின் தள்ளுகிறாள் தாய்.

3. தொழில்முறை உறவுகள்..!

வேலைக்குச் செல்லும் பெண்ணாயினும், வீட்டில் இருக்கும் பெண்ணாயினும் தனக்கு என சில தொழில்முறை உறவுகளை வாழ்வில் கொண்டிருப்பர். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உடன் பணி புரிகிறவர்களும், வீட்டிலிருக்கும் பெண்ணிற்கு பக்கத்து விட்டுப் பெண்கள், கோவில் தோழிகள், மார்க்கெட் வாடிக்கைக் கடைத் தோழிகள் என பல விதங்களில் நண்பர்களைக் கொண்டிருப்பர். ஆனால், அனைத்து நட்பையும், நண்பர்களையும் குழந்தையை கவனிக்கும் நோக்கில், பின்னுக்குத் தள்ளுகிறாள் தாய்..

4. தனக்கே சொந்தம்..!!

ஒவ்வொரு பெண்ணும் தனக்கென ஒரு குழந்தை பிறந்தவுடன், குழந்தை மீது அதீத அன்பு கொள்கிறாள். இந்த அன்பு, உறவினர்களில் யாரேனும் குழந்தை கருப்பாக இருக்கிறது, ஒல்லியாக இருக்கிறது என உங்களுக்கு பிடிக்காத வண்ணம் கருத்து தெரிவித்தால், அவர்களை ஒதுக்கத் தூண்டும் உங்கள் அதீத தாய்ப்பாசம். இதனால், உங்கள் இந்த உணர்வால், சில உறவுகள் பின்னேறுகின்றன.

5. சமூக உறவுகள்..!

பெண்கள் தங்களுக்கென இருக்கும் சில தோழிகள், அதாவது கடைக்குச் செல்கையில் உடன் வரும் தோழிகள், ஏதேனும் கூட்டங்களில் நீங்கள் சந்திக்கும் பெண்மணிகள்வ- என நீங்கள் கொண்டிருக்கும் சமூக உறவுகளையும், குழந்தை கவனிப்பால், உங்களுக்கே தெரியாமல் இழந்து நிற்கின்றீர், பெண்களே! தாய்மார்களே…!

முடிந்தவரை உங்கள் உறவுகளை இழக்காமல், உங்கள் வாழ்க்கையை, உங்கள் குழந்தையை வாழ, வளர்க்கப் பழகிக் கொள்ளுங்கள், பெண்களே…! எல்லாப் பெண்களும் தங்கள் வாழ்வில், இவற்றைப் போன்று, பலப்பல உறவுகளை இழக்கிறாள்.., தன குடும்பத்திற்காக, தன் குழந்தைக்காக..! போற்றுவோம் தாய்மையை..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon