Link copied!
Sign in / Sign up
0
Shares

தாருங்கள் தாயே! சத்தான உணவை...

ஒவ்வொரு தாய்மார்களின் மிகப்பெரிய ஆசை என்னவென்றால், தன் மகன் திடமாக வளர வேண்டும் என்பதே. அதற்கு திடமான பொருள்களே அவசியம் என்பதை அறிந்து செயல்படுவது மிக நல்லது. ஆம், தாய்ப்பால் தரும் காலங்களில் இந்த திண்ம பொருள்களை தேவையான அளவிற்கு துணை பொருளாக நீங்கள் தரலாம். இன்றைய காலக்கட்டத்தில் தான் குழந்தைகள் என்னும் பிஞ்சுகள் மிக விரைவில் பழுத்துவிடுகிறது. அதன் விளைவு, அம்மா,அப்பா லேப்டாப்பை எடுத்து ஆன் செய்து பாஸ்வேர்ட் என்ன என கேட்கும் அளவிற்கு குழந்தைகளின் சுறுசுறுப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

அப்படி இருக்க, குழந்தைகள் தேடும் திட பொருளின் மாதமாக 3 இல் தொடங்கி 7 வரையிலும் காணப்படுகிறது. இருப்பினும், இம்மாதங்கள் கட்டாயமாக ஒருபோதும் பரிந்துரை செய்யப்படுவதும் அல்ல. தாய்ப்பால் தரும் மாதங்களில் திட பொருளை கம்மியாக சாப்பிடுகிறான் என நீங்கள் திட்ட வேண்டிய அவசியம் ஏற்படுவதுமில்லை. இந்த உலகத்தில் எவ்வளவு சத்துள்ள உணவுகள் கிடைத்தாலும் அது தாய்ப்பாலுக்கு ஈடாகுமா என்ன?

ஆனாலும், உங்கள் குழந்தை திடப்பொருளை உண்ண தயாராகிவிட்டான் என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டும் நீங்கள் அறிந்திடலாம்.

தாகம் குறைதல்:

எப்போதும் உங்கள் மார்பகத்தை விடாமல் பற்ற துடிக்கும் குழந்தை, திடீரென முரண்டு பிடித்து பால் வடியும் முகத்துடன் காணப்பட தொடங்கும்.

தலை தூக்கி பார்க்கும்:

பசியால் வாடிய செல்ல மகன், அவ்வப்போது அழகாக தலையை தூக்கி எட்டி பார்ப்பான். அப்படி என்றால், அக்குழந்தை திட பொருளை திடமான மனதுடன் சாப்பிட ஆசைப்படுகிறான் என அர்த்தம்.

நாவை மணம் கமழ செய்வான்:

நீங்கள் சாப்பிடும் போது, வெளிவரும் புதிய வாசனைக்கு புதுமை பித்தனாக மாற ஆசைப்படுவான். உங்கள் இதழ்களை உற்று நோக்க கற்பனையாலே உங்களிடமிருந்து உணவை பிடுங்கி திங்க முயல்வான். அப்படி என்றால், 'அம்மா! இதன் வாசனை மிகவும் அருமை. எனக்கும் ஓர் உருண்டை தாருங்கள்...' என அவன் கேட்கிறான் என அர்த்தமாகும்.

வீட்டில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவு:

1. உணவு முறையில் ஒரு சில விஷயங்கள் நாம் நன்றாக வேக வைக்கும் போது சத்துக்களற்று போவதுண்டு. ஆகையால், சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க முயல்வது நல்லது.

2. கிழங்கு, கிழங்குப் பயிர் வகை, கேரட், கீரை வகைகளை தவிர்ப்பது நல்லது. சில நாடுகளில் இந்த காய்கறிகளில் நைட்ரேட் அதிகம் காணப்படுவதால், இரத்த சோகை உண்டாக வாய்ப்பிருக்கிறது.

3. ஒரு வயதுக்கும் குறைவாக இருக்கும் குழந்தைக்கு... முட்டையின் வெள்ளை கரு, பசும்பால், தேன் ஆகியவை தராமல் தவிர்த்திடலாம்.

4. அமிலத்தன்மை அடங்கிய பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை உங்கள் குழந்தைகள் கண்ணில் காட்டாமல் தவிர்ப்பது நல்லது.

உணவே மருந்து என்பார்கள். அதனால், நாளைய நாள் காணப்போகும் உங்கள் குழந்தைக்கு டாக்டரின் ஆலோசனைப்படி நல்ல உணவை தருவதன் மூலம் பிற்காலத்தில் மருந்தை உணவாய் உங்கள் குழந்தை சாப்பிடுவதை தவிர்க்கலாம். மருந்து என்பது மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ஒருவருக்காக கண்டுபிடிக்கப்பட்டதே. ஆனால், இன்று ஒரு சிறிய தலைவலி வந்தாலும் உடனே மாத்திரை பையை நாம் தேட தொடங்கிவிட்டோம். இதன் விளைவோ என்னமோ, ஒரு சிலருக்கு இதையே பழக்கம் ஆக்கிக்கொள்ளும் அவல நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.

ஏதோ மன அழுத்த குறைவால் தலைவலி, காய்ச்சல் உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கும் மருந்து எடுப்பது என்ன நியாயம்... அந்த மாதிரி சூழ் நிலைகளில் எதனால் இந்த தலைவலி உண்டானது என யோசித்து செயல்பட்டால், நாளைபொழுதிற்கு நல்ல ஒரு இடம் தேடி அமைதியடைவோமே தவிர, தொட்டதுக்கெல்லாம் மருந்தை தேடி ஓட மாட்டோம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon