Link copied!
Sign in / Sign up
16
Shares

தாம்பத்தியத்தை நிறுத்தினால் ஏற்படும் 7 மாற்றங்கள்

பொதுவாகவே குறிப்பிட்ட வயதிற்கு பின் ஆண், பெண் இருபாலருக்கும் தாம்பத்தியத்தை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். உடலுறவு என்பது காமமும், காதலும் சேர்ந்த கலவையாகும். தாம்பத்தியத்தில் பல நன்மைகளும் உள்ளடங்கி இருக்கிறது. தற்போது பல கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்படவும் காரணமாக இருப்பதும் தாம்பத்யமே. என்ன தான் உறவில் விரிசல் ஏற்பட காரணமாக இருந்தாலும், அன்பையும்  அன்யோன்யத்தையும் அதிகரிக்கிறது.

புதுமண தம்பதிகள் தாம்பத்தியத்தில் அதிகம் ஈடுபடுவார்கள். ஆனால், குழந்தை பிறந்ததும் படிப்படியாக குறைந்து குறிப்பிட்ட வயதில் முற்றிலும் இல்லாமல் போய்விடும். பெரும்பாலும் பெண்களுக்கு 40 வயதை கடந்தவுடன் உடலுறவில் நாட்டமின்றி போய்விடும், ஆனால், ஆண்களுக்கு 60 வயதிற்கு மேலும் இதில் ஈடுபாடு இருந்து கொண்டே இருக்கும். தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை முற்றிலும் நிறுத்தினாலும் மாற்றங்கள் ஏற்படும். இங்கு அவை என்னென்ன மாற்றங்கள் என்று பார்க்கலாம்.

1 நோய்

உடலுறவு கொள்வதை நிறுத்தும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும். இதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படக் கூடும். ஆகவே இப்பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், அடிக்கடி உடலுறவில் ஈடுபட வேண்டும்.

2 மன அழுத்தம்

பல மாதங்கள் உடலுறவு கொள்ளாமல் இருந்தால், மன அழுத்தத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும். பொதுவாக உடலுறவில் ஈடுபடும் போது, மனதை அமைதியடையச் செய்யும் மற்றும் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் ஹார்மோன்கள் வெளியிடப்படும். ஆனால் இதை முற்றிலும் தவிர்க்கும் போது, அடிக்கடி கோபம் போன்றவை ஏற்பட்டு மனநிலை மோசமாகும்.

3 பாலியல் பிரச்சனைகள்

பல மாதங்கள் உடலுறவில் ஈடுபடாமல் இருக்கும் போது, பாலியல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக முன்கூட்டியே விந்து வெளிவரும் பிரச்சனை போன்றவை ஏற்படும்.

4 கனவு

உடலுறவு கொள்வதை ஒருவர் முற்றிலும் தவிர்க்கும் போது, அவருக்கு உடலுறவு சார்ந்த கனவுகள் அல்லது தூக்கத்திலேயே விந்து வெளியேறுதல் போன்றவை ஏற்படும். மேலும் உடல் ஒரு மாதிரி முறுக்குவதைப் போன்றே இருக்கும்.

5 ஈர்ப்பு

தம்பதிகளுள் ஒருவர் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் போது, இன்னொருவர் வேறொருவரால் ஈர்க்கப்பட்டு, இறுதியில் அது தம்பதிகளின் பிரிவிற்கு வழிவகுத்துவிடும். எனவே ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று.

6 புற்றுநோய்

உடலுறவில் ஈடுபடுவது ஒரு ஆண் முற்றிலும் தவிர்க்கும் போது, அந்த ஆணுக்கு புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கும்.

7 நன்மை

உடலுறவு கொள்ளாமல் இருப்பதால் கிடைக்கும் ஒரே நன்மை, பாலியல் நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும். அதாவது பெண்களுக்கு யோனியில் ஏற்படும் தொற்றுநோய் வாய்ப்புகள் குறையும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon